குழந்தை யாகவே காண்கிறேன்

குன்று உயர்த்தி நின்றாலும் - உனை

குழந்தை யாகவே காண்கிறேன்

அரக்கரை வதைத்து தர்மம் காத்திடினும்

அரவு மீதடியை பதித்து ஆடிடினும்


                     (குழந்தை.....)

உலகத்தை படைத் தாட்சி புரிந்திடினும்

உன்னத உணர்வாலே உலகோரை மயக்கிடினும்

  ‌‌                  (குழந்தை.....)

மன்னையில் மன்னன் போல் இருந்திடினும்

மங்கையை திரு மார்பில் சுமந்திடினும்

  ‌‌                  (குழந்தை.....)

இருவரோடு கூடி விளை யாடிடினும்

இம்மையும் மறுமையும் நீ ஆகிடினும்

  ‌‌                  (குழந்தை.....)

இராஐ மகுடம் நீ தரித்திடினும்

இணையற்ற கீர்த்தி நீ பெற்றிடினும்

  ‌‌                  (குழந்தை.....)

வைகுந்த நாதனாய் நீ அருளிடினும்

வையம் முழுதும் நீ அளந்திடினும்

  ‌‌                  (குழந்தை.....)

எண்ணி லடங்கா ருனை தொழுதிடினும்

எண்ண மெல்லாம் நீ இருந்திடினும்

  ‌‌                  (குழந்தை.....)

கோபாலனாய் கோலை நீ ஏந்திடுனும்

கோபால பிரியனின் அகக் கண்களிலே

  ‌‌                  (குழந்தை.....)

                       - ஹரிசரண்

Comments

Popular posts from this blog