இன்பமயம் என்றும் இன்பமயம்

இராஜ கோபாலன் திருவே இன்பமயம்



திருந்திய செவ்வடி இன்பமயம்

திரு மாமகள் மார்பனும் இன்பமயம்
                   (இன்பமயம்...)




மாணிக்க விரல்களும் இன்பமயம்

மாயன் நாமம் சொன்னால் தினம் இன்பமயம்
                  (இன்பமயம்...)



கோணக் கால்களும் இன்பமயம்

கோ மேய்க்கும் அழகும் இன்பமயம்
                  (இன்பமயம்...)




பெருத்த கணுக்கால் இன்பமயம்

பெறும் தரிசனம் யாவும் இன்பமயம்
                  (இன்பமயம்...)




காலிற் சலங்கையும் இன்பமயம்

காமம் அறுத்திடும் அவன்நாமம் இன்பமயம்
                  (இன்பமயம்...)


மறைந்திரு முட்டியும்  இன்பமயம்

மறை தந்த ஞானமும் இன்பமயம்
                  (இன்பமயம்...)


ஏக வஸ்திரமும் இன்பமயம்

ஏகாந்தத் திருக் கோலம் இன்பமயம்
                  (இன்பமயம்...)


அரைஞான் கயிறும் இன்பமயம்

அதில் தொங்கிடும் சாவியும் இன்பமயம்
                  (இன்பமயம்...)


சிறிய தொந்தியும் இன்பமயம்

சிற் றாமரை நாபியும் இன்பமயம்
                  (இன்பமயம்...)



மாமகள் பதக்கமும் இன்பமயம்

மாயன் லீலைகள் உணர்வதும் இன்பமயம்
                  (இன்பமயம்...)



மின்னிடும் மார்பும் இன்பமயம்

மிளிர் தேவியின் இருப்பிடம் இன்பமயம்
                  (இன்பமயம்...)




ஏந்திய கோலும் இன்பமயம்

ஏழ் பிறவி  அறுப்பதும் இன்பமயம்
                  (இன்பமயம்...)



வெண்ணெய் உருண்டையும் இன்பமயம்

 வெண் தாமரை கரங்களும் இன்பமயம்
                  (இன்பமயம்...)




அணைக்கும் இடக்கரம் இன்பமயம்

அதன் ஈடற்ற ஸ்பரிசமும் இன்பமயம்
                  (இன்பமயம்...)




சுந்தரத் தோள்களும் இன்பமயம்

 சுகம் தந்திடும் காட்சியும் இன்பமயம்
                  (இன்பமயம்...)



அரியவன்  செவிகளும்
இன்பமயம்

அதில் மாறிடும் குழைகளும் இன்பமயம்
                  (இன்பமயம்...)




மயக்கிடும் புன்னகை இன்பமயம்

மலர் காம்பு நாசியும் இன்பமயம்
                  (இன்பமயம்...)



தியானத்தில் நயனமும் இன்பமயம்

தினம் அலுக்காத சேவையும் இன்பமயம்
                  (இன்பமயம்...)


தனுசொத்த புருவமும் இன்பமயம்

தண் ணொளித் திலகமும் இன்பமயம்
                  (இன்பமயம்...)


சிரத்தில் முண்டாசும் இன்பமயம்

சிறு பீலிசூழ் கொண்டையும் இன்பமயம்
                  (இன்பமயம்...)


கோபாலன் திருமேனி இன்பமயம்

கோபால பிரிய னெந்தன் உள்ளம் இன்பமயம்
                  (இன்பமயம்...)


                                           - ஹரிசரண்

Comments

Popular posts from this blog