இராஜகோபாலஸ்வாமி ஆரத்தி (வடநாட்டு பாணியில்) ஆரத்தி இராஜ இராஜா! திருமன்னையின் மன்னா! திருமாமகள் ப்ரியனே திருமாலே! தாயாளா! ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி மணிவண்ணா! மனம் பறித்திடும் கண்ணா! மந்தங்கள் தெளிவிப்பாய் மலர் மார்பனே , வாராய் ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி செம்பகேசா! செண்பகாரண்ய நாதா! செங்கழல் பணிந்தோமே செங்கதிர் முகத்தோனே! ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி வாசுதேவா! வாழ்வின் பொருளும் நீயே! வானவர் போற்று மமுதே வாமன மூர்த்தி (ஸ்ரீ ) ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி ஆயர்கொழுந்தே! ஆண்டிடும் ஐயனே ஆணவம் தீர்த்தருள்வாய் ஆயர் குலத்தின் அழகே ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி இடைமகனே! இன்னல் தீர்த்திடும் இறைவா! இசைத்தமிழ் கேட்டிடுவாய் இணையொன்றுனக்கு உண்டோ? ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி நந்தலாலா! நலம் அளித்திடும் ஒளியே நனிவாய் நகைத்தருள்வாய் நடமிடும் நாரணா! ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி கோபாலா! கோலேந்திய பாலா! கோயில் வந்தணைந்தோம் கோபாலபிரிய நாதா! ஆரத்தி ஏற்றருள்வாய்... ...
Posts
Showing posts from 2018
- Get link
- X
- Other Apps
மங்களமே கண்ணனுக்கு இராஜ கோபாலனுக்கு மங்களமே மன்னனுக்கு மந்திதொழும் மாயனுக்கு மங்களமே வீரனுக்கு செங்கமல மார்பனுக்கு மங்களமே கள்ளனுக்கு வெண்ணெய் பிரியனுக்கு மங்களமே அபயனுக்கு அரவனை துயிலனுக்கு மங்களமே இனியனுக்கு பார்கவியின் நாதனுக்கு மங்களமே மன்னையின் எழில்மிகு குழந்தைக்கு மங்களமே அன்பனுக்கு அல்லலில் காப்போனுக்கு மங்களமே குறும்பனுக்கு குருதியில் கலந்தோனுக்கு மங்களமே அழகனுக்கு குறுநகை குட்டனுக்கு மங்களமே ஆழ்வார்கள் செந்தமிழ் பிரியனுக்கு மங்களமே தேவர்சூழ் பரமபத நாதனுக்கு மங்களமே கரங்களில் கோல்கொண்ட இடையனுக்கு மங்களமே பாமா ருக்மிணியின் நாதனுக்கு மங்களமே கோபால பிரியனுயிர் தேவனுக்கு மங்களமே ஸ்ரீஇராஜ இராஜ கோபாலனுக்கு மங்களம் சுப மங்களம் மங்களம் சுப மங்களம் -ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
வெண்மதி மேலிருந்து கீழ்வர லாயிற்று வெந்தையிர் கடையும் ஓசையும் நின்றது வெம்மை தீர்ந்து குளிருமிங் காட்கொண்டது வெண்ணை உண்ட வாயனே தாலேலோ! வெண்சங்கு உடையோனே தாலேலோ! முனிகட்கு சேவை அருளிய தயாபாரா! முப்பது முக்கோடி தேவருமே உனக்கு முத்தோடு பொன்சேர்த்து தொட்டில் அளித்தனரே முகுந்தன் எனும் நாமமுடையா தாலேலோ! முழு முதற் பொருளே தாலேலோ! பாலும் சோறும் உண்டு களித்தாய் பாரில் லீலையும் செய்து மகிழ்ந்தாய் பாம்பின் மீதே ஆடி அயர்ந்தாய் பாலனே கண்வளர் தாலேலோ! பாவங்கள் துடைப் போனே தாலேலோ! கோபியர் கூறிய குறை யினாலே கோபாத்தால் உரலோடு கட்டி விட்டேன் கோபமாய் இராதே அன்னை மீது கோபாலா உறங்குவாய் தாலேலோ! கோபியர் சூழ்மன்னா தாலேலோ! மாடுகள் மேய்த்துநீ சோர்ந் திருப்பாய் மாமலை உயர்த்திநீ களைத் திருப்பாய் மாயங்கள் செய்துநீ அயர்ந் திருப்பாய் மாலே உறங்குவாய் தாலேலோ! மாசற்ற தூயமுதே தாலேலோ! குறும்புகள் செய்து நீ முடித்திருப்பாய் குறைகள் நாளையே செவிக ளெட்டும் குணமாய் செப்புவோர் சொல் கேட்டு குலமணியே கண்ணுறங்கு தாலேலோ! குழவியே கண்வளர் தாலேலோ! கோலங்கள் பலகாட்டி அயர்ந் திருபாய் கோவினமும் ச...
- Get link
- X
- Other Apps
மன்னையில் குழந்தை சிரிக்கிறது -அது மனதை கட்டி இழுக்கிறது மடிதனில் உருண்டு தவழ்கிறது - இனிய மழலை ததும்ப மொழிகிறது... அழகின் இலக்கணமாய் திகழ்கிறது - அது அகிலத்தை ஆட்டுவித்து நகைக்கிறது அரிய போக்கிஷமாய் ஜொலிக்கிறது - அதன் அன்பை அருளாக பொழிகிறது... நினைவை மறக்கச் செய்கிறது-அது நிலவை ஒத்து குளிர்கிறது நித்தமும் மாடு மெய்க்கிறது - என்றும் நிலுவையின்றி முக்தி அளிக்கிறது... வினைகளுக்கு காரணம் ஆகிறது - அது விஞானத்திற்கு அப்பால் நிலைக்கிறது விடியலாய் பலர்வாழ்வில் ஒளிர்கிறது- இங்கு விரல்களில் கோலை ஏற்கிறது... கோணலாய் நின்றே ஆள்கிறது- அது கோவாகக் கோவை மேய்க்கிறது! கோபால பிரியனின் மனத்தினுள்ளே- அது கோபாலனாய் நித்தம் ஒளிர்கிறது... - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
ஸ்ரீ இராஜகோபாலன் திருப்பள்ளியெழுச்சி செங்கதிரோன் கீழ்த்திசை வந்துதித்தான் செங்கமலம் நீர்நிலையில் அரும்பியதுகாண் செங்கமல வல்லியும் துயில் விடுத்தாள் செம்பொன் மேனியனே பள்ளி எழுந்தருள்வாய்.. புள்ளினத் தோசைகள் செவி மடுப்பாய் புள்ளினத் தரசனும் பணித் திருக்கிறான் புண்ணிய பலன் பல தந்தருள்வோனே புலர்ந்தது பொழுது பள்ளி எழுந்தருள்வாய்... வேழமும் பசுக்களும் வாயில் வந்தது வேதமும் ஓதத் தொடங்க லானது வேறொன்று மறியாத பக்தர்கள் கண்டு வேகமாய் பாலனே பள்ளி எழுந்தருள்வாய்... கலியும் அதன் போக்கு ஆடுவதுகாண் கள்ளங்கள் எவ்விடமும் சூழ லானது கபடங்கள் ஆழ்மனதில் பதிய லானது கன்றுகள் மேய்ப்பானே பள்ளி எழுந்தருள்வாய்.... பசும்பால் வெண்ணெயும் கொண்டு வந்தோம் பனைவெல்லமும் கற்கண்டும் முன்னே வைத்தோம் பலவகைக் கனிகளும் அடுக்கி வைத்தோம் பண்ணிசை கேட்டு பள்ளி எழுந்தருள்வாய்.... கோயில் மணியும் ஒலிக்க லானது கோமாதா உனை நோக்கி நிற்கலானது கோவிந்தா எனும் கோஷம் செவியுற்றே கோபிகை நாதனே பள்ளி எழுந்தருள்வாய்.... மஞ்சளும் துகிலும் ஏந்தி விற்பன்னர்கள் மந்திர ஒலிகளை சொல்ல லானர் மங்கைகள் உனை காண வ...
- Get link
- X
- Other Apps
யாதுமாகி நின்ற யாதவ குலத்தோனே! மாதுமாகி உன்மேல் மையல் கொள்வேனே! ஆணாக எனை நீ படைத்திருந்தாலு முனை தானாக வந்தடைய பெண்ணாக மாறுவனே! கண்ட பின்பு கண்கள்தம் இருப்பிடமே மறக்குதடா -- உனை (கண்ட பின்பு) கள்ளச் சிரிப்பு உள்ளத்தை இல்லாமல் ஆக்குதடா -உன் (கள்ளச் சிரிப்பு) செய்த செயல்கள் யாவுமே மறந்தே தொலையுதடா - முன்பு (செய்த) செவ்வாய் கனியினையே எண்ணிமனம் உருகுதடா - முகுந்தன் (செவ்வாய்) நிலை மறந்து சித்தம் பித்தாகி திரியுதடா - உன்னால் (நிலை மறந்து) நிறம் மறந்து விழியோ செங்கதிராய் சிவ...
- Get link
- X
- Other Apps
"காண மறந்தாயோ ப்ரியனே"! -எனக் காணாக் கண்களுக்கு காட்டுவித்த எங்கோவே! காலமெல்லாம் உன் திருவடியை கண்டு காதல் கொள்ளவைத்த காரணம் யாதோ?.. இனிய கானத்திலுள்ள பிரியமோ? இதழ் பேசுந் தமிழிலுள்ள மாயமோ? பலன் கேட்காத பக்தியோ? பந்தத்தால் உருவான சக்தியோ? பூர்வ ஜென்மத்தின் தொடற்சியோ? பூமார்பு மாமகளின் கிளர்ச்சியோ? கோபால நாமத்தின் மகிமையோ? கோவிந்த நாமத்தின் இனிமையோ? விளையாட்டின் தொடக்க முயற்சியோ? விருப்பத்தை விடுத்துவர பயிற்சியோ? கோபால பிரியனின் முனைப்போ? கோபாலா! உன்திருவடி அணைப்போ? - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
இனியமொழி கேட்டிடவே காலம் வந்தது பனிபோல துனிமறையும் நேரம் வந்தது ஆழ்வார்கள் அணிவகுக்கும் நிகழ்வு வந்தது வாழ்வோர்கள் மனதிலது இனிமை தந்தது திருமொழியும் வாய்மொழியும் செவி நிறைந்தது கருவுணர்த்தும் பாக்கள்யாவும் காற்றில் ஒலித்தது மாலோனின் மணிக்கழல்கள் ஆசைந்து வந்தது மாயத்தில் தவிப்போர்க்கு நல்லாறு வகுத்தது மத்த வெளியில் தமிழெல்லாம் உயர்வுபெற்றது சத்தியத்தின் நித்யஒளி இருள் மறைத்தது வைகுந்தவாசல் திறக்கும் நேரம் வந்தது வைகுந்த பதவியருளும் காலம் வந்தது தெந்துவாரகை விழாவில் திளைத்து நின்றது தென்னகமே தமிழ்சுவையில் மூழ்கி ருசித்தது மோகம்யாவும் விட்டொழிக்க காலம் வந்தது மோகினியாய் கண்ணன்வரும் நாளும் வந்தது கோமகனாய் கோமேய்க்கும் கோலம் காட்டவே கோபாலன் உளம்விரும்பும் நேரம் வந்தது கோபால பிரியனெந்தன் மனம் கொண்டாடும் கோபாலன் பகலிரவு பத்து நாளே!... ...
- Get link
- X
- Other Apps
ஏனைய்யா...... ? ஏனைய்யா எனை உன்னை நோக்கி ஏங்கும் படியாய் செய்கின்றாயே....? வீணைய்யா இந்த வாழ்க்கை பெருங்கடல் வீட்டினை அளித்தெனை அழைப்பாயோ...? உனையே எண்ணி உறுகிடும் என்னை உந்தன் நினைவில் நினைப்பாயா? இணையே இல்லா உன் திருவடியில் இளைப்பாரவே இடம் தருவாயோ?... முறையே உந்தன் இருப்பிடம் சேரும் முறையை எனக்குள் பெருக்கிடுவாயோ? இறையாய் நிற்கும் பரம்பொருளே என்பால் இரக்கங் கொண்டு இசைந்திடுவாயோ? அலைகள் சூழ்கரு மாணிக்கமே உன் அன்பை என்மேல் பொழிந்திடுவாயோ..? கலைக ளனைத்தும் கொண்டவனே இந்த கலியிலிருந் தெனை மீட்டெடுப்பாயோ? கோபியர் சூழிடைக் காவலனே அருங் கோவினத்தை சிறிது கண்டிடுவாயோ? கோபியர் மட்டுமே உனக்குறவா இது கோபால பிரியனின் மனகுறைவே.... - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
கண்ணில் ஒளியுருவே...கோபாலா ! கனித்த பேரறிவே...! பண்ணில் நிறைமதியே... கோபாலா! பனித்த உள்ளுணர்வே..! விண்ணில் கருமுகிலே....கோபாலா ! விளைந்த நெற்கதிரே...! உண்ணில் அருள்பவனே... கோபாலா! உறைந்த உயிர்பொருளே....! உன்பெயர் செவிமடுத்தால் எண்ணுள்ளம் துள்ளிக் குதிக்குதடா...! உனையே நினைந்திருந்தால் பித்துதான் ஊனில் கலக்குதடா...! அசைந்து வருகையிலே என்னிதையம் அசைவு மறக்குதடா...! அருகில் காண்கையிலே உள்ளந்தான் அமுதை ருசிக்குதடா...! கோவினம் மேய்த்து நிற்கும் கோபாலன் குழலிசையில் நாட்டம்! கோபாலன் நாமம் ஒன்றே கோபால பிரியனி னுயிரோட்டம்! - ர. ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
கரிய நிறத்தானவன் - எழில்மிகு அரிய முகத்தானவன் கனித்த மனத்தானவன் - பற்றிலா தனித்த உருவானவன் கண்ணில் தெரியாதவன் - மனத்தின் பண்ணில் ஒளியானவன் வினைகள் அறுப்பானவன் - உறுபெரும் சினைகள் தானானவன் கலைகள் எல்லாமவன் - இடரறு பலைகள் வடிவானவன் இணைகள் இல்லாதவன் - ஐம்பெருந் திணைகள் ஆனானவன். சனத்தில் அன்பானவன் - உயிர்களின் இனத்தில் உயர்வானவன். வேதத்தில் உறைவானவன் - ஒலிக்கின்ற நாதத்தில் கரைவானவன். பக்திக்கு பித்தானவன் - எட்டாத முக்திக்கு வித்தானவன். கோபாலப் ப்ரியநாதனாம் - திருமன்னை கோபாலன் கோபாலனே! - ஹரிசரண் பொருள்: பலை - இடர்படும் காலங்களில் ஜபிக்கக் கூடிய மந்திரம்
- Get link
- X
- Other Apps
ராஜ கோபாலா ராஜ கோபாலா! மன்னையில் உறை மாயனே ஓடி வருக கோபாலா !ராஜ கோபாலா! மாயங்கள் யாவையுமே அகற்றும் மாயனே! மாலை சூடி தந்த கோதையவள் கொஞ்சும் கள்ளனே! (ராஜ கோபாலா....) வினை யாவுஞ் செய்யுதற்கு மூல காரணா! விலை மதிப்பில்லா பக்தியையே நோக்கும் பூரணா! (ராஜ கோபாலா....) ஆய்ச்சிகளின் மனம் மயக்கும் மதுரமோஹனா! அயல் சிந்தனைகள் உட்புகாது தடுக்கும் நாரணா! (ராஜ கோபாலா....) சரணா கதியினிலே உருகும் மாதவா! சரண் பற்றினார்க்கு வினையறுக்கும் மன்னை மன்னவா! (ராஜ கோபாலா....) அடியாரின் மனத்திலுறை தீப...
- Get link
- X
- Other Apps
வந்ததே நன்னாள் வரமனைத்தும் பெறுநாள் வசுதேவர்க்கு மகனாய் அவன் அவதரிக்க வஞ்சனை யாவும் உருமறந் தோட (வந்ததே...) தேவகி மணிவயிற்றில் வந்து உதித்து தேனாய் தித்திக்கும் நகையதின் ஒளியால் (வந்ததே...) நாற்கரமும் ஆயுத மேந்தி இங்கே நாரணன் நம்பி வந்து தவழ்ந்ததால் (வந்ததே...) விண்ணிருந் திறங்கி மண்ணுலகு புகுந்து வியப்பில் ஆழ்த்தும் கண்ணனின் வரவால் (வந்ததே...) துவாபர யுகத்தினில் தர்மத்தை ஸ்தாபித்து துன்ப மனைத்தையும் தூசாக்க பிறந்ததால் (வந்ததே...) காலாக் கிரஹமும் புனிதம் எய்திட கார் நிறமேனியன் கவின்மிகு வரவால் ...
- Get link
- X
- Other Apps
குழந்தை யாகவே காண்கிறேன் குன்று உயர்த்தி நின்றாலும் - உனை குழந்தை யாகவே காண்கிறேன் அரக்கரை வதைத்து தர்மம் காத்திடினும் அரவு மீதடியை பதித்து ஆடிடினும் (குழந்தை.....) உலகத்தை படைத் தாட்சி புரிந்திடினும் உன்னத உணர்வாலே உலகோரை மயக்கிடினும் (குழந்தை.....) மன்னையில் மன்னன் போல் இருந்திடினும் மங்கையை திரு மார்பில் சுமந்திடினும் (குழந்தை.....) இருவரோடு கூடி விளை யாடிடினும் இம்மையும் மறுமையும் நீ ஆகிடினும் (குழந்தை.....) இராஐ மகுடம் நீ தரித்திடினும் இணையற்ற கீர்த்தி நீ பெற்றிடினும் (குழந்தை.....) வைகுந்த நாதனாய் நீ அருளிடினும் வையம் முழுதும் நீ அளந்திடினும் ...
- Get link
- X
- Other Apps
நின்றே அயர்ந் திருப்பாய் சிறிதேனும் அமர்ந் தருளய்யா - கோபாலா சிறிதேனும் அமர்ந் தருளய்யா! செங் கமலத்தில் அவளே வீற்றிருக்க செவ்வடி சிவக்க நிற்பது ஏனோ? (சிறிதேனும்....) அரங்கத்தில் முழுதும் ஓய்விலே இருப்பதால் அகிலத்தின் பொறுப்பை இங்கே சுமந்தாயோ? (சிறிதேனும்....) உன் கால்கள் நின்றி ருந்தால் என் நெஞ்சில் உதிரம் உறையுதே (சிறிதேனும்....) கண் முன்னே அமரா விடினும் கண் அயரும் பொழுதேனும் செவிமடுத்து (சிறிதேனும்....) வந்தவர் வாழ்வையே நீ கண்டால் வலிக்குமுன் அடிகளை யார் காண்பார் (சிறிதேனும்....) முத்துப் பவள நாற்காலியும் உனது முன்னே கொணர்ந்து நான் சேர்க்கிறேன் ...
- Get link
- X
- Other Apps
வாயுரைக்க வருகதில்லையே தாயே வாடிடும் மனம் அறிந்தாயோ? என்னவென் றுரைப்பது அம்மா எந்தன் உள்ளம் நிறைந்தாயடி ! மாலவன் மலர் கொடியே மாயமே நீயும் செய்தாய் மாற்றமாய் காட்சி தந்தாய் மாதவம் செய்திட்ட பலனளித்தாய்! நேரில் கண்டாற் போலே நேர்த்தியாய் கண்டேன் தாயே நேமியி லுதித்த நங்காய் நேயமாய் அருளி னாயே! மழலைக்கு தாய் போலே மண்ணுக்கு மழை போலே மன்னைக்கு அரசி யான மனத்திற்கு இனிய பாவாய்! கோபாலன் அரிய மனத்துள் கோலோச்சி நிற்கும் தேவி கோபால பிரிய னெந்தன் கோரிக்கை தீர்த்தாய் யடி! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
கோவர்த்தன மலை யுயர்த்தி கோபாலன் நின்ற கதை கோலா கலமாக கூறிடுவோமே ! வெண்ணெய் யுண்டு அவன் வெகுளியாய் நின்ற கதை வெல்லமாய் நாவினிக்க கூவிடுவோமே!.... புல்லாங் குழ லிசைத்து புருஷோத்தமன் நின்ற கதை புவியார் செவிபடவே பாடிடுவோமே! காளிங்கன் மீது அவன் கால்பதித்து நின்ற கதை காலை பொழுதினிலே இசைத்திடுவோமே! இடையன் கன்று களை இன்பமாக மேய்த்த கதை இறைவன் நாமத்தோடு இயம்பிடுவோமே! மன்னை வந்து அவன் மலர்மகளை மணந்த கதை மயக்கும் இசையாலே பாடிடுவோமே! தவ மியற்றும் யாவர்க்கும் தவப்பலனை யருளும் கதை தமிழில் சுவையோடு கூறிடுவோமே! கோபால பிரிய னெந்தன் கோபாலன் புண்ய கதை கோதை சொன்னபடி கூவிடுவோமே! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
மன்னார்குடி இராஜ கோபாலன் ஜ்யேஷ்டாபிஷேக வைபவம் . திருமேனி கண்டேன் பொன்மேனி கண்டேன் திருமஞ்சனத்தில் அவன் அழகுருவும் கண்டேன் கவசம் இலாச்சிறிய திருமேனி கண்டேன் கபடம் இலாச்செவ்வாய் மலரவும் கண்டேன் வெண்ணிற ஆடையவன் உடல்மறைக்கக் கண்டேன் வெம்மை தணிக்குமவன் நீராட்டம் கண்டேன் முண்டாசு அணியா கருங்கொண்டை கண்டேன் முற்பிறவி செய்துன்பம் அறுத்தெறியக் கண்டேன் காதணிகள் அற்ற திருசெவிகள் கண்டேன் காமம் அறுக்கும் திருவடிகள் கண்டேன் எண்ணெய் மேனியில் வழிந்திடக் கண்டேன் என்னை மயக்கும் பேரழகு கண்டேன் காவிரி அவன்மீது மகிழ்ந்தோட கண்டேன் காதலில் என்மனம் பித்தாகக் கண்டேன் கலசங்கள் நீர்சுரக்க மஞ்சனம் கண்டேன் கண்ணன் குளித்திடும் வைபவம் கண்டேன் பசும்பால் திருவடியில் பற்றுதற் கண்டேன் பல்லாண்டு அடியார்கள் பாடுவதைக் கண்டேன் வெந்தயிர் குளிர்விக்க உன்மேனி கண்டேன் வெண்குடை நிலைபெறும் உன்தர்மம் கண்டேன் இளநீர் இடையோரம் வழிந்தோடக் கண்டேன் இன்னல் தீர்க்கும் திருநயனம் கண்டேன் பஞ்சாமிர்த மேனியில் தேனொழுகக் கண்டேன் பஞ்சம் போக்கிடும் ஸ்ரீவத்ஸம் கண்டேன் முகம்தனில் மஞ்சள...
- Get link
- X
- Other Apps
இன்பமயம் என்றும் இன்பமயம் இராஜ கோபாலன் திருவே இன்பமயம் திருந்திய செவ்வடி இன்பமயம் திரு மாமகள் மார்பனும் இன்பமயம் (இன்பமயம்...) மாணிக்க விரல்களும் இன்பமயம் மாயன் நாமம் சொன்னால் தினம் இன்பமயம் (இன்பமயம்...) கோணக் கால்களும் இன்பமயம் கோ மேய்க்கும் அழகும் இன்பமயம் (இன்பமயம்...) பெருத்த கணுக்கால் இன்பமயம் பெறும் தரிசனம் யாவும் இன்பமயம் (இன்பமயம்...) காலிற் சலங்கையும் இன்பமயம் காமம் அறுத்திடும் அவன்நாமம் இன்பமயம் (இன்பமயம்...) மறைந்திரு முட்டியும் இன்பமயம் மறை தந்த ஞானமும் இன்பமயம் (இன்பமயம்...) ஏக வஸ்திரமும் இன்பமயம் ஏகாந்தத் திருக் கோலம் இன்பமயம் ...
- Get link
- X
- Other Apps
மந்தத்தை தெளியவை மாதவா! மங்கை மலர்மார்பா சிறிதேனும் மந்தத்தை தெளியவை மாதவா! மானுடத்தின் வழி சரியா? மாயனே வாய் திறவாயோ! மாயையில் சுழன்றிடும் வாழ்வை மாற்ற வல்ல திருதேவா! பிறப்பதன் முன் பற்றுண்டோ பிரிந்த பின்னும் பற்றுண்டோ பிறவியில் வந்திடும் பற்றின் பின்னால் அலைவது முறையோ? கவலையின் காரணம் பற்றறென கண்ணன் சொன்னதை சற்றே கருத்தோடு கேட்டால் சுகமே கவலை யின்றி வாழ்வோமே! செல்வம் சேர்ப்பது மடமை சென்றபின் னேது வளமை செவ்வடியை பற்றும் கடமை செகத்தில் வாழ்வோர் நிலைமை உணர்வின் றிறப்பது மூடம் உளமவனில் சேர்வதே உசிதம் உலகின் பற்றது பாரம் உணர்த்திடும் நான்மறை வேதம் கோபாலன் நாமமே அருமருந்து கோக்களாய் போற்றுவோம் அதைதெரிந்து கோபால பிரியனின் வழியறிந்து கோஷங்கள் எழுப்புவோம் தாழ்பணிந்து - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
கணமும் தொடர்கின்றாய் கருங்குழல் அழகனே! கருணை பொழின்கின்றாய் கார்மேனி குழந்தையே! அகத்திலும் புறத்திலும் நீக்கமற நிறைந்திரும் அரியே உங்கருணை கடந்தீர்ப்ப தெங்கனம்! விழியில் கண்டயாவும் உன்பார்வை சேருதே மொழியில் சொன்னயாவும் உன்மனதினில் பதியுதே எந்துன்பம் யாவும் உன்பணிகள் ஆகுதே எண்ணங்கள் யாவுமே உன்நாமம் கூறுதே விந்தையாவும் நிகழ்த்துகின்ற தென்துவாராகை மூர்த்தியே! விலையில்லா கருணைக்கு பக்திகொண்டு தீர்ப்பனே அடியார் மேலுனக்கு ஏனிப்படி கருணையோ அழியாப் புகழ்கொண்ட ஆயப் பிரானே சிறியேன் உன்லீலை புறிந்திலா அறிவிலி சிந்தையில் உனைத்தவிர வேறொன்றும் அறிந்திலேன் கோபால பிரியனை மேய்த்தருளும் ஆயனே கோபால நமங்கூறி உன்திருவடி சேர்வனே - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
இன்று ஆடி ஸ்வாதி , ஸ்ரீ கருடாழ்வார் திருநக்ஷத்ரம், பெரிய திருவடிக்கு பாமாலை சமர்ப்பணம். உனையன்றி சேவகனும் உண்டோ தனையே அர்பணித்த புள்ளரசே! மன்னையின் அரசனையே உந்தன் மகிமைமிகு தோள்களில் ஏந்தியவா! (உனையன்றி...) அமிர்த கலசத்தை கரத்திலேந்தி அண்டமாளும் நாயகனை தோளிலேந்தும் (உனையன்றி...) அரவுதனை ஆபரணமா யணிந்து அழகாய் விண்ணூரும் ஆழ்வானே! (உனையன்றி...) பரந்தாமன் திருவடியை தாங்கியே பரவசமுரும் பெரிய திருவடியே! (உனையன்றி...) விஷ்ணு சித்தனாகவே அவதரித்து வியத்தகு பல்லாண்டு படியவனே! (உனையன்றி...) எவரும் பெற்றிராத பாக்கியத்தை எளிதில் பெற்ற கருடதேவனே! (உனையன்றி...) பறவை இனத்திலே மாணிக்கமே பயம் நீக்கிடும் பக்ஷிராஜனே! ...
- Get link
- X
- Other Apps
காத்திருப்பதே வழி! பாலன் வருவானென்று காத்திருந்தேன் ! பாமாலையும் தொடுத்து வைத்திருந்தேன்! பார்க்கும் இடம்யாவும் பூத்திருந்தேன்! பாவையும் தன்கனவினுள் ளிருந்தேன்! தானாகவே மனம் பற்றுகொள்ள மானாகவே துள்ளி ஆடிக்கொள்ள தேனாகவே உன்னை அடைவதற்கு நானாகவே வருந்தி காத்திருந்தேன்! பூவாகவே என்னை நீகொய்ய மாவாகவே என்னுள்ளம் கரைய பாவாகவே பெண்மை நாணம்கொள்ள நாவாகவே குழறித்திறிய காத்திருந்தேன்! சேயாகவே உன்திரு வடிக்கு நாயாகவே உன்பின் னலைய வேயாகவே நான்வளர்ந்த பின்னும் தாயாகவே நீவந்திட காத்திருந்தேன்! கோபாலனே உன் திருப்பதத்துள் ஈபாலனை சிறிதும் சேர்ப்பாயோ மாபாலனே உன் நாமத்தோடே கோபால பிரியனும் காத்திருந்தேன் ! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
மன்னார்குடி ஸ்ரீ செங்கமலத்தாயார் ஆடி வெள்ளி புஷ்பங்கி சேவையை முன்னிட்டு பாமாலை சமர்ப்பணம். மாலோன் மலர்மார்பிலே வீற்றிருக்கும் அன்னைக்கு மாலை பொழுதினிலே மலர் கோலமாம் மன்னையின் மாயனவன் கரம்பிடித்த வனிதைக்கு மல்லிகை மலராலே பாத சலங்கையாம் (மாலோன்...) செண்ப காரண்யத்தில் கொலுவிருக்கும் தேவிக்கு செண்பக மலராலே கர்ண புஷ்பமாம் (மாலோன்...) துன்பமொன்று வருமாயின் துடைத்தருளும் பார்கவிக்கு துழாய் சரத்தாலே தோள் மாலையாம் (மாலோன்...) அண்டமெல்லாம் அமர்ந்தருளும் செல்வவளர் நாயகிக்கு அரளி மலராலே மேல் ஆடையாம் (மாலோன்...) சயணத்தான் கழலருகே வீற்றருளும் லக்ஷ்மிக்கு சம்பங்கி மலராலே திரு வாபரணமாம் ...
- Get link
- X
- Other Apps
உனது ஆடலில் என் மனம் படும் பாடு அறிவாயா? மயிற்பீலி அசைந்தாடிட மனமென்னவோ ஆகுதே! மயக்கமும் வந்தெய்தி இன்பவுணர் கூடுதே! பதம் மறந்து வாய் குழற இதம் தனை மனம் ரசிக்குதே! நிதம் உனது எண்ணம் வந்து சிதம் தனை புகுத்த லாக்குதே! மனம் உருகி உன் நாமம் தினம் போற்றி பாட எண்ணுதே! இனம் புரியா காத லொன்று அனம் போல் சுற்றி பறக்குதே! இதை யாவையும் வினை யாற்றிடு்ம் விதை நீயன உள முணருதே ! பதை யோடுன் திருப் பாதத்தின் கதை கூறிட நா ஊறுதே! கோ பால பிரிய னுள்ளம் மா பாலம் கடக்க அம் மூ பாலன் மாம னான பூ பாலன் கழலைப் பேணுதே! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
அடியேனுடைய இருபத்து ஐந்தாம் பாடல் கோபால நாமம் வாழி! நாரணா வாழ்க! நால்வேத பொருளே வாழ்க! காரணா வாழ்க! கார்மேனிச் செம்மலே வாழ்க! இன்னுயிரில் கலந்த எம் மன்னவா வாழ்க! இம்மை எனை ஆட்செய்யும் இராகவா வாழ்க! தென் துவாரகை யாளுங் கோவே வாழ்க! தெளிந்த நீரின் அருங் குணமே வாழ்க! அரவு மீதயர்ந்த மலர் மார்பா வாழ்க! அகத்தினி லமர்ந்த ஒளிச் சுடரே வாழ்க! பல்லாண்டு கேட்டருளும் திருச் செவிகள் வெல்க! பகையோரைப் பந்தாடும் பொற் கோலும் வெல்க! ஈருலக மளந்த நின் திருவடிகள் வெல்க! ஈடற்ற மரகதத் திரு மேனி வெல்க! வெண்ணெய் களவாடிய நின் பொற்கரங்கள் வெல்க! வெம்மை தீர்த்தருளும் நனி வதனம் வெல்க! வலமாய் வள மருளும் திருமகளும் வெல்க! வஞ்ச மழித்திடும் நின் திருநாமம் வெல்க! புறத்தே புலப்படா இறைவன் அடி போற்றி! புலன் அடக்கின் புரியும் மாயனடி போற்றி! தர்மத்திலே உறையும் கண்ணனடி போற்றி! தன்னிகரற்ற நம் தேவன் அடி போற்றி! பத்தால் பார்காத்த பரமன் அடி போற்றி! பரகாலனுக் கருளிய மன்னன் அடி போற்றி! கோபிலாதி முனிவர் தொழும் குழந்தையடி போற்றி! கோபால பிரய ன...
- Get link
- X
- Other Apps
கண்டதுண்டோ எந்த தேசத்திலும் கண்ணனும் இராமனும் ஓருருவில் ரகுகுல தோன்றலின் ரம்மியமும் யதுகுல பாலனின் சிறுகுறும்பும் (கண்டதுண்டோ......) வில்லேந்தும் இராமனின் வீரமும் கோலேந்தும் கண்ணனின் மாயமும் (கண்டதுண்டோ......) ஓருருவினிலே இரு குணமும் ஓயாது அருளிடும் நனிமனமும் (கண்டதுண்டோ......) கருடனும் அனுமனும் குழம்பிடவே கள்ளமும் உள்ளமும் கலந்திருப்பதனை (கண்டதுண்டோ......) மன்னையின் மன்னனாய் கோமேய்க்கும் மன்னனாம் தசரத திருமகவை (கண்டதுண்டோ......) தென்னகத் துவாரகை எனுந்தலத்தில் தெளிந்த இராம கோபாலனை (கண்டதுண்டோ......) ஒரு இல்லோடு வாழ்ந்தவனும் ஒருசேர கண்ணனோடு கலந்திருக்க (கண்டதுண்டோ......) ...
- Get link
- X
- Other Apps
புன்னகை எத்தனை புன்னகையோ மன்னையின் மன்னவன் முகத்தினிலே! கண்ணனாய் இருந்திடும் போதினிலே கள்ளத்தனமது தவழ்ந்திடும் உதட்டினிலே! ஏகாந்தமாய் அருளிடும் போதினிலே ஏளனம் இருந்திடும் சிரிப்பினிலே! இராஜ மகுடம் அணிகையிலே இயல்பாய் கம்பீரம் முகத்தினிலே! வைகுந்த நாதானாய் இருக்கையிலே வையமளந்திட்ட பெருமை வாய்தனிலே! நாச்சியார் திருக் கோலத்திலே நாண முதித்திடும் வாய்தனிலே! மோகினி அலங்கார சேவையிலே மோகம் கலந்திடும் நகையினிலே! அன்னையின் திரு முன்பினிலே அடக்கமே உன் திருமுகந்தனிலே! கோபால பிரியனின் பார்வையிலே கோபாலன் கருணையின் வடிவினிலே! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
பக்திசெய் மனமே அவன்பால் பற்றுவை மனமே! முக்தி வேண்டில் அவனை களவாடிவை மனமே! தந்திர காரணவன் உன்னிடம் மாயங்கள் செய்திடுவான் தள்ளி நில்லாமலே மாயையில் கட்டுண்டுகொள் மனமே! கரு நிறத்தவனே மனதில் ஒளியை ஏற்றிடுவான் கண்ணன் திருவடியே உனது இல்லாக்கிடு மனமே! உணர் வினாலேயே உந்தன் உள்ளத்தில் பேசிடுவான் உலகை மறந்தே அவனுள் லயித்திரு மனமே! கள்ளுண்ட போதையினை அவனை கண்டதும் தந்திடுவான் கலங் காமலே அவனை ரசித்திரு மனமே! புன்னகை யினாலேயே உன்னை எளிதில் வென்றிடுவான் புகழ் பாடியே அவன்மனம் கட்டிவை மனமே! கோபாலன் கோலத்திலே நம்மை குழந்தை யாக்கிடுவான் கோபால பிரியனெனை அவனிடம் விட்டுவிடு மனமே! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
கோபாலன் நாமம் ஒன்றே! மாலொருவன் இருக்கையிலே பேதமென்னடி மாயன் கழல்வாசம் போதுமிந்த புவியில் கேளடி! கருநிறத்தவன் திருமுன்பே பிரிவுயேனடி கலை பிரிவினால் கண்ணனும் இரண்டோ கூறடி ! கொள்கை ஏதேனினும் விட்டுச்செல்லடி கொள்கை யாவும் அவன்திருவடி புகும் பாரடி! வைகுந்தத்தில் ஜோதியவன் ஒருமைதானடி வையகத்தில் பிரித்து காணில் முக்தி ஏதடி! விதையொன்றே மரக்கிளைகளின் மூலக்கருவடி விண்ணும் மண்ணும் அளந்தானுக்கு குலமும் ஏதடி! புவியில்புகும் கதிரோளியும் ஒருமைதானடி புண்ணியன் திருக்கழலில் புகுவார்க்கு பிரிவு ஏதடி! கோபாலன் நாமத்தை போற்றிபாடடி கோபால பிரியன் எந்தனுள்ளத்தில் பிரிவு ஏதடி! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
பக்தி என்னும் கயிறினால் யுக்தி யோடு மாயனை சக்தி கொண்டு கட்டலாம் முக்தி தேனை பருகலாம்.. அன்பு என்னும் கோயிலில் வன்பு கொண்ட நேயனை நன்பு வேண்டி பணியலாம் என்பு விடுத்து பிரியலாம் தஞ்சு அவன் பாதத்தை கஞ்சு வதம் செய்தவன் மிஞ்சு பணிவு போதுமே எஞ்சு மின்றி செல்லலாம் வினை யறுக்கும் பேற்றினை முனை ந்துநீயும் பெற்றிட அனை த்துமான பாலனை தனை விடுத்து பற்றிடு கோபால பக்தி வளர்த்திட சாபால வேத சாரத்தில் மாபால நாமம் கூறிடு கோபால பிரிய னாகிடு! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
திகட்டுமோ கோபால அமிர்தம்! காணக் காண திகட்டாத கலையமுதே கார் கால கருமுகிலே கருமணியே! கூறக் கூற திகட்டாத இன்னமுதே கூறும் வார்த்தை யாவினும் உட்பொருளே! அறிய அறிய திகட்டாத அறிவமுதே அலைமகளின் துணை யமர்ந்த அருவுருவே! பாடப் பாட திகட்டாத இசையமுதே பார் படைத்த பரம்பொருளே பழச்சுவையே! கேட்கக் கேட்க திகட்டாத இறையமுதே கேள்வியின் விடைபொருளே கதிரொளியே! உண்ண உண்ண திகட்டாத உள்ளமுதே உணர்வினுக் கரிய உறைமனமே இறையுணர்வே! வணங்க வணங்க திகட்டாத உயரமுதே வசிய மந்திரமே வானாளுஞ் செவ்வடியே! உணர உணர திகட்டாத விண்ணமுதே உள்ளத்தின் ஆழ்கடலே ஓயாத பேரலையே! கோர்க்கக் கோர்க்க திகட்டாத முத்தமுதே கோபால பிரியனவன் கோவே கோபாலனே! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
பல்லவி: இனிமை தாராதே என் வாழ்வில் இன்னல் காலத்திலே உன் திருநாமத்தை இடையின்றி மனத்தில் நினைந் துருகுவதைவிட இனிமை வேறில்லையே கோபாலா! சரணம் நிலையற்ற செல்வம் வேண்டேன் பூவுலகில் நின்திரு நாமமன்றி வேறேதும் வேண்டேன் (இனிமை...) உறவேதும் எனக்கு வேண்டேன் இப்பிறப்பில் உள்ளத்தில் நீயன்றி வேறாரும் வேண்டேன் (இனிமை...) புகழும் பதவியும் வேண்டேன் இக்கலியில் புண்ணியன் பாதமன்றி வேறொன்றும் வேண்டேன் (இனிமை...) கல்வி ஞானம் வேண்டேன் இவ்வுலகில் கண்ணன் உன்னையன்றி வேறொன்றும் வேண்டேன் (இனிமை...) மகிழ்ச்சி ஏதும் வேண்டேன் இவ்வாழ்வில் மதுசூதனன் காட்சியன்றி வேறேதும் வேண்டேன் ...
- Get link
- X
- Other Apps
உனையன்றி வேறொரு தெய்வமுண்டோ? உளதெனும் மற்றெதையும் நான் வணங்குவனோ! இவ்வழகுத் திருமேனி ஈடாகுமோ இதழ் புன்னகைப் பாங்கும் இணையாகுமோ! முகத் தாமரை வேறெங்கும் மலர்ந்திடுமோ முழங்கா லழகும் ஈடாய் இருந்திடுமோ! மணிவயிறும் காணக் கிடைத்திடுமோ மறைத் தந்திடும் ஞானமும் படைத்துடுமோ! பித்தாகி என்னை இழுத்திடுமோ பிள்ளைப் போலவே கொஞ்சி விளையாடிடுமோ! கோலேந்தும் வீரமும் இருந்திடுமோ கோபாலனின் நாமம் போல் இனித்திடுமோ! மன்னையைப் போலெங்கும் அமைந்திடுமோ மலர் மார்பினில் கருணையும் வளர்ந்திடுமோ! உணர்வினால் உள்ளத்தில் பேசிடுமோ உயர்குல மேதும் காணாது பழகிடுமோ! கள்ளத் தனமது இருந்திடுமோ கரை சேர்க்கும் மனமது வந்திடுமோ! தவழ்ந்திடும் வயது இருந்திடுமோ தமி ழிசையில் மயங்கிக் கிடந்திடுமோ! கோபாலனுக் கிணையொன் றிருக்குமாயின் கோபால பிரிய னுயிர் பிரியட்டுமே! - ஹரிசரண்
- Get link
- X
- Other Apps
பரமபதம் அருளுமிடம் அறிந்து வாரீர் பரந்தாமனை காணுமிடம் புரிந்து வாரீர் பரவாசு தேவனாய் பரமாத்மா நின்றருள பரலோகம் அருளும் இடம் தெரிந்து வாரீர் ஆக்களாய் மானுடமே ஆயனிடம் சரணடையும் ஆபத்தில் காக்குமிடம் கேட்டு வாரீர் செண்பக காட்டருளும் செந்தாமரை கண்ணனவன் செல்லும்பாதை சொல்லுமிடம் விரைந்து வாரீர் கதியின்றி தவிப்போரை கருணையோடு கரைசேர்க்கும் கண்ணனின் இராஜியத்தை நாடி வாரீர் தவறுசெய்யும் மானுடரை தவறாமல் கண்டறிந்து தண்டனையும் அருளுமிடம் கண்டு வாரீர் அரவுமீது நடனமாடி அயர்ந்துறங்கும் சிறுகுழந்தை அரியவரம் வழங்குமிடம் அறிய வாரீர் புல்லாங்குல் இசையால் புவனத்தை கட்டுவிக்கும் புருஷோத்தமன் வாழுமிடம் புகழ வாரீர் காவிரியின் கரையினிலே கார்மேக கண்ணனவன் காக்குந்தொழில் புரியுமிடம் காண வாரீர் கோமேய்க்கும் கோபாலன் கோணலாய் நின்றருளும் கோவிலின் நகரமதை வணங்க வாரீர் நோய்தீர்க்கும் நாயகனாய் கோபாலன் நிற்குமிடம் நோண்பேற்று அவன்திருமுகம் ரசிக்க வாரீர் உலகளந்த திருவடியில் சலங்கைமணி சலசலகக்க உரியடிக்கும் காட்சித...
- Get link
- X
- Other Apps
என்ன புண்ணியம் செய்தனோ? முன்னப் பிறந்த பிறவியிலே! - நான் மன்னையிலே பிறந்து வளர்ந்து மன்னையம் பதியையே நினைந்துருக (என்ன புண்ணியம்.....) அரன் குலத்திலுதித்த என்னை அச்சுதன் பால் ஈர்த்துவிட (என்ன புண்ணியம்.....) கண்ணன் தாழ் பணிந்து கதியே அவனென்றிட அடியவன் (என்ன புண்ணியம்.....) உள்ளம் கொள்ளை கொண்டிடும் உலகளந்த மூர்த்தி காண (என்ன புண்ணியம்.....) புன்னகை யொன்று மனம்பறித்திடும் புண்ணியனின் முகம் காண (என்ன புண்ணியம்.....) யசோதை கண்ட லீலையை யதார்த்தமாய் மன்னையில் ரசிக்க (என்ன புண்ணியம்.....) கீதை பிறந்த பூமியில் கீற்றாயினும் நானிருக்க முன்னம் (என்ன புண்ணியம்.....) செண்ப காரண்யத் துள் செல்லப் பிள்ளை கண்டிட (என்ன புண்ணியம்.....) பிறவி யறுக்கும் பேறருளும் பிரிய நாயகன் பால்வீழ (என்ன புண்ணியம்.....) வாடாதத் துழாயணி தோளனை வாழ்த்தி வணங்கிப் பணிய (என்ன புண்ணியம்........
- Get link
- X
- Other Apps
கூவும் குயிலோசையும் கோபாலனென இனிக்குதே! கூச்சலிடும் அரவமும் கோபாலனாய் கேட்குதே! வீசுதென்றல் ஓசையும் கோபாலனாய் வருடுதே! வீணையின் நாணிசையும் கோபாலனாய் மயக்குதே! பேசிடும் வார்த்தையாவும் அவனாகவே தெரியுதே! பேரண்ட சப்தமும் கோபாலனை அழைக்குதே! இயந்திரத்தின் இரைச்சலும் இனியநாமம் இயம்புதே! இலைகளின் ஆடலும் கோபாலனைப் பாடுதே! நீரின் சலசலப்பும் அவன்நாமம் கூறுதே! நீலநிற மாயனின் புகழையெங்கும் பரப்புதே! ஓங்கும் சங்கோலியும் கோபாலனை ஒலிக்குதே! ஓயாத சிரிப்போசையும் அவன்நாமம் செப்புதே! கடலின் அலையோசையும் கோபாலனை மருவுதே! கடையும் மத்தோசையும் மாதவனை உரைக்குதே! கோயில் மணியோசையும் கோபாலனை இசைக்குதே! கோவர்த்தன தாரியை கோலோச்சி மகிழுதே! என் சுவாசமனைத்துமே கோபாலனை அரற்றுதே! எண்ணமெல்லாம் அவன்சரண் பற்றவே தவிக்குதே! இதயத்தின் சதைகளும் கோபாலனாய் துடிக்குதே! இமைமூடும் மெல்லோசை அவனையே அழைக்குதே! கோபாலப்பிரியனின் பாக்கள் யாவும் கூறுதே! கோபாலனின்றி வேறேது மில்லைப் பாடுதே! ...
- Get link
- X
- Other Apps
மன்னைக்கு நிகரேது! மாங்கனிக்கு பொன் னிறைத்த வள்ளலெனும் மாயனின் புகழிடம் இராஜ மன்னார்குடியே! பூதகியின் பாலருந்தி உயிருறிஞ்சி முனிவரை பூரிக்கச் செய்தஇடம் இராஜ மன்னார்குடியே! பிருகு மகள் பார்கவியின் கரம்பிடித்து பிரியமுடன் அமர்ந்தஇடம் இராஜ மன்னார்குடியே! உரலில் கட்டுண்டு மரம் பிளந்த உன்னத பூமியது இராஜ மன்னார்குடியே! கோபிகையின் உடை திருடிய கள்ள கோபாலன் இருக்குமிடம் இராஜ மன்னார்குடியே! கோவர்த்தன கிரியை உயர்த்தி இந்திரனின் கோபத்தை அழித்தஇடம் இராஜ மன்னார்குடியே! கோபிலாதி முனிவர்க்கு சேவை பலகாட்டிய கோவேந்தன் அருளுமிடம் இராஜ மன்னார்குடியே! ஆய்க்குல கன்னியரொடு ஹரித்ரா நதியிலே ஆனந்தித்த இடமும் இராஜ மன்னார்குடியே! மண்ணையுண்டு அண்டம் காட்டிய மாய மழலையின் சிறப்பிடம் இராஜ மன்னார்குடியே! பக்தி என்னும் பெருங் கரையில் பக்தனை சேர்க்குமிடம் இராஜ மன்னார்குடியே! வானாளுந் தேவர்கள் தினம் வணங்கும் வானுயர்ந்த பொன்னிடம் இராஜ மன்னார்குடியே! தர்மத்தின் காவியமாம் கீதையை மீண்டும் தரமாக உரைத்தஇடம் இராஜ மன்னார்குடியே...
- Get link
- X
- Other Apps
பல்லவி: என்னவென் றுரைப்பேன் அவன் பேரழகை எங்கும் நிறைந்த அவன் அருட்புகழை எத்தனை முறை கூறிடினும் அலுப்பு எட்டாமல் ஓடிமனம் பரவச மாகுதடி அனுபல்லவி: விண்ணவரும் மன்னவரும் போற்றி புகழ்ந்திட வியக்கும் லீலைகள் முனிவர்க்கு மன்னையில் விதவிதமாய் காட்டி அருளிய பாங்கை சரணம்: இருகால் மடக்கி தவழ்ந்து வந்திடும் இறையுரு காணில் இல்லறம் மறக்க (என்னவென்று ....) ஓராடையுடன் அணிபல வின்றி காட்டிடும் ஓணத்தான் கருநிற மேனியை கண்டு (என்னவென்று ....) கோலொன்று ஏந்தி கோ மெய்த்திடும் கோபாலனின் வனப்பில் கட்டுண்டு வாய்க்குழறி (என்னவென்று ....) இராசாங்க சேவையில் கம்பீரப் புன்னகையோடு இராசனவன் வருவதைக் கண்டு மையலுற்று (என்னவென்று ....) மோகினியாய் அவன் பத்தி உலாத்துவதில் மோகம் கொண்டு சித்தமு...
- Get link
- X
- Other Apps
பல்லவி: கருணையே வடிவமாய் செங்கமலவல்லி கமலத்தில் வீற்றருளும் மாலவனின் அல்லி சரணம்: பொறுமையே வடிவான ஒளிமிகு திருமுகம் பொல்லா தவரை எரித்திடும் அருள்முகம் ( கருணையே.......) மாங்கல்யம் அலங்கரிக்கும் தாயவளின் கண்டம் மாலவனின் மாலையேற்ற மாண்புமிகு கண்டம் ( கருணையே.......) கோபாலன் குடிகொண்ட இரத்தின மார்பு கோடி ஒளிக்கீற்றல்மிகு பதக்கமணி மார்பு ( கருணையே.......) ஒட்டியாணத் தோடு இயைந்ததவள் மெல்லிடை ஒய்யார நடையனின் இராணியது செவ்விடை ...
- Get link
- X
- Other Apps
பல்லவி: ஆனந்தம் எது ஆனந்தம் ஆலிலை அழகனின் சரணமே - இப்புவியில் சரணம்: செல்வத்தில் புரள்வதா ஆனந்தம் செல்வத்தின் அதிபதி சரணமே- இவ்வுலகில் (ஆனந்தம்.......) மாதிடம் சிற்றின்பமா ஆனந்தம் மாய மாதவன் சரணமே- இப்பிறவியில் (ஆனந்தம்.......) நிலங்களின் உரிமையா ஆனந்தம் நிலமகள் மன்னவன் சரணமே - இவ்வாழ்வில் (ஆனந்தம்.......) சூதில் அலைவதா ஆனந்தம் சூத்திர தாரியின் சரணமே- இக்கலியில் (ஆனந்தம்.......) கோப தாபமா ஆனந்தம் கோபாலனின் துகில்மணச் சரணமே - இம்மனதில் ...
- Get link
- X
- Other Apps
இனியன் இல்லை துவாரகையில் - அவன் இருப்பதோ தென் துவாரகையில் இனிய மொழியில் பேசிடும் பெருமாள் இருப்பதோ மன்னார் குடியில் புவன மனைத்தயும் உண்டத் திருமகன் புள்ளின் மேலமர்ந் தருளுமிடம் புல்லின் வாய்தனைப் பிளந்த லீலையைப் புரிந்ததோ மன்னார் குடியில் எண்ணி லடங்கா லீலைகள் செய்து என்னை மயங்கச் செய்த இடம் எண்ணற் றோரது வாழ்வெனும் தீபத்தில் எண்ணெயாய் ஒளி மிளிருமிடம் பக்தி என்னும் ஆற்றில் பயணி பரமனை நீ அறிந்திடலாம் பழு மிகுந்த பிறவி அறுத்து பத்ம நாபனை சேர்ந்திடலாம் பாதை மாறி தவிக்கும் பிறப்பினை பாரிலே அவன் உயர்த்திடுவான் பாழ் பட்ட மனத்தினை திருத்தி பால னவனே ஆட்கொள்வான் இராச இராச கோபாலனின் சரண் இனித்தோர்க்கினி இல்லை பயம் இழி பிறப்பின் இன்ன லறுக்கவே இயைவீர் அவன் திருப்பதமே! - ஹரிசரண்