கூவும் குயிலோசையும் கோபாலனென இனிக்குதே!

கூச்சலிடும் அரவமும் கோபாலனாய் கேட்குதே!





வீசுதென்றல் ஓசையும் கோபாலனாய் வருடுதே!

வீணையின் நாணிசையும் கோபாலனாய் மயக்குதே!






பேசிடும் வார்த்தையாவும் அவனாகவே தெரியுதே!

பேரண்ட சப்தமும் கோபாலனை அழைக்குதே!





இயந்திரத்தின் இரைச்சலும் இனியநாமம் இயம்புதே!

இலைகளின் ஆடலும் கோபாலனைப் பாடுதே!





நீரின் சலசலப்பும் அவன்நாமம் கூறுதே!

நீலநிற மாயனின் புகழையெங்கும் பரப்புதே!





ஓங்கும் சங்கோலியும் கோபாலனை ஒலிக்குதே!

ஓயாத சிரிப்போசையும் அவன்நாமம் செப்புதே!





கடலின் அலையோசையும் கோபாலனை மருவுதே!

கடையும் மத்தோசையும்
மாதவனை உரைக்குதே!




கோயில் மணியோசையும் கோபாலனை இசைக்குதே!

கோவர்த்தன தாரியை கோலோச்சி மகிழுதே!




என் சுவாசமனைத்துமே கோபாலனை அரற்றுதே!

எண்ணமெல்லாம் அவன்சரண் பற்றவே தவிக்குதே!





இதயத்தின் சதைகளும் கோபாலனாய் துடிக்குதே!

இமைமூடும் மெல்லோசை அவனையே அழைக்குதே!





கோபாலப்பிரியனின் பாக்கள் யாவும் கூறுதே!

கோபாலனின்றி வேறேது மில்லைப் பாடுதே!

                    -   ஹரிசரண்

Comments

Popular posts from this blog