காத்திருப்பதே வழி!

பாலன் வருவானென்று காத்திருந்தேன் !

பாமாலையும்  தொடுத்து வைத்திருந்தேன்!

பார்க்கும் இடம்யாவும் பூத்திருந்தேன்!

பாவையும் தன்கனவினுள் ளிருந்தேன்!

தானாகவே மனம் பற்றுகொள்ள

மானாகவே துள்ளி ஆடிக்கொள்ள

தேனாகவே உன்னை அடைவதற்கு

நானாகவே வருந்தி காத்திருந்தேன்!

பூவாகவே என்னை நீகொய்ய

மாவாகவே என்னுள்ளம் கரைய

பாவாகவே பெண்மை நாணம்கொள்ள

நாவாகவே குழறித்திறிய  காத்திருந்தேன்!

சேயாகவே உன்திரு வடிக்கு

நாயாகவே உன்பின்
னலைய

வேயாகவே நான்வளர்ந்த பின்னும்

தாயாகவே நீவந்திட காத்திருந்தேன்!

கோபாலனே உன் திருப்பதத்துள்

ஈபாலனை சிறிதும் சேர்ப்பாயோ

மாபாலனே உன் நாமத்தோடே

கோபால பிரியனும் காத்திருந்தேன் !

                                        - ஹரிசரண்

Comments

Popular posts from this blog