மன்னையில் குழந்தை சிரிக்கிறது -அது
மனதை கட்டி இழுக்கிறது
மடிதனில் உருண்டு தவழ்கிறது - இனிய
மழலை ததும்ப மொழிகிறது...

அழகின் இலக்கணமாய் திகழ்கிறது - அது
அகிலத்தை ஆட்டுவித்து நகைக்கிறது
அரிய போக்கிஷமாய் ஜொலிக்கிறது - அதன்
அன்பை அருளாக பொழிகிறது...

நினைவை மறக்கச் செய்கிறது-அது
நிலவை ஒத்து குளிர்கிறது
நித்தமும் மாடு மெய்க்கிறது - என்றும்
நிலுவையின்றி முக்தி அளிக்கிறது...

வினைகளுக்கு காரணம் ஆகிறது - அது
விஞானத்திற்கு அப்பால் நிலைக்கிறது
விடியலாய் பலர்வாழ்வில் ஒளிர்கிறது- இங்கு
விரல்களில் கோலை ஏற்கிறது...

கோணலாய் நின்றே ஆள்கிறது- அது
கோவாகக் கோவை மேய்க்கிறது!
கோபால பிரியனின் மனத்தினுள்ளே- அது
கோபாலனாய் நித்தம் ஒளிர்கிறது...
                               - ஹரிசரண்
 

Comments

Popular posts from this blog