புன்னகை எத்தனை புன்னகையோ
மன்னையின் மன்னவன் முகத்தினிலே!
கண்ணனாய் இருந்திடும் போதினிலே
கள்ளத்தனமது தவழ்ந்திடும் உதட்டினிலே!
ஏகாந்தமாய் அருளிடும் போதினிலே
ஏளனம் இருந்திடும் சிரிப்பினிலே!
இராஜ மகுடம் அணிகையிலே
இயல்பாய் கம்பீரம் முகத்தினிலே!
வைகுந்த நாதானாய் இருக்கையிலே
வையமளந்திட்ட பெருமை வாய்தனிலே!
நாச்சியார் திருக் கோலத்திலே
நாண முதித்திடும் வாய்தனிலே!
மோகினி அலங்கார சேவையிலே
மோகம் கலந்திடும் நகையினிலே!
அன்னையின் திரு முன்பினிலே
அடக்கமே உன் திருமுகந்தனிலே!
கோபால பிரியனின் பார்வையிலே
கோபாலன் கருணையின் வடிவினிலே!
- ஹரிசரண்
மன்னையின் மன்னவன் முகத்தினிலே!
கண்ணனாய் இருந்திடும் போதினிலே
கள்ளத்தனமது தவழ்ந்திடும் உதட்டினிலே!
ஏகாந்தமாய் அருளிடும் போதினிலே
ஏளனம் இருந்திடும் சிரிப்பினிலே!
இராஜ மகுடம் அணிகையிலே
இயல்பாய் கம்பீரம் முகத்தினிலே!
வைகுந்த நாதானாய் இருக்கையிலே
வையமளந்திட்ட பெருமை வாய்தனிலே!
நாச்சியார் திருக் கோலத்திலே
நாண முதித்திடும் வாய்தனிலே!
மோகினி அலங்கார சேவையிலே
மோகம் கலந்திடும் நகையினிலே!
அன்னையின் திரு முன்பினிலே
அடக்கமே உன் திருமுகந்தனிலே!
கோபால பிரியனின் பார்வையிலே
கோபாலன் கருணையின் வடிவினிலே!
- ஹரிசரண்
Comments
Post a Comment