கோவர்த்தன மலை யுயர்த்தி
கோபாலன் நின்ற கதை
கோலா கலமாக கூறிடுவோமே !
வெண்ணெய் யுண்டு அவன்
வெகுளியாய் நின்ற கதை
வெல்லமாய் நாவினிக்க கூவிடுவோமே!....
புல்லாங் குழ லிசைத்து
புருஷோத்தமன் நின்ற கதை
புவியார் செவிபடவே பாடிடுவோமே!
காளிங்கன் மீது அவன்
கால்பதித்து நின்ற கதை
காலை பொழுதினிலே இசைத்திடுவோமே!
இடையன் கன்று களை
இன்பமாக மேய்த்த கதை
இறைவன் நாமத்தோடு இயம்பிடுவோமே!
மன்னை வந்து அவன்
மலர்மகளை மணந்த கதை
மயக்கும் இசையாலே பாடிடுவோமே!
தவ மியற்றும் யாவர்க்கும்
தவப்பலனை யருளும் கதை
தமிழில் சுவையோடு கூறிடுவோமே!
கோபால பிரிய னெந்தன்
கோபாலன் புண்ய கதை
கோதை சொன்னபடி கூவிடுவோமே!
- ஹரிசரண்
கோபாலன் நின்ற கதை
கோலா கலமாக கூறிடுவோமே !
வெண்ணெய் யுண்டு அவன்
வெகுளியாய் நின்ற கதை
வெல்லமாய் நாவினிக்க கூவிடுவோமே!....
புல்லாங் குழ லிசைத்து
புருஷோத்தமன் நின்ற கதை
புவியார் செவிபடவே பாடிடுவோமே!
காளிங்கன் மீது அவன்
கால்பதித்து நின்ற கதை
காலை பொழுதினிலே இசைத்திடுவோமே!
இடையன் கன்று களை
இன்பமாக மேய்த்த கதை
இறைவன் நாமத்தோடு இயம்பிடுவோமே!
மன்னை வந்து அவன்
மலர்மகளை மணந்த கதை
மயக்கும் இசையாலே பாடிடுவோமே!
தவ மியற்றும் யாவர்க்கும்
தவப்பலனை யருளும் கதை
தமிழில் சுவையோடு கூறிடுவோமே!
கோபால பிரிய னெந்தன்
கோபாலன் புண்ய கதை
கோதை சொன்னபடி கூவிடுவோமே!
- ஹரிசரண்
Comments
Post a Comment