மந்தத்தை தெளியவை மாதவா!
மங்கை மலர்மார்பா சிறிதேனும்
மந்தத்தை தெளியவை மாதவா!
மானுடத்தின் வழி சரியா?
மாயனே வாய் திறவாயோ!
மாயையில் சுழன்றிடும் வாழ்வை
மாற்ற வல்ல திருதேவா!
பிறப்பதன் முன் பற்றுண்டோ
பிரிந்த பின்னும் பற்றுண்டோ
பிறவியில் வந்திடும் பற்றின்
பின்னால் அலைவது முறையோ?
கவலையின் காரணம் பற்றறென
கண்ணன் சொன்னதை சற்றே
கருத்தோடு கேட்டால் சுகமே
கவலை யின்றி வாழ்வோமே!
செல்வம் சேர்ப்பது மடமை
சென்றபின் னேது வளமை
செவ்வடியை பற்றும் கடமை
செகத்தில் வாழ்வோர் நிலைமை
உணர்வின் றிறப்பது மூடம்
உளமவனில் சேர்வதே உசிதம்
உலகின் பற்றது பாரம்
உணர்த்திடும் நான்மறை வேதம்
கோபாலன் நாமமே அருமருந்து
கோக்களாய் போற்றுவோம் அதைதெரிந்து
கோபால பிரியனின் வழியறிந்து
கோஷங்கள் எழுப்புவோம் தாழ்பணிந்து
- ஹரிசரண்
மங்கை மலர்மார்பா சிறிதேனும்
மந்தத்தை தெளியவை மாதவா!
மானுடத்தின் வழி சரியா?
மாயனே வாய் திறவாயோ!
மாயையில் சுழன்றிடும் வாழ்வை
மாற்ற வல்ல திருதேவா!
பிறப்பதன் முன் பற்றுண்டோ
பிரிந்த பின்னும் பற்றுண்டோ
பிறவியில் வந்திடும் பற்றின்
பின்னால் அலைவது முறையோ?
கவலையின் காரணம் பற்றறென
கண்ணன் சொன்னதை சற்றே
கருத்தோடு கேட்டால் சுகமே
கவலை யின்றி வாழ்வோமே!
செல்வம் சேர்ப்பது மடமை
சென்றபின் னேது வளமை
செவ்வடியை பற்றும் கடமை
செகத்தில் வாழ்வோர் நிலைமை
உணர்வின் றிறப்பது மூடம்
உளமவனில் சேர்வதே உசிதம்
உலகின் பற்றது பாரம்
உணர்த்திடும் நான்மறை வேதம்
கோபாலன் நாமமே அருமருந்து
கோக்களாய் போற்றுவோம் அதைதெரிந்து
கோபால பிரியனின் வழியறிந்து
கோஷங்கள் எழுப்புவோம் தாழ்பணிந்து
- ஹரிசரண்
Comments
Post a Comment