பல்லவி:
என்னவென் றுரைப்பேன் அவன் பேரழகை
எங்கும் நிறைந்த அவன் அருட்புகழை
எத்தனை முறை கூறிடினும் அலுப்பு
எட்டாமல் ஓடிமனம் பரவச மாகுதடி
அனுபல்லவி:
விண்ணவரும் மன்னவரும் போற்றி புகழ்ந்திட
வியக்கும் லீலைகள் முனிவர்க்கு மன்னையில்
விதவிதமாய் காட்டி அருளிய பாங்கை
சரணம்:
இருகால் மடக்கி தவழ்ந்து வந்திடும்
இறையுரு காணில் இல்லறம் மறக்க
(என்னவென்று ....)
ஓராடையுடன் அணிபல வின்றி காட்டிடும்
ஓணத்தான் கருநிற மேனியை கண்டு
(என்னவென்று ....)
கோலொன்று ஏந்தி கோ மெய்த்திடும்
கோபாலனின் வனப்பில் கட்டுண்டு வாய்க்குழறி
(என்னவென்று ....)
இராசாங்க சேவையில் கம்பீரப் புன்னகையோடு
இராசனவன் வருவதைக் கண்டு மையலுற்று
(என்னவென்று ....)
மோகினியாய் அவன் பத்தி உலாத்துவதில்
மோகம் கொண்டு சித்தமும் பித்தாகி
(என்னவென்று ....)
மாடு மேய்த்திடும் ஆயர் குலத்தின்
மாதவனின் சிறு புன்னகையில் மயங்கி
(என்னவென்று ....)
புள்ளின் மீதேறி புயலாய் புறப்படும்
புலனறுக்கும் மாயனின் மாயையில் சிக்குண்டு
(என்னவென்று ....)
- ஹரிசரண்
என்னவென் றுரைப்பேன் அவன் பேரழகை
எங்கும் நிறைந்த அவன் அருட்புகழை
எத்தனை முறை கூறிடினும் அலுப்பு
எட்டாமல் ஓடிமனம் பரவச மாகுதடி
அனுபல்லவி:
விண்ணவரும் மன்னவரும் போற்றி புகழ்ந்திட
வியக்கும் லீலைகள் முனிவர்க்கு மன்னையில்
விதவிதமாய் காட்டி அருளிய பாங்கை
சரணம்:
இருகால் மடக்கி தவழ்ந்து வந்திடும்
இறையுரு காணில் இல்லறம் மறக்க
(என்னவென்று ....)
ஓராடையுடன் அணிபல வின்றி காட்டிடும்
ஓணத்தான் கருநிற மேனியை கண்டு
(என்னவென்று ....)
கோலொன்று ஏந்தி கோ மெய்த்திடும்
கோபாலனின் வனப்பில் கட்டுண்டு வாய்க்குழறி
(என்னவென்று ....)
இராசாங்க சேவையில் கம்பீரப் புன்னகையோடு
இராசனவன் வருவதைக் கண்டு மையலுற்று
(என்னவென்று ....)
மோகினியாய் அவன் பத்தி உலாத்துவதில்
மோகம் கொண்டு சித்தமும் பித்தாகி
(என்னவென்று ....)
மாடு மேய்த்திடும் ஆயர் குலத்தின்
மாதவனின் சிறு புன்னகையில் மயங்கி
(என்னவென்று ....)
புள்ளின் மீதேறி புயலாய் புறப்படும்
புலனறுக்கும் மாயனின் மாயையில் சிக்குண்டு
(என்னவென்று ....)
- ஹரிசரண்

Comments
Post a Comment