பல்லவி:
கருணையே வடிவமாய் செங்கமலவல்லி
கமலத்தில் வீற்றருளும் மாலவனின் அல்லி
சரணம்:
பொறுமையே வடிவான ஒளிமிகு திருமுகம்
பொல்லா தவரை எரித்திடும் அருள்முகம்
( கருணையே.......)
மாங்கல்யம் அலங்கரிக்கும் தாயவளின் கண்டம்
மாலவனின் மாலையேற்ற மாண்புமிகு கண்டம்
( கருணையே.......)
கோபாலன் குடிகொண்ட இரத்தின மார்பு
கோடி ஒளிக்கீற்றல்மிகு பதக்கமணி மார்பு
( கருணையே.......)
ஒட்டியாணத் தோடு இயைந்ததவள் மெல்லிடை
ஒய்யார நடையனின் இராணியது செவ்விடை
( கருணையே.......)
வர்ணனைக் கெட்டாத மலரன்ன திருக்கரம்
வற்றாத செல்வங்கள் வழங்கிடும் பொற்கரம்
( கருணையே.......)
உலகாளும் அரசியின் உயர்ந்த இத்திருவடி
உயிர் பரமனை பற்ற பற்றிவள் திருவடி
( கருணையே.......)
செங்கமலத் தாயவள் கழலினை பற்றினால்
செவ்விதழன் கழல்புக பரிவுகொண் டருளுவாள்!
( கருணையே.......)
- ஹரிசரண்
கருணையே வடிவமாய் செங்கமலவல்லி
கமலத்தில் வீற்றருளும் மாலவனின் அல்லி
சரணம்:
பொறுமையே வடிவான ஒளிமிகு திருமுகம்
பொல்லா தவரை எரித்திடும் அருள்முகம்
( கருணையே.......)
மாங்கல்யம் அலங்கரிக்கும் தாயவளின் கண்டம்
மாலவனின் மாலையேற்ற மாண்புமிகு கண்டம்
( கருணையே.......)
கோபாலன் குடிகொண்ட இரத்தின மார்பு
கோடி ஒளிக்கீற்றல்மிகு பதக்கமணி மார்பு
( கருணையே.......)
ஒட்டியாணத் தோடு இயைந்ததவள் மெல்லிடை
ஒய்யார நடையனின் இராணியது செவ்விடை
( கருணையே.......)
வர்ணனைக் கெட்டாத மலரன்ன திருக்கரம்
வற்றாத செல்வங்கள் வழங்கிடும் பொற்கரம்
( கருணையே.......)
உலகாளும் அரசியின் உயர்ந்த இத்திருவடி
உயிர் பரமனை பற்ற பற்றிவள் திருவடி
( கருணையே.......)
செங்கமலத் தாயவள் கழலினை பற்றினால்
செவ்விதழன் கழல்புக பரிவுகொண் டருளுவாள்!
( கருணையே.......)
- ஹரிசரண்

Comments
Post a Comment