Posts

Showing posts from July, 2018
கோவர்த்தன மலை யுயர்த்தி கோபாலன் நின்ற கதை கோலா கலமாக  கூறிடுவோமே ! வெண்ணெய் யுண்டு அவன் வெகுளியாய் நின்ற கதை வெல்லமாய் நாவினிக்க  கூவிடுவோமே!.... புல்லாங் குழ லிசைத்து  புருஷோத்தமன் நின்ற கதை புவியார் செவிபடவே பாடிடுவோமே! காளிங்கன் மீது அவன் கால்பதித்து நின்ற கதை காலை பொழுதினிலே இசைத்திடுவோமே! இடையன் கன்று களை இன்பமாக மேய்த்த கதை இறைவன் நாமத்தோடு இயம்பிடுவோமே! மன்னை வந்து அவன் மலர்மகளை மணந்த கதை மயக்கும் இசையாலே பாடிடுவோமே! தவ மியற்றும் யாவர்க்கும் தவப்பலனை யருளும் கதை தமிழில் சுவையோடு கூறிடுவோமே! கோபால பிரிய னெந்தன் கோபாலன் புண்ய கதை கோதை சொன்னபடி கூவிடுவோமே!                                  - ஹரிசரண்
மன்னார்குடி இராஜ கோபாலன் ஜ்யேஷ்டாபிஷேக வைபவம் . திருமேனி கண்டேன் பொன்மேனி கண்டேன் திருமஞ்சனத்தில் அவன் அழகுருவும் கண்டேன் கவசம் இலாச்சிறிய திருமேனி கண்டேன் கபடம் இலாச்செவ்வாய் மலரவும் கண்டேன் வெண்ணிற ஆடையவன் உடல்மறைக்கக் கண்டேன் வெம்மை தணிக்குமவன் நீராட்டம் கண்டேன் முண்டாசு அணியா கருங்கொண்டை கண்டேன் முற்பிறவி செய்துன்பம் அறுத்தெறியக் கண்டேன் காதணிகள் அற்ற திருசெவிகள் கண்டேன் காமம் அறுக்கும் திருவடிகள் கண்டேன் எண்ணெய் மேனியில் வழிந்திடக் கண்டேன் என்னை மயக்கும் பேரழகு கண்டேன் காவிரி அவன்மீது மகிழ்ந்தோட கண்டேன் காதலில் என்மனம் பித்தாகக் கண்டேன் கலசங்கள் நீர்சுரக்க மஞ்சனம் கண்டேன் கண்ணன் குளித்திடும் வைபவம் கண்டேன் பசும்பால் திருவடியில் பற்றுதற் கண்டேன் பல்லாண்டு அடியார்கள் பாடுவதைக் கண்டேன் வெந்தயிர் குளிர்விக்க உன்மேனி கண்டேன் வெண்குடை நிலைபெறும் உன்தர்மம் கண்டேன் இளநீர் இடையோரம் வழிந்தோடக் கண்டேன் இன்னல் தீர்க்கும் திருநயனம் கண்டேன் பஞ்சாமிர்த  மேனியில் தேனொழுகக் கண்டேன் பஞ்சம் போக்கிடும் ஸ்ரீவத்ஸம் கண்டேன் முகம்தனில் மஞ்சள...
இன்பமயம் என்றும் இன்பமயம் இராஜ கோபாலன் திருவே இன்பமயம் திருந்திய செவ்வடி இன்பமயம் திரு மாமகள் மார்பனும் இன்பமயம்                    (இன்பமயம்...) மாணிக்க விரல்களும் இன்பமயம் மாயன் நாமம் சொன்னால் தினம் இன்பமயம்                   (இன்பமயம்...) கோணக் கால்களும் இன்பமயம் கோ மேய்க்கும் அழகும் இன்பமயம்                   (இன்பமயம்...) பெருத்த கணுக்கால் இன்பமயம் பெறும் தரிசனம் யாவும் இன்பமயம்                   (இன்பமயம்...) காலிற் சலங்கையும் இன்பமயம் காமம் அறுத்திடும் அவன்நாமம் இன்பமயம்                   (இன்பமயம்...) மறைந்திரு முட்டியும்  இன்பமயம் மறை தந்த ஞானமும் இன்பமயம்                   (இன்பமயம்...) ஏக வஸ்திரமும் இன்பமயம் ஏகாந்தத் திருக் கோலம் இன்பமயம்   ...
மந்தத்தை தெளியவை மாதவா! மங்கை மலர்மார்பா சிறிதேனும் மந்தத்தை   தெளியவை மாதவா! மானுடத்தின் வழி சரியா? மாயனே வாய் திறவாயோ! மாயையில் சுழன்றிடும் வாழ்வை மாற்ற வல்ல திருதேவா! பிறப்பதன் முன் பற்றுண்டோ பிரிந்த பின்னும் பற்றுண்டோ பிறவியில் வந்திடும் பற்றின் பின்னால் அலைவது முறையோ? கவலையின் காரணம் பற்றறென கண்ணன் சொன்னதை சற்றே கருத்தோடு கேட்டால் சுகமே கவலை யின்றி வாழ்வோமே! செல்வம் சேர்ப்பது மடமை சென்றபின் னேது வளமை செவ்வடியை பற்றும் கடமை செகத்தில் வாழ்வோர் நிலைமை உணர்வின் றிறப்பது மூடம் உளமவனில் சேர்வதே உசிதம் உலகின் பற்றது பாரம் உணர்த்திடும் நான்மறை வேதம் கோபாலன் நாமமே அருமருந்து கோக்களாய் போற்றுவோம் அதைதெரிந்து கோபால பிரியனின்  வழியறிந்து கோஷங்கள் எழுப்புவோம் தாழ்பணிந்து                                    - ஹரிசரண்
கணமும் தொடர்கின்றாய் கருங்குழல் அழகனே! கருணை பொழின்கின்றாய் கார்மேனி குழந்தையே! அகத்திலும் புறத்திலும் நீக்கமற நிறைந்திரும் அரியே உங்கருணை கடந்தீர்ப்ப  தெங்கனம்! விழியில் கண்டயாவும் உன்பார்வை சேருதே மொழியில் சொன்னயாவும்  உன்மனதினில் பதியுதே எந்துன்பம் யாவும் உன்பணிகள் ஆகுதே எண்ணங்கள் யாவுமே உன்நாமம் கூறுதே விந்தையாவும் நிகழ்த்துகின்ற தென்துவாராகை மூர்த்தியே! விலையில்லா கருணைக்கு  பக்திகொண்டு தீர்ப்பனே  அடியார் மேலுனக்கு ஏனிப்படி  கருணையோ அழியாப் புகழ்கொண்ட ஆயப் பிரானே சிறியேன் உன்லீலை புறிந்திலா அறிவிலி சிந்தையில் உனைத்தவிர வேறொன்றும் அறிந்திலேன் கோபால பிரியனை மேய்த்தருளும் ஆயனே கோபால நமங்கூறி உன்திருவடி சேர்வனே                                        - ஹரிசரண்
இன்று ஆடி ஸ்வாதி , ஸ்ரீ கருடாழ்வார் திருநக்ஷத்ரம், பெரிய திருவடிக்கு பாமாலை சமர்ப்பணம். உனையன்றி சேவகனும் உண்டோ தனையே அர்பணித்த புள்ளரசே! மன்னையின் அரசனையே உந்தன் மகிமைமிகு தோள்களில் ஏந்தியவா!                (உனையன்றி...) அமிர்த கலசத்தை கரத்திலேந்தி அண்டமாளும் நாயகனை தோளிலேந்தும்                (உனையன்றி...) அரவுதனை ஆபரணமா யணிந்து அழகாய் விண்ணூரும் ஆழ்வானே!                (உனையன்றி...) பரந்தாமன் திருவடியை தாங்கியே பரவசமுரும் பெரிய திருவடியே!                (உனையன்றி...) விஷ்ணு சித்தனாகவே அவதரித்து வியத்தகு பல்லாண்டு படியவனே!                (உனையன்றி...) எவரும் பெற்றிராத பாக்கியத்தை எளிதில் பெற்ற கருடதேவனே!                (உனையன்றி...) பறவை இனத்திலே மாணிக்கமே பயம் நீக்கிடும் பக்ஷிராஜனே!     ...
காத்திருப்பதே வழி! பாலன் வருவானென்று காத்திருந்தேன் ! பாமாலையும்  தொடுத்து வைத்திருந்தேன்! பார்க்கும் இடம்யாவும் பூத்திருந்தேன்! பாவையும் தன்கனவினுள் ளிருந்தேன்! தானாகவே மனம் பற்றுகொள்ள மானாகவே துள்ளி ஆடிக்கொள்ள தேனாகவே உன்னை அடைவதற்கு நானாகவே வருந்தி காத்திருந்தேன்! பூவாகவே என்னை நீகொய்ய மாவாகவே என்னுள்ளம் கரைய பாவாகவே பெண்மை நாணம்கொள்ள நாவாகவே குழறித்திறிய  காத்திருந்தேன்! சேயாகவே உன்திரு வடிக்கு நாயாகவே உன்பின் னலைய வேயாகவே நான்வளர்ந்த பின்னும் தாயாகவே நீவந்திட காத்திருந்தேன்! கோபாலனே உன் திருப்பதத்துள் ஈபாலனை சிறிதும் சேர்ப்பாயோ மாபாலனே உன் நாமத்தோடே கோபால பிரியனும் காத்திருந்தேன் !                                         - ஹரிசரண்
மன்னார்குடி ஸ்ரீ செங்கமலத்தாயார் ஆடி வெள்ளி புஷ்பங்கி சேவையை முன்னிட்டு பாமாலை சமர்ப்பணம். மாலோன் மலர்மார்பிலே வீற்றிருக்கும் அன்னைக்கு மாலை பொழுதினிலே மலர் கோலமாம் மன்னையின் மாயனவன் கரம்பிடித்த வனிதைக்கு மல்லிகை மலராலே பாத சலங்கையாம்                    (மாலோன்...) செண்ப காரண்யத்தில்  கொலுவிருக்கும் தேவிக்கு செண்பக மலராலே கர்ண புஷ்பமாம்                       (மாலோன்...) துன்பமொன்று வருமாயின் துடைத்தருளும்  பார்கவிக்கு துழாய் சரத்தாலே தோள் மாலையாம்                       (மாலோன்...) அண்டமெல்லாம்  அமர்ந்தருளும் செல்வவளர் நாயகிக்கு அரளி மலராலே மேல் ஆடையாம்                      (மாலோன்...) சயணத்தான் கழலருகே  வீற்றருளும் லக்ஷ்மிக்கு சம்பங்கி மலராலே திரு வாபரணமாம்                 ...
உனது ஆடலில் என் மனம் படும் பாடு அறிவாயா? மயிற்பீலி அசைந்தாடிட மனமென்னவோ ஆகுதே! மயக்கமும் வந்தெய்தி இன்பவுணர் கூடுதே! பதம் மறந்து வாய் குழற இதம் தனை மனம் ரசிக்குதே! நிதம் உனது எண்ணம் வந்து சிதம் தனை புகுத்த லாக்குதே!  மனம் உருகி உன் நாமம் தினம் போற்றி பாட எண்ணுதே! இனம் புரியா காத  லொன்று அனம் போல் சுற்றி பறக்குதே! இதை யாவையும் வினை யாற்றிடு்ம் விதை நீயன உள முணருதே ! பதை யோடுன் திருப்  பாதத்தின் கதை கூறிட நா ஊறுதே! கோ பால பிரிய னுள்ளம் மா பாலம் கடக்க அம் மூ பாலன் மாம னான பூ பாலன் கழலைப்  பேணுதே!                                           - ஹரிசரண்
அடியேனுடைய இருபத்து ஐந்தாம் பாடல் கோபால நாமம் வாழி! நாரணா வாழ்க! நால்வேத பொருளே வாழ்க! காரணா வாழ்க! கார்மேனிச் செம்மலே வாழ்க! இன்னுயிரில் கலந்த எம் மன்னவா வாழ்க! இம்மை எனை ஆட்செய்யும் இராகவா வாழ்க! தென் துவாரகை யாளுங் கோவே வாழ்க! தெளிந்த நீரின் அருங் குணமே வாழ்க! அரவு மீதயர்ந்த மலர் மார்பா வாழ்க! அகத்தினி லமர்ந்த ஒளிச் சுடரே வாழ்க! பல்லாண்டு கேட்டருளும் திருச் செவிகள் வெல்க! பகையோரைப் பந்தாடும் பொற் கோலும் வெல்க! ஈருலக மளந்த நின் திருவடிகள் வெல்க! ஈடற்ற மரகதத்  திரு மேனி  வெல்க! வெண்ணெய் களவாடிய நின் பொற்கரங்கள் வெல்க! வெம்மை தீர்த்தருளும் நனி வதனம் வெல்க! வலமாய் வள மருளும் திருமகளும் வெல்க! வஞ்ச மழித்திடும் நின் திருநாமம் வெல்க! புறத்தே  புலப்படா இறைவன் அடி போற்றி! புலன் அடக்கின் புரியும் மாயனடி போற்றி! தர்மத்திலே உறையும் கண்ணனடி போற்றி! தன்னிகரற்ற நம் தேவன் அடி போற்றி! பத்தால் பார்காத்த பரமன் அடி போற்றி! பரகாலனுக் கருளிய மன்னன் அடி போற்றி! கோபிலாதி முனிவர் தொழும் குழந்தையடி போற்றி! கோபால பிரய  ன...
கண்டதுண்டோ எந்த தேசத்திலும் கண்ணனும் இராமனும் ஓருருவில் ரகுகுல தோன்றலின் ரம்மியமும் யதுகுல பாலனின் சிறுகுறும்பும்                                         (கண்டதுண்டோ......) வில்லேந்தும் இராமனின் வீரமும் கோலேந்தும் கண்ணனின் மாயமும்                       (கண்டதுண்டோ......) ஓருருவினிலே இரு குணமும் ஓயாது அருளிடும் நனிமனமும்         (கண்டதுண்டோ......) கருடனும் அனுமனும் குழம்பிடவே கள்ளமும் உள்ளமும் கலந்திருப்பதனை         (கண்டதுண்டோ......) மன்னையின் மன்னனாய் கோமேய்க்கும் மன்னனாம் தசரத திருமகவை         (கண்டதுண்டோ......) தென்னகத் துவாரகை எனுந்தலத்தில் தெளிந்த இராம கோபாலனை         (கண்டதுண்டோ......) ஒரு இல்லோடு வாழ்ந்தவனும் ஒருசேர கண்ணனோடு கலந்திருக்க         (கண்டதுண்டோ......) ...
புன்னகை எத்தனை புன்னகையோ  மன்னையின் மன்னவன் முகத்தினிலே! கண்ணனாய் இருந்திடும் போதினிலே கள்ளத்தனமது தவழ்ந்திடும் உதட்டினிலே! ஏகாந்தமாய் அருளிடும் போதினிலே ஏளனம் இருந்திடும் சிரிப்பினிலே! இராஜ மகுடம் அணிகையிலே இயல்பாய் கம்பீரம் முகத்தினிலே! வைகுந்த நாதானாய் இருக்கையிலே வையமளந்திட்ட பெருமை வாய்தனிலே! நாச்சியார் திருக் கோலத்திலே நாண முதித்திடும் வாய்தனிலே! மோகினி அலங்கார சேவையிலே மோகம் கலந்திடும் நகையினிலே! அன்னையின் திரு முன்பினிலே அடக்கமே உன் திருமுகந்தனிலே! கோபால பிரியனின் பார்வையிலே கோபாலன் கருணையின் வடிவினிலே!                                   - ஹரிசரண்
பக்திசெய் மனமே அவன்பால் பற்றுவை மனமே! முக்தி வேண்டில் அவனை களவாடிவை மனமே! தந்திர காரணவன் உன்னிடம் மாயங்கள் செய்திடுவான் தள்ளி நில்லாமலே மாயையில் கட்டுண்டுகொள் மனமே! கரு நிறத்தவனே மனதில் ஒளியை ஏற்றிடுவான் கண்ணன் திருவடியே உனது  இல்லாக்கிடு மனமே! உணர் வினாலேயே உந்தன் உள்ளத்தில் பேசிடுவான் உலகை மறந்தே அவனுள் லயித்திரு மனமே! கள்ளுண்ட போதையினை அவனை கண்டதும் தந்திடுவான் கலங் காமலே அவனை ரசித்திரு மனமே! புன்னகை யினாலேயே உன்னை எளிதில் வென்றிடுவான் புகழ் பாடியே அவன்மனம் கட்டிவை மனமே! கோபாலன் கோலத்திலே நம்மை குழந்தை யாக்கிடுவான் கோபால பிரியனெனை அவனிடம் விட்டுவிடு மனமே!                                    - ஹரிசரண்
கோபாலன் நாமம் ஒன்றே! மாலொருவன் இருக்கையிலே பேதமென்னடி மாயன் கழல்வாசம் போதுமிந்த புவியில் கேளடி! கருநிறத்தவன் திருமுன்பே பிரிவுயேனடி கலை பிரிவினால் கண்ணனும் இரண்டோ கூறடி ! கொள்கை ஏதேனினும் விட்டுச்செல்லடி கொள்கை யாவும் அவன்திருவடி புகும் பாரடி! வைகுந்தத்தில் ஜோதியவன் ஒருமைதானடி வையகத்தில் பிரித்து காணில் முக்தி ஏதடி! விதையொன்றே மரக்கிளைகளின் மூலக்கருவடி விண்ணும் மண்ணும் அளந்தானுக்கு குலமும் ஏதடி! புவியில்புகும் கதிரோளியும் ஒருமைதானடி புண்ணியன்  திருக்கழலில் புகுவார்க்கு பிரிவு ஏதடி! கோபாலன் நாமத்தை போற்றிபாடடி கோபால பிரியன் எந்தனுள்ளத்தில் பிரிவு ஏதடி!                              - ஹரிசரண்
பக்தி என்னும் கயிறினால் யுக்தி யோடு மாயனை சக்தி கொண்டு கட்டலாம் முக்தி தேனை பருகலாம்.. அன்பு என்னும் கோயிலில் வன்பு கொண்ட நேயனை நன்பு வேண்டி பணியலாம் என்பு விடுத்து பிரியலாம் தஞ்சு அவன் பாதத்தை கஞ்சு வதம் செய்தவன் மிஞ்சு பணிவு போதுமே எஞ்சு மின்றி செல்லலாம் வினை யறுக்கும் பேற்றினை முனை ந்துநீயும் பெற்றிட அனை த்துமான பாலனை தனை விடுத்து பற்றிடு கோபால பக்தி வளர்த்திட சாபால வேத சாரத்தில் மாபால நாமம் கூறிடு கோபால பிரிய னாகிடு!                       -   ஹரிசரண்
திகட்டுமோ கோபால அமிர்தம்! காணக் காண திகட்டாத கலையமுதே கார் கால கருமுகிலே கருமணியே! கூறக் கூற திகட்டாத இன்னமுதே கூறும் வார்த்தை யாவினும் உட்பொருளே! அறிய அறிய திகட்டாத அறிவமுதே அலைமகளின் துணை யமர்ந்த அருவுருவே! பாடப் பாட திகட்டாத இசையமுதே பார் படைத்த பரம்பொருளே பழச்சுவையே! கேட்கக் கேட்க திகட்டாத இறையமுதே கேள்வியின் விடைபொருளே கதிரொளியே! உண்ண உண்ண திகட்டாத உள்ளமுதே உணர்வினுக் கரிய உறைமனமே இறையுணர்வே! வணங்க வணங்க திகட்டாத உயரமுதே வசிய மந்திரமே வானாளுஞ் செவ்வடியே! உணர உணர திகட்டாத விண்ணமுதே உள்ளத்தின் ஆழ்கடலே ஓயாத பேரலையே! கோர்க்கக் கோர்க்க திகட்டாத முத்தமுதே கோபால பிரியனவன் கோவே கோபாலனே!                       - ஹரிசரண்
பல்லவி: இனிமை தாராதே என் வாழ்வில் இன்னல் காலத்திலே உன் திருநாமத்தை இடையின்றி  மனத்தில் நினைந் துருகுவதைவிட இனிமை வேறில்லையே கோபாலா! சரணம் நிலையற்ற செல்வம்  வேண்டேன் பூவுலகில் நின்திரு நாமமன்றி வேறேதும் வேண்டேன்                        (இனிமை...) உறவேதும் எனக்கு வேண்டேன் இப்பிறப்பில் உள்ளத்தில் நீயன்றி வேறாரும் வேண்டேன்                        (இனிமை...) புகழும் பதவியும்  வேண்டேன் இக்கலியில் புண்ணியன் பாதமன்றி வேறொன்றும் வேண்டேன்                        (இனிமை...) கல்வி ஞானம் வேண்டேன் இவ்வுலகில் கண்ணன் உன்னையன்றி வேறொன்றும் வேண்டேன்                        (இனிமை...) மகிழ்ச்சி ஏதும் வேண்டேன் இவ்வாழ்வில் மதுசூதனன் காட்சியன்றி வேறேதும் வேண்டேன்                 ...
உனையன்றி வேறொரு தெய்வமுண்டோ? உளதெனும் மற்றெதையும் நான் வணங்குவனோ! இவ்வழகுத் திருமேனி ஈடாகுமோ இதழ் புன்னகைப் பாங்கும் இணையாகுமோ! முகத் தாமரை வேறெங்கும் மலர்ந்திடுமோ முழங்கா லழகும் ஈடாய் இருந்திடுமோ! மணிவயிறும் காணக் கிடைத்திடுமோ மறைத் தந்திடும் ஞானமும் படைத்துடுமோ! பித்தாகி என்னை இழுத்திடுமோ பிள்ளைப் போலவே கொஞ்சி விளையாடிடுமோ! கோலேந்தும் வீரமும் இருந்திடுமோ கோபாலனின் நாமம் போல் இனித்திடுமோ! மன்னையைப் போலெங்கும் அமைந்திடுமோ மலர் மார்பினில் கருணையும் வளர்ந்திடுமோ! உணர்வினால் உள்ளத்தில் பேசிடுமோ உயர்குல மேதும் காணாது பழகிடுமோ! கள்ளத் தனமது இருந்திடுமோ கரை சேர்க்கும் மனமது வந்திடுமோ! தவழ்ந்திடும் வயது இருந்திடுமோ தமி  ழிசையில் மயங்கிக் கிடந்திடுமோ! கோபாலனுக் கிணையொன் றிருக்குமாயின் கோபால பிரிய னுயிர் பிரியட்டுமே!                                 - ஹரிசரண்
பரமபதம்  அருளுமிடம் அறிந்து வாரீர் பரந்தாமனை காணுமிடம் புரிந்து வாரீர் பரவாசு தேவனாய் பரமாத்மா நின்றருள பரலோகம் அருளும் இடம் தெரிந்து வாரீர் ஆக்களாய் மானுடமே ஆயனிடம் சரணடையும் ஆபத்தில் காக்குமிடம் கேட்டு வாரீர் செண்பக காட்டருளும் செந்தாமரை கண்ணனவன் செல்லும்பாதை சொல்லுமிடம் விரைந்து வாரீர் கதியின்றி தவிப்போரை கருணையோடு கரைசேர்க்கும் கண்ணனின் இராஜியத்தை நாடி வாரீர் தவறுசெய்யும் மானுடரை  தவறாமல் கண்டறிந்து தண்டனையும்  அருளுமிடம் கண்டு  வாரீர் அரவுமீது  நடனமாடி அயர்ந்துறங்கும் சிறுகுழந்தை அரியவரம் வழங்குமிடம் அறிய வாரீர் புல்லாங்குல் இசையால் புவனத்தை கட்டுவிக்கும் புருஷோத்தமன் வாழுமிடம் புகழ வாரீர் காவிரியின் கரையினிலே  கார்மேக கண்ணனவன் காக்குந்தொழில் புரியுமிடம் காண வாரீர் கோமேய்க்கும் கோபாலன் கோணலாய் நின்றருளும் கோவிலின் நகரமதை  வணங்க வாரீர் நோய்தீர்க்கும் நாயகனாய் கோபாலன் நிற்குமிடம் நோண்பேற்று அவன்திருமுகம் ரசிக்க வாரீர் உலகளந்த திருவடியில் சலங்கைமணி சலசலகக்க உரியடிக்கும் காட்சித...
Image
என்ன புண்ணியம் செய்தனோ? முன்னப் பிறந்த பிறவியிலே! - நான் மன்னையிலே பிறந்து வளர்ந்து மன்னையம் பதியையே நினைந்துருக    (என்ன புண்ணியம்.....) அரன் குலத்திலுதித்த என்னை அச்சுதன் பால் ஈர்த்துவிட      (என்ன புண்ணியம்.....) கண்ணன் தாழ் பணிந்து கதியே அவனென்றிட அடியவன்    (என்ன புண்ணியம்.....) உள்ளம் கொள்ளை கொண்டிடும் உலகளந்த மூர்த்தி காண    (என்ன புண்ணியம்.....) புன்னகை யொன்று மனம்பறித்திடும் புண்ணியனின் முகம் காண    (என்ன புண்ணியம்.....) யசோதை கண்ட லீலையை யதார்த்தமாய் மன்னையில்  ரசிக்க    (என்ன புண்ணியம்.....) கீதை பிறந்த பூமியில் கீற்றாயினும் நானிருக்க  முன்னம்      (என்ன புண்ணியம்.....) செண்ப காரண்யத் துள் செல்லப் பிள்ளை கண்டிட    (என்ன புண்ணியம்.....) பிறவி யறுக்கும் பேறருளும் பிரிய நாயகன் பால்வீழ    (என்ன புண்ணியம்.....) வாடாதத் துழாயணி தோளனை வாழ்த்தி வணங்கிப் பணிய    (என்ன புண்ணியம்........
கூவும் குயிலோசையும் கோபாலனென இனிக்குதே! கூச்சலிடும் அரவமும் கோபாலனாய் கேட்குதே! வீசுதென்றல் ஓசையும் கோபாலனாய் வருடுதே! வீணையின் நாணிசையும் கோபாலனாய் மயக்குதே! பேசிடும் வார்த்தையாவும் அவனாகவே தெரியுதே! பேரண்ட சப்தமும் கோபாலனை அழைக்குதே! இயந்திரத்தின் இரைச்சலும் இனியநாமம் இயம்புதே! இலைகளின் ஆடலும் கோபாலனைப் பாடுதே! நீரின் சலசலப்பும் அவன்நாமம் கூறுதே! நீலநிற மாயனின் புகழையெங்கும் பரப்புதே! ஓங்கும் சங்கோலியும் கோபாலனை ஒலிக்குதே! ஓயாத சிரிப்போசையும் அவன்நாமம் செப்புதே! கடலின் அலையோசையும் கோபாலனை மருவுதே! கடையும் மத்தோசையும் மாதவனை உரைக்குதே! கோயில் மணியோசையும் கோபாலனை இசைக்குதே! கோவர்த்தன தாரியை கோலோச்சி மகிழுதே! என் சுவாசமனைத்துமே கோபாலனை அரற்றுதே! எண்ணமெல்லாம் அவன்சரண் பற்றவே தவிக்குதே! இதயத்தின் சதைகளும் கோபாலனாய் துடிக்குதே! இமைமூடும் மெல்லோசை அவனையே அழைக்குதே! கோபாலப்பிரியனின் பாக்கள் யாவும் கூறுதே! கோபாலனின்றி வேறேது மில்லைப் பாடுதே!                    ...
Image
மன்னைக்கு நிகரேது! மாங்கனிக்கு பொன் னிறைத்த வள்ளலெனும் மாயனின் புகழிடம் இராஜ மன்னார்குடியே! பூதகியின் பாலருந்தி உயிருறிஞ்சி முனிவரை பூரிக்கச் செய்தஇடம் இராஜ மன்னார்குடியே! பிருகு மகள் பார்கவியின் கரம்பிடித்து பிரியமுடன் அமர்ந்தஇடம் இராஜ மன்னார்குடியே! உரலில் கட்டுண்டு மரம் பிளந்த உன்னத பூமியது இராஜ மன்னார்குடியே! கோபிகையின் உடை திருடிய கள்ள கோபாலன் இருக்குமிடம் இராஜ மன்னார்குடியே! கோவர்த்தன கிரியை உயர்த்தி இந்திரனின் கோபத்தை அழித்தஇடம் இராஜ மன்னார்குடியே! கோபிலாதி முனிவர்க்கு சேவை பலகாட்டிய கோவேந்தன் அருளுமிடம்  இராஜ மன்னார்குடியே! ஆய்க்குல கன்னியரொடு  ஹரித்ரா நதியிலே ஆனந்தித்த இடமும் இராஜ மன்னார்குடியே! மண்ணையுண்டு அண்டம் காட்டிய மாய மழலையின் சிறப்பிடம் இராஜ மன்னார்குடியே! பக்தி என்னும் பெருங் கரையில் பக்தனை சேர்க்குமிடம் இராஜ மன்னார்குடியே! வானாளுந் தேவர்கள் தினம் வணங்கும் வானுயர்ந்த பொன்னிடம் இராஜ மன்னார்குடியே! தர்மத்தின் காவியமாம் கீதையை மீண்டும் தரமாக உரைத்தஇடம் இராஜ மன்னார்குடியே...
Image
பல்லவி: நாம மொன்று போதும் தரணியிலே நாமெல்லாம் பிறவியின் கரை சேரவே -திரு                                                                                                                             (நாம....) சரணம்:  பிணி யனைத்தும் போக்கி அவன்பின் பித்தாக அலைய கோபாலன் அவன்                                                    (நாம....) உணவும் வேண்டேன் நீரும் வேண்டேன் உயிர் புவியில் பிழைக்க அவன்                                       ...
Image
பல்லவி: என்னவென் றுரைப்பேன்  அவன் பேரழகை எங்கும் நிறைந்த அவன் அருட்புகழை எத்தனை முறை கூறிடினும் அலுப்பு எட்டாமல் ஓடிமனம் பரவச மாகுதடி அனுபல்லவி: விண்ணவரும் மன்னவரும் போற்றி புகழ்ந்திட வியக்கும் லீலைகள் முனிவர்க்கு மன்னையில் விதவிதமாய்  காட்டி அருளிய பாங்கை     சரணம்: இருகால் மடக்கி  தவழ்ந்து  வந்திடும் இறையுரு காணில் இல்லறம் மறக்க                         (என்னவென்று ....) ஓராடையுடன் அணிபல வின்றி காட்டிடும் ஓணத்தான் கருநிற மேனியை கண்டு               (என்னவென்று ....) கோலொன்று ஏந்தி கோ மெய்த்திடும் கோபாலனின் வனப்பில் கட்டுண்டு வாய்க்குழறி                     (என்னவென்று ....) இராசாங்க சேவையில் கம்பீரப் புன்னகையோடு இராசனவன் வருவதைக் கண்டு மையலுற்று           (என்னவென்று ....) மோகினியாய் அவன் பத்தி உலாத்துவதில் மோகம் கொண்டு சித்தமு...
Image
பல்லவி: கருணையே வடிவமாய் செங்கமலவல்லி கமலத்தில் வீற்றருளும் மாலவனின் அல்லி சரணம்: பொறுமையே வடிவான ஒளிமிகு திருமுகம் பொல்லா தவரை எரித்திடும் அருள்முகம்                                                                        ( கருணையே.......) மாங்கல்யம் அலங்கரிக்கும் தாயவளின் கண்டம் மாலவனின் மாலையேற்ற மாண்புமிகு கண்டம்                              ( கருணையே.......) கோபாலன் குடிகொண்ட இரத்தின மார்பு கோடி ஒளிக்கீற்றல்மிகு பதக்கமணி மார்பு                               ( கருணையே.......) ஒட்டியாணத் தோடு இயைந்ததவள் மெல்லிடை ஒய்யார நடையனின் இராணியது செவ்விடை                     ...