இனியன் இல்லை துவாரகையில் - அவன்
இருப்பதோ தென் துவாரகையில்
இனிய மொழியில் பேசிடும் பெருமாள்
இருப்பதோ மன்னார் குடியில்
புவன மனைத்தயும் உண்டத் திருமகன்
புள்ளின் மேலமர்ந் தருளுமிடம்
புல்லின் வாய்தனைப் பிளந்த லீலையைப்
புரிந்ததோ மன்னார் குடியில்
எண்ணி லடங்கா லீலைகள் செய்து
என்னை மயங்கச் செய்த இடம்
எண்ணற் றோரது வாழ்வெனும் தீபத்தில்
எண்ணெயாய் ஒளி மிளிருமிடம்
பக்தி என்னும் ஆற்றில் பயணி
பரமனை நீ அறிந்திடலாம்
பழு மிகுந்த பிறவி அறுத்து
பத்ம நாபனை சேர்ந்திடலாம்
பாதை மாறி தவிக்கும் பிறப்பினை
பாரிலே அவன் உயர்த்திடுவான்
பாழ் பட்ட மனத்தினை திருத்தி
பால னவனே ஆட்கொள்வான்
இராச இராச கோபாலனின் சரண்
இனித்தோர்க்கினி இல்லை பயம்
இழி பிறப்பின் இன்ன லறுக்கவே
இயைவீர் அவன் திருப்பதமே!
- ஹரிசரண்
இருப்பதோ தென் துவாரகையில்
இனிய மொழியில் பேசிடும் பெருமாள்
இருப்பதோ மன்னார் குடியில்
புவன மனைத்தயும் உண்டத் திருமகன்
புள்ளின் மேலமர்ந் தருளுமிடம்
புல்லின் வாய்தனைப் பிளந்த லீலையைப்
புரிந்ததோ மன்னார் குடியில்
எண்ணி லடங்கா லீலைகள் செய்து
என்னை மயங்கச் செய்த இடம்
எண்ணற் றோரது வாழ்வெனும் தீபத்தில்
எண்ணெயாய் ஒளி மிளிருமிடம்
பக்தி என்னும் ஆற்றில் பயணி
பரமனை நீ அறிந்திடலாம்
பழு மிகுந்த பிறவி அறுத்து
பத்ம நாபனை சேர்ந்திடலாம்
பாதை மாறி தவிக்கும் பிறப்பினை
பாரிலே அவன் உயர்த்திடுவான்
பாழ் பட்ட மனத்தினை திருத்தி
பால னவனே ஆட்கொள்வான்
இராச இராச கோபாலனின் சரண்
இனித்தோர்க்கினி இல்லை பயம்
இழி பிறப்பின் இன்ன லறுக்கவே
இயைவீர் அவன் திருப்பதமே!
- ஹரிசரண்

Comments
Post a Comment