Posts

அண்டுவாரில்லா ஆருயிர்காள்!! அண்டுக செல்வப் பூஞ்சோலை - அது வண்டு வராபதி எனுஞ்சோலை!! இடக்கரம் நோக்குங்கோல் உயிரனங்காள்!! இவன்வைகுந்தம் தன்னில் மானுடரை இளைப்பாற அருளவே நீட்டினானோ?.. இடம்தர பதம்நோக்கிக் காட்டினானோ?.. குறையேதும் வேண்டாம் மானுடங்காள்!! குட்டன் உரையளிப்பான் உள்ளத்துணர்வளிப்பான்.. கூறுங்கள் மனக்குறை அவனிடமே.. கூடுங்கள் அவனோடு பேரின்பமே.. தேடுக அவனது உள்ளுணர்வை.. நாடுக கள்வனின் கழலிருப்பை.. ஒதுக மாயனின் மெய்நிலையை.. பாடுக குழந்தையின் அருங்குறும்பை.. கோபாலன் குடும்பத்தில் ஒருவனாவான்.. கோளாறு எதையினும் அவன்முறிப்பான்.. கோலமும் வாய்நகையும் துயர்கலையும் .... கோபால பிரியனின் மனம்நிறையும்!!                       - ஹரிசரண்..
இராஜகோபாலஸ்வாமி ஆரத்தி (வடநாட்டு பாணியில்) ஆரத்தி இராஜ இராஜா! திருமன்னையின் மன்னா! திருமாமகள் ப்ரியனே திருமாலே! தாயாளா! ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி மணிவண்ணா! மனம் பறித்திடும் கண்ணா! மந்தங்கள் தெளிவிப்பாய் மலர் மார்பனே , வாராய் ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி செம்பகேசா! செண்பகாரண்ய நாதா! செங்கழல் பணிந்தோமே செங்கதிர் முகத்தோனே! ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி வாசுதேவா! வாழ்வின் பொருளும் நீயே! வானவர் போற்று மமுதே வாமன மூர்த்தி (ஸ்ரீ ) ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி ஆயர்கொழுந்தே! ஆண்டிடும் ஐயனே ஆணவம் தீர்த்தருள்வாய் ஆயர் குலத்தின் அழகே ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி இடைமகனே! இன்னல் தீர்த்திடும் இறைவா! இசைத்தமிழ் கேட்டிடுவாய் இணையொன்றுனக்கு உண்டோ? ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி நந்தலாலா! நலம் அளித்திடும் ஒளியே நனிவாய் நகைத்தருள்வாய் நடமிடும் நாரணா! ஆரத்தி ஏற்றருள்வாய்... ஆரத்தி கோபாலா! கோலேந்திய பாலா! கோயில் வந்தணைந்தோம் கோபாலபிரிய நாதா! ஆரத்தி ஏற்றருள்வாய்...                         ...
மங்களமே கண்ணனுக்கு இராஜ கோபாலனுக்கு மங்களமே மன்னனுக்கு மந்திதொழும் மாயனுக்கு மங்களமே வீரனுக்கு செங்கமல மார்பனுக்கு மங்களமே கள்ளனுக்கு வெண்ணெய் பிரியனுக்கு மங்களமே அபயனுக்கு அரவனை துயிலனுக்கு மங்களமே இனியனுக்கு பார்கவியின் நாதனுக்கு மங்களமே மன்னையின் எழில்மிகு குழந்தைக்கு மங்களமே அன்பனுக்கு அல்லலில் காப்போனுக்கு மங்களமே குறும்பனுக்கு குருதியில் கலந்தோனுக்கு மங்களமே அழகனுக்கு குறுநகை குட்டனுக்கு மங்களமே ஆழ்வார்கள் செந்தமிழ் பிரியனுக்கு மங்களமே தேவர்சூழ் பரமபத நாதனுக்கு மங்களமே கரங்களில் கோல்கொண்ட இடையனுக்கு மங்களமே பாமா ருக்மிணியின் நாதனுக்கு மங்களமே  கோபால பிரியனுயிர் தேவனுக்கு மங்களமே ஸ்ரீஇராஜ இராஜ கோபாலனுக்கு மங்களம் சுப மங்களம் மங்களம் சுப மங்களம்                                      -ஹரிசரண்
வெண்மதி மேலிருந்து கீழ்வர லாயிற்று வெந்தையிர் கடையும் ஓசையும் நின்றது வெம்மை தீர்ந்து குளிருமிங் காட்கொண்டது வெண்ணை உண்ட வாயனே தாலேலோ! வெண்சங்கு உடையோனே தாலேலோ! முனிகட்கு சேவை அருளிய தயாபாரா! முப்பது முக்கோடி தேவருமே உனக்கு முத்தோடு பொன்சேர்த்து தொட்டில் அளித்தனரே முகுந்தன் எனும் நாமமுடையா தாலேலோ! முழு முதற் பொருளே தாலேலோ! பாலும் சோறும் உண்டு களித்தாய் பாரில் லீலையும் செய்து மகிழ்ந்தாய் பாம்பின் மீதே ஆடி அயர்ந்தாய் பாலனே கண்வளர் தாலேலோ! பாவங்கள் துடைப் போனே தாலேலோ! கோபியர் கூறிய குறை யினாலே கோபாத்தால் உரலோடு கட்டி விட்டேன் கோபமாய் இராதே அன்னை மீது கோபாலா உறங்குவாய் தாலேலோ! கோபியர் சூழ்மன்னா தாலேலோ! மாடுகள் மேய்த்துநீ சோர்ந் திருப்பாய் மாமலை உயர்த்திநீ களைத் திருப்பாய் மாயங்கள் செய்துநீ அயர்ந் திருப்பாய் மாலே உறங்குவாய் தாலேலோ! மாசற்ற தூயமுதே தாலேலோ! குறும்புகள் செய்து நீ முடித்திருப்பாய் குறைகள் நாளையே  செவிக ளெட்டும் குணமாய் செப்புவோர் சொல் கேட்டு குலமணியே கண்ணுறங்கு தாலேலோ! குழவியே கண்வளர் தாலேலோ! கோலங்கள் பலகாட்டி அயர்ந் திருபாய் கோவினமும் ச...
மன்னையில் குழந்தை சிரிக்கிறது -அது மனதை கட்டி இழுக்கிறது மடிதனில் உருண்டு தவழ்கிறது - இனிய மழலை ததும்ப மொழிகிறது... அழகின் இலக்கணமாய் திகழ்கிறது - அது அகிலத்தை ஆட்டுவித்து நகைக்கிறது அரிய போக்கிஷமாய் ஜொலிக்கிறது - அதன் அன்பை அருளாக பொழிகிறது... நினைவை மறக்கச் செய்கிறது-அது நிலவை ஒத்து குளிர்கிறது நித்தமும் மாடு மெய்க்கிறது - என்றும் நிலுவையின்றி முக்தி அளிக்கிறது... வினைகளுக்கு காரணம் ஆகிறது - அது விஞானத்திற்கு அப்பால் நிலைக்கிறது விடியலாய் பலர்வாழ்வில் ஒளிர்கிறது- இங்கு விரல்களில் கோலை ஏற்கிறது... கோணலாய் நின்றே ஆள்கிறது- அது கோவாகக் கோவை மேய்க்கிறது! கோபால பிரியனின் மனத்தினுள்ளே- அது கோபாலனாய் நித்தம் ஒளிர்கிறது...                                - ஹரிசரண்  
ஸ்ரீ  இராஜகோபாலன் திருப்பள்ளியெழுச்சி செங்கதிரோன் கீழ்த்திசை வந்துதித்தான் செங்கமலம் நீர்நிலையில் அரும்பியதுகாண் செங்கமல வல்லியும் துயில் விடுத்தாள் செம்பொன் மேனியனே பள்ளி எழுந்தருள்வாய்.. புள்ளினத் தோசைகள்  செவி மடுப்பாய் புள்ளினத் தரசனும் பணித் திருக்கிறான் புண்ணிய பலன் பல தந்தருள்வோனே புலர்ந்தது பொழுது பள்ளி எழுந்தருள்வாய்... வேழமும் பசுக்களும் வாயில் வந்தது வேதமும் ஓதத் தொடங்க லானது வேறொன்று மறியாத பக்தர்கள் கண்டு வேகமாய் பாலனே பள்ளி எழுந்தருள்வாய்... கலியும் அதன் போக்கு ஆடுவதுகாண் கள்ளங்கள் எவ்விடமும் சூழ லானது கபடங்கள் ஆழ்மனதில் பதிய லானது கன்றுகள் மேய்ப்பானே பள்ளி எழுந்தருள்வாய்.... பசும்பால் வெண்ணெயும் கொண்டு வந்தோம் பனைவெல்லமும் கற்கண்டும் முன்னே வைத்தோம் பலவகைக் கனிகளும் அடுக்கி வைத்தோம் பண்ணிசை கேட்டு பள்ளி எழுந்தருள்வாய்.... கோயில் மணியும் ஒலிக்க லானது கோமாதா உனை நோக்கி நிற்கலானது கோவிந்தா எனும் கோஷம் செவியுற்றே கோபிகை நாதனே பள்ளி எழுந்தருள்வாய்.... மஞ்சளும் துகிலும் ஏந்தி விற்பன்னர்கள் மந்திர ஒலிகளை சொல்ல லானர் மங்கைகள் உனை காண வ...
  யாதுமாகி நின்ற யாதவ குலத்தோனே! மாதுமாகி உன்மேல் மையல் கொள்வேனே! ஆணாக எனை நீ படைத்திருந்தாலு முனை தானாக வந்தடைய பெண்ணாக மாறுவனே! கண்ட பின்பு கண்கள்தம் இருப்பிடமே மறக்குதடா -- உனை                        (கண்ட பின்பு) கள்ளச் சிரிப்பு உள்ளத்தை இல்லாமல் ஆக்குதடா -உன்                         (கள்ளச் சிரிப்பு) செய்த செயல்கள் யாவுமே மறந்தே தொலையுதடா - முன்பு                                (செய்த) செவ்வாய் கனியினையே எண்ணிமனம் உருகுதடா - முகுந்தன்                               (செவ்வாய்) நிலை மறந்து சித்தம் பித்தாகி திரியுதடா - உன்னால்                                (நிலை மறந்து) நிறம் மறந்து விழியோ செங்கதிராய் சிவ...