வாயுரைக்க வருகதில்லையே தாயே
வாடிடும் மனம் அறிந்தாயோ?
என்னவென் றுரைப்பது அம்மா
எந்தன் உள்ளம் நிறைந்தாயடி !
மாலவன் மலர் கொடியே
மாயமே நீயும் செய்தாய்
மாற்றமாய் காட்சி தந்தாய்
மாதவம் செய்திட்ட பலனளித்தாய்!
நேரில் கண்டாற் போலே
நேர்த்தியாய் கண்டேன் தாயே
நேமியி லுதித்த நங்காய்
நேயமாய் அருளி னாயே!
மழலைக்கு தாய் போலே
மண்ணுக்கு மழை போலே
மன்னைக்கு அரசி யான
மனத்திற்கு இனிய பாவாய்!
கோபாலன் அரிய மனத்துள்
கோலோச்சி நிற்கும் தேவி
கோபால பிரிய னெந்தன்
கோரிக்கை தீர்த்தாய் யடி!
- ஹரிசரண்
வாடிடும் மனம் அறிந்தாயோ?
என்னவென் றுரைப்பது அம்மா
எந்தன் உள்ளம் நிறைந்தாயடி !
மாலவன் மலர் கொடியே
மாயமே நீயும் செய்தாய்
மாற்றமாய் காட்சி தந்தாய்
மாதவம் செய்திட்ட பலனளித்தாய்!
நேரில் கண்டாற் போலே
நேர்த்தியாய் கண்டேன் தாயே
நேமியி லுதித்த நங்காய்
நேயமாய் அருளி னாயே!
மழலைக்கு தாய் போலே
மண்ணுக்கு மழை போலே
மன்னைக்கு அரசி யான
மனத்திற்கு இனிய பாவாய்!
கோபாலன் அரிய மனத்துள்
கோலோச்சி நிற்கும் தேவி
கோபால பிரிய னெந்தன்
கோரிக்கை தீர்த்தாய் யடி!
- ஹரிசரண்
Comments
Post a Comment