கோபாலன் நாமம் ஒன்றே!
மாலொருவன் இருக்கையிலே பேதமென்னடி
மாயன் கழல்வாசம் போதுமிந்த புவியில் கேளடி!
கருநிறத்தவன் திருமுன்பே பிரிவுயேனடி
கலை பிரிவினால் கண்ணனும் இரண்டோ கூறடி !
கொள்கை ஏதேனினும் விட்டுச்செல்லடி
கொள்கை யாவும் அவன்திருவடி புகும் பாரடி!
வைகுந்தத்தில் ஜோதியவன் ஒருமைதானடி
வையகத்தில் பிரித்து காணில் முக்தி ஏதடி!
விதையொன்றே மரக்கிளைகளின் மூலக்கருவடி
விண்ணும் மண்ணும் அளந்தானுக்கு குலமும் ஏதடி!
புவியில்புகும் கதிரோளியும் ஒருமைதானடி
புண்ணியன் திருக்கழலில் புகுவார்க்கு பிரிவு ஏதடி!
கோபாலன் நாமத்தை போற்றிபாடடி
கோபால பிரியன் எந்தனுள்ளத்தில் பிரிவு ஏதடி!
- ஹரிசரண்

Comments
Post a Comment