பல்லவி:

ஆனந்தம் எது ஆனந்தம்
ஆலிலை அழகனின் சரணமே - இப்புவியில்


சரணம்:

செல்வத்தில் புரள்வதா ஆனந்தம்
செல்வத்தின் அதிபதி சரணமே- இவ்வுலகில்
                                     
                 (ஆனந்தம்.......)




மாதிடம்  சிற்றின்பமா ஆனந்தம்
மாய மாதவன் சரணமே- இப்பிறவியில்
               
                  (ஆனந்தம்.......)




நிலங்களின் உரிமையா ஆனந்தம்
நிலமகள் மன்னவன் சரணமே - இவ்வாழ்வில்
 
              (ஆனந்தம்.......)



சூதில் அலைவதா ஆனந்தம்
சூத்திர தாரியின் சரணமே- இக்கலியில்
             
                (ஆனந்தம்.......)



கோப தாபமா ஆனந்தம்
கோபாலனின் துகில்மணச் சரணமே - இம்மனதில்
               
                  (ஆனந்தம்.......)



ஆசை கொள்வதா ஆனந்தம்
ஆயனின் ஒப்பிலா  சரணமே- இழிபிறப்பில்


                  (ஆனந்தம்.......)
   
                        - ஹரிசரண்

Comments

Popular posts from this blog