பரமபதம்  அருளுமிடம் அறிந்து வாரீர்

பரந்தாமனை காணுமிடம் புரிந்து வாரீர்



பரவாசு தேவனாய் பரமாத்மா நின்றருள

பரலோகம் அருளும் இடம் தெரிந்து வாரீர்



ஆக்களாய் மானுடமே ஆயனிடம் சரணடையும்

ஆபத்தில் காக்குமிடம் கேட்டு வாரீர்



செண்பக காட்டருளும் செந்தாமரை கண்ணனவன்

செல்லும்பாதை சொல்லுமிடம் விரைந்து வாரீர்




கதியின்றி தவிப்போரை
கருணையோடு கரைசேர்க்கும்

கண்ணனின் இராஜியத்தை நாடி வாரீர்



தவறுசெய்யும் மானுடரை  தவறாமல்
கண்டறிந்து

தண்டனையும்  அருளுமிடம் கண்டு
 வாரீர்



அரவுமீது  நடனமாடி அயர்ந்துறங்கும் சிறுகுழந்தை

அரியவரம் வழங்குமிடம் அறிய வாரீர்




புல்லாங்குல் இசையால் புவனத்தை கட்டுவிக்கும்

புருஷோத்தமன் வாழுமிடம் புகழ வாரீர்



காவிரியின் கரையினிலே  கார்மேக கண்ணனவன்

காக்குந்தொழில் புரியுமிடம் காண வாரீர்



கோமேய்க்கும் கோபாலன் கோணலாய் நின்றருளும்

கோவிலின் நகரமதை  வணங்க வாரீர்



நோய்தீர்க்கும் நாயகனாய் கோபாலன் நிற்குமிடம்

நோண்பேற்று அவன்திருமுகம் ரசிக்க வாரீர்



உலகளந்த திருவடியில் சலங்கைமணி சலசலகக்க

உரியடிக்கும் காட்சிதனை சுவைக்க வாரீர்



இம்மையில் பரமபதம்  இனிதாக தந்தருளும்

இராஜ மன்னார்குடியை காண வாரீர்



கோபாலன் நாமமே மூச்சாக கொண்டஇந்த

கோபாலபிரியன் அழைக்க மகிழ்ந்து வாரீர்!
                                      - ஹரிசரண்

Comments

Popular posts from this blog