Posts

Showing posts from September, 2018
ராஜ கோபாலா ராஜ கோபாலா! மன்னையில் உறை மாயனே ஓடி வருக கோபாலா !ராஜ கோபாலா!  மாயங்கள் யாவையுமே அகற்றும் மாயனே! மாலை சூடி தந்த கோதையவள் கொஞ்சும் கள்ளனே!                                  (ராஜ கோபாலா....) வினை யாவுஞ் செய்யுதற்கு மூல காரணா! விலை மதிப்பில்லா பக்தியையே நோக்கும் பூரணா!                                    (ராஜ கோபாலா....) ஆய்ச்சிகளின் மனம் மயக்கும் மதுரமோஹனா! அயல் சிந்தனைகள் உட்புகாது தடுக்கும் நாரணா!                                     (ராஜ கோபாலா....) சரணா கதியினிலே உருகும் மாதவா! சரண் பற்றினார்க்கு வினையறுக்கும் மன்னை மன்னவா!                                     (ராஜ கோபாலா....) அடியாரின் மனத்திலுறை தீப...
வந்ததே நன்னாள் வரமனைத்தும் பெறுநாள் வசுதேவர்க்கு மகனாய் அவன் அவதரிக்க வஞ்சனை யாவும் உருமறந் தோட                         (வந்ததே...) தேவகி மணிவயிற்றில் வந்து உதித்து தேனாய் தித்திக்கும் நகையதின் ஒளியால்                         (வந்ததே...) நாற்கரமும் ஆயுத மேந்தி இங்கே நாரணன் நம்பி வந்து தவழ்ந்ததால்                         (வந்ததே...) விண்ணிருந் திறங்கி மண்ணுலகு புகுந்து வியப்பில் ஆழ்த்தும் கண்ணனின் வரவால்                         (வந்ததே...) துவாபர யுகத்தினில் தர்மத்தை ஸ்தாபித்து துன்ப மனைத்தையும் தூசாக்க பிறந்ததால்                         (வந்ததே...) காலாக் கிரஹமும் புனிதம் எய்திட கார் நிறமேனியன் கவின்மிகு வரவால்             ...