மங்களமே கண்ணனுக்கு இராஜ கோபாலனுக்கு
மங்களமே மன்னனுக்கு மந்திதொழும் மாயனுக்கு

மங்களமே வீரனுக்கு செங்கமல மார்பனுக்கு
மங்களமே கள்ளனுக்கு வெண்ணெய் பிரியனுக்கு

மங்களமே அபயனுக்கு அரவனை துயிலனுக்கு
மங்களமே இனியனுக்கு பார்கவியின் நாதனுக்கு

மங்களமே மன்னையின் எழில்மிகு குழந்தைக்கு
மங்களமே அன்பனுக்கு அல்லலில் காப்போனுக்கு

மங்களமே குறும்பனுக்கு குருதியில் கலந்தோனுக்கு
மங்களமே அழகனுக்கு குறுநகை குட்டனுக்கு

மங்களமே ஆழ்வார்கள் செந்தமிழ் பிரியனுக்கு
மங்களமே தேவர்சூழ் பரமபத நாதனுக்கு

மங்களமே கரங்களில் கோல்கொண்ட இடையனுக்கு
மங்களமே பாமா ருக்மிணியின் நாதனுக்கு

மங்களமே  கோபால பிரியனுயிர் தேவனுக்கு
மங்களமே ஸ்ரீஇராஜ இராஜ கோபாலனுக்கு
மங்களம் சுப மங்களம்
மங்களம் சுப மங்களம்
                                     -ஹரிசரண்

Comments

Popular posts from this blog