யாதுமாகி நின்ற யாதவ குலத்தோனே!
மாதுமாகி உன்மேல் மையல் கொள்வேனே!
ஆணாக எனை நீ படைத்திருந்தாலு முனை
தானாக வந்தடைய பெண்ணாக மாறுவனே!
கண்ட பின்பு கண்கள்தம் இருப்பிடமே மறக்குதடா -- உனை
(கண்ட பின்பு)
கள்ளச் சிரிப்பு உள்ளத்தை இல்லாமல் ஆக்குதடா -உன்
(கள்ளச் சிரிப்பு)
செய்த செயல்கள் யாவுமே மறந்தே தொலையுதடா - முன்பு
(செய்த)
செவ்வாய் கனியினையே எண்ணிமனம் உருகுதடா - முகுந்தன்
(செவ்வாய்)
நிலை மறந்து சித்தம் பித்தாகி திரியுதடா - உன்னால்
(நிலை மறந்து)
நிறம் மறந்து விழியோ செங்கதிராய் சிவக்குதடா - உன்னால்
(நிறம் மறந்து)
அறிகுறிகள் யாவையுமே காதலை நிறுவுதடா-
இந்த
(அறிகுறிகள்)
அணுவணுவாய் கோபால பிரியனை நொறுக்குதடா - இது
(அணுவணுவாய்)
- ஹரிசரண்
Comments
Post a Comment