பல்லவி:
நாம மொன்று போதும் தரணியிலே
நாமெல்லாம் பிறவியின் கரை சேரவே -திரு
சரணம்:
பிணி யனைத்தும் போக்கி அவன்பின்
பித்தாக அலைய கோபாலன் அவன்
(நாம....)
உணவும் வேண்டேன் நீரும் வேண்டேன்
உயிர் புவியில் பிழைக்க அவன்
(நாம....)
பதவியும் வேண்டேன் செல்வமும் வேண்டேன்
பயமின்றி இவ்வுலகில் நிலைப் பெற்றிருக்க
(நாம....)
புகழும் வேண்டேன் உறவும் வேண்டேன்
புண்ணியன் திருவடியில் என்னுயிர் தஞ்சமாக
(நாம....)
பாவ மனைத்தும் பாதை மறக்க
பாடலிலே என் உயிரும் உருக
(நாம....)
ஏதும் வேண்டேன் அனைத்தையும் வெறுத்தேன்
ஏமாப்பாய் அவ னிருக்க எனக்கினி
(நாம....)
திரௌபதி மானம் காத்த நாமம்
திறம்பட என்னையும் காக்கையிலே இனி
(நாம....)
வேழத்தின் இடுக்கண் களைந்த நாமம்
வேண்டும் வரந்தந்திட எனக்கினி
(நாம....)
- ஹரிசரண்
நாம மொன்று போதும் தரணியிலே
நாமெல்லாம் பிறவியின் கரை சேரவே -திரு
(நாம....)
சரணம்:
பிணி யனைத்தும் போக்கி அவன்பின்
பித்தாக அலைய கோபாலன் அவன்
(நாம....)
உணவும் வேண்டேன் நீரும் வேண்டேன்
உயிர் புவியில் பிழைக்க அவன்
(நாம....)
பதவியும் வேண்டேன் செல்வமும் வேண்டேன்
பயமின்றி இவ்வுலகில் நிலைப் பெற்றிருக்க
(நாம....)
புகழும் வேண்டேன் உறவும் வேண்டேன்
புண்ணியன் திருவடியில் என்னுயிர் தஞ்சமாக
(நாம....)
பாவ மனைத்தும் பாதை மறக்க
பாடலிலே என் உயிரும் உருக
(நாம....)
ஏதும் வேண்டேன் அனைத்தையும் வெறுத்தேன்
ஏமாப்பாய் அவ னிருக்க எனக்கினி
(நாம....)
திரௌபதி மானம் காத்த நாமம்
திறம்பட என்னையும் காக்கையிலே இனி
(நாம....)
வேழத்தின் இடுக்கண் களைந்த நாமம்
வேண்டும் வரந்தந்திட எனக்கினி
(நாம....)
- ஹரிசரண்

Comments
Post a Comment