மன்னார்குடி இராஜ கோபாலன் ஜ்யேஷ்டாபிஷேக வைபவம் .
திருமேனி கண்டேன் பொன்மேனி கண்டேன்
திருமஞ்சனத்தில் அவன் அழகுருவும் கண்டேன்
கவசம் இலாச்சிறிய திருமேனி கண்டேன்
கபடம் இலாச்செவ்வாய் மலரவும் கண்டேன்
வெண்ணிற ஆடையவன் உடல்மறைக்கக் கண்டேன்
வெம்மை தணிக்குமவன் நீராட்டம் கண்டேன்
முண்டாசு அணியா கருங்கொண்டை கண்டேன்
முற்பிறவி செய்துன்பம் அறுத்தெறியக் கண்டேன்
காதணிகள் அற்ற திருசெவிகள் கண்டேன்
காமம் அறுக்கும் திருவடிகள் கண்டேன்
எண்ணெய் மேனியில் வழிந்திடக் கண்டேன்
என்னை மயக்கும் பேரழகு கண்டேன்
காவிரி அவன்மீது மகிழ்ந்தோட கண்டேன்
காதலில் என்மனம் பித்தாகக் கண்டேன்
கலசங்கள் நீர்சுரக்க மஞ்சனம் கண்டேன்
கண்ணன் குளித்திடும் வைபவம் கண்டேன்
பசும்பால் திருவடியில் பற்றுதற் கண்டேன்
பல்லாண்டு அடியார்கள் பாடுவதைக் கண்டேன்
வெந்தயிர் குளிர்விக்க உன்மேனி கண்டேன்
வெண்குடை நிலைபெறும் உன்தர்மம் கண்டேன்
இளநீர் இடையோரம் வழிந்தோடக் கண்டேன்
இன்னல் தீர்க்கும் திருநயனம் கண்டேன்
பஞ்சாமிர்த மேனியில் தேனொழுகக் கண்டேன்
பஞ்சம் போக்கிடும் ஸ்ரீவத்ஸம் கண்டேன்
முகம்தனில் மஞ்சள் கொஞ்சிடக் கண்டேன்
முழங்கால் வழியது ஓடிடக் கண்டேன்
திரவியப் பொடியது மணக்கக் கண்டேன்
தில்லையங் கூத்தனும் வணங்கிடக் கண்டேன்
சந்தனம் மார்பினில் பதிந்திடக் கண்டேன்
சங்கோலி முழங்கிட ஆரத்தி கண்டேன்
கோபாலன் மஞ்சன மாடிடக் கண்டேன்
கோபால பிரியனும் ஒன்றிடக் கண்டேன்
- ஹரிசரண்
திருமேனி கண்டேன் பொன்மேனி கண்டேன்
திருமஞ்சனத்தில் அவன் அழகுருவும் கண்டேன்
கவசம் இலாச்சிறிய திருமேனி கண்டேன்
கபடம் இலாச்செவ்வாய் மலரவும் கண்டேன்
வெண்ணிற ஆடையவன் உடல்மறைக்கக் கண்டேன்
வெம்மை தணிக்குமவன் நீராட்டம் கண்டேன்
முண்டாசு அணியா கருங்கொண்டை கண்டேன்
முற்பிறவி செய்துன்பம் அறுத்தெறியக் கண்டேன்
காதணிகள் அற்ற திருசெவிகள் கண்டேன்
காமம் அறுக்கும் திருவடிகள் கண்டேன்
எண்ணெய் மேனியில் வழிந்திடக் கண்டேன்
என்னை மயக்கும் பேரழகு கண்டேன்
காவிரி அவன்மீது மகிழ்ந்தோட கண்டேன்
காதலில் என்மனம் பித்தாகக் கண்டேன்
கலசங்கள் நீர்சுரக்க மஞ்சனம் கண்டேன்
கண்ணன் குளித்திடும் வைபவம் கண்டேன்
பசும்பால் திருவடியில் பற்றுதற் கண்டேன்
பல்லாண்டு அடியார்கள் பாடுவதைக் கண்டேன்
வெந்தயிர் குளிர்விக்க உன்மேனி கண்டேன்
வெண்குடை நிலைபெறும் உன்தர்மம் கண்டேன்
இளநீர் இடையோரம் வழிந்தோடக் கண்டேன்
இன்னல் தீர்க்கும் திருநயனம் கண்டேன்
பஞ்சாமிர்த மேனியில் தேனொழுகக் கண்டேன்
பஞ்சம் போக்கிடும் ஸ்ரீவத்ஸம் கண்டேன்
முகம்தனில் மஞ்சள் கொஞ்சிடக் கண்டேன்
முழங்கால் வழியது ஓடிடக் கண்டேன்
திரவியப் பொடியது மணக்கக் கண்டேன்
தில்லையங் கூத்தனும் வணங்கிடக் கண்டேன்
சந்தனம் மார்பினில் பதிந்திடக் கண்டேன்
சங்கோலி முழங்கிட ஆரத்தி கண்டேன்
கோபாலன் மஞ்சன மாடிடக் கண்டேன்
கோபால பிரியனும் ஒன்றிடக் கண்டேன்
- ஹரிசரண்
Comments
Post a Comment