பக்திசெய் மனமே அவன்பால்
பற்றுவை மனமே!
முக்தி வேண்டில் அவனை களவாடிவை மனமே!
தந்திர காரணவன் உன்னிடம் மாயங்கள் செய்திடுவான்
தள்ளி நில்லாமலே மாயையில் கட்டுண்டுகொள் மனமே!
கரு நிறத்தவனே மனதில் ஒளியை ஏற்றிடுவான்
கண்ணன் திருவடியே உனது இல்லாக்கிடு மனமே!
உணர் வினாலேயே உந்தன் உள்ளத்தில் பேசிடுவான்
உலகை மறந்தே அவனுள் லயித்திரு மனமே!
கள்ளுண்ட போதையினை அவனை கண்டதும் தந்திடுவான்
கலங் காமலே அவனை ரசித்திரு மனமே!
புன்னகை யினாலேயே உன்னை எளிதில் வென்றிடுவான்
புகழ் பாடியே அவன்மனம் கட்டிவை மனமே!
கோபாலன் கோலத்திலே நம்மை குழந்தை யாக்கிடுவான்
கோபால பிரியனெனை
அவனிடம் விட்டுவிடு மனமே!
- ஹரிசரண்

Comments
Post a Comment