Posts

Showing posts from August, 2018
குழந்தை யாகவே காண்கிறேன் குன்று உயர்த்தி நின்றாலும் - உனை குழந்தை யாகவே காண்கிறேன் அரக்கரை வதைத்து தர்மம் காத்திடினும் அரவு மீதடியை பதித்து ஆடிடினும்                      (குழந்தை.....) உலகத்தை படைத் தாட்சி புரிந்திடினும் உன்னத உணர்வாலே உலகோரை மயக்கிடினும்   ‌‌                  (குழந்தை.....) மன்னையில் மன்னன் போல் இருந்திடினும் மங்கையை திரு மார்பில் சுமந்திடினும்   ‌‌                  (குழந்தை.....) இருவரோடு கூடி விளை யாடிடினும் இம்மையும் மறுமையும் நீ ஆகிடினும்   ‌‌                  (குழந்தை.....) இராஐ மகுடம் நீ தரித்திடினும் இணையற்ற கீர்த்தி நீ பெற்றிடினும்   ‌‌                  (குழந்தை.....) வைகுந்த நாதனாய் நீ அருளிடினும் வையம் முழுதும் நீ அளந்திடினும்   ‌‌        ...
நின்றே அயர்ந் திருப்பாய் சிறிதேனும் அமர்ந் தருளய்யா - கோபாலா சிறிதேனும் அமர்ந் தருளய்யா! செங் கமலத்தில் அவளே வீற்றிருக்க செவ்வடி சிவக்க நிற்பது ஏனோ?           ‌        (சிறிதேனும்....) அரங்கத்தில் முழுதும் ஓய்விலே இருப்பதால் அகிலத்தின் பொறுப்பை இங்கே சுமந்தாயோ?     ‌ ‌             (சிறிதேனும்....) உன் கால்கள் நின்றி ருந்தால் என் நெஞ்சில் உதிரம் உறையுதே                   (சிறிதேனும்....) கண் முன்னே அமரா விடினும் கண் அயரும் பொழுதேனும் செவிமடுத்து                                        (சிறிதேனும்....) வந்தவர் வாழ்வையே நீ கண்டால் வலிக்குமுன் அடிகளை யார் காண்பார்                  (சிறிதேனும்....) முத்துப் பவள நாற்காலியும் உனது முன்னே கொணர்ந்து நான் சேர்க்கிறேன்     ...
வாயுரைக்க வருகதில்லையே தாயே  வாடிடும் மனம் அறிந்தாயோ?  என்னவென் றுரைப்பது அம்மா எந்தன் உள்ளம் நிறைந்தாயடி ! மாலவன் மலர் கொடியே மாயமே நீயும் செய்தாய் மாற்றமாய் காட்சி தந்தாய் மாதவம் செய்திட்ட பலனளித்தாய்!  நேரில் கண்டாற் போலே  நேர்த்தியாய் கண்டேன் தாயே நேமியி லுதித்த நங்காய் நேயமாய் அருளி னாயே! மழலைக்கு தாய் போலே  மண்ணுக்கு மழை போலே மன்னைக்கு அரசி யான மனத்திற்கு இனிய பாவாய்! கோபாலன் அரிய மனத்துள் கோலோச்சி நிற்கும் தேவி  கோபால பிரிய னெந்தன் கோரிக்கை தீர்த்தாய் யடி!                                                      -  ஹரிசரண்