கண்ணில் ஒளியுருவே...கோபாலா !
கனித்த பேரறிவே...!
பண்ணில் நிறைமதியே... கோபாலா!
பனித்த உள்ளுணர்வே..!
விண்ணில் கருமுகிலே....கோபாலா !
விளைந்த நெற்கதிரே...!
உண்ணில் அருள்பவனே... கோபாலா!
உறைந்த உயிர்பொருளே....!
உன்பெயர் செவிமடுத்தால் எண்ணுள்ளம் துள்ளிக் குதிக்குதடா...!
உனையே நினைந்திருந்தால் பித்துதான்
ஊனில் கலக்குதடா...!
அசைந்து வருகையிலே என்னிதையம்
அசைவு மறக்குதடா...!
அருகில் காண்கையிலே உள்ளந்தான்
அமுதை ருசிக்குதடா...!
கோவினம் மேய்த்து நிற்கும்
கோபாலன் குழலிசையில் நாட்டம்!
கோபாலன் நாமம் ஒன்றே
கோபால பிரியனி னுயிரோட்டம்!
- ர. ஹரிசரண்
கனித்த பேரறிவே...!
பண்ணில் நிறைமதியே... கோபாலா!
பனித்த உள்ளுணர்வே..!
விண்ணில் கருமுகிலே....கோபாலா !
விளைந்த நெற்கதிரே...!
உண்ணில் அருள்பவனே... கோபாலா!
உறைந்த உயிர்பொருளே....!
உன்பெயர் செவிமடுத்தால் எண்ணுள்ளம் துள்ளிக் குதிக்குதடா...!
உனையே நினைந்திருந்தால் பித்துதான்
ஊனில் கலக்குதடா...!
அசைந்து வருகையிலே என்னிதையம்
அசைவு மறக்குதடா...!
அருகில் காண்கையிலே உள்ளந்தான்
அமுதை ருசிக்குதடா...!
கோவினம் மேய்த்து நிற்கும்
கோபாலன் குழலிசையில் நாட்டம்!
கோபாலன் நாமம் ஒன்றே
கோபால பிரியனி னுயிரோட்டம்!
- ர. ஹரிசரண்
Comments
Post a Comment