ராஜ கோபாலா ராஜ கோபாலா!

மன்னையில் உறை மாயனே ஓடி வருக

கோபாலா !ராஜ கோபாலா! 


மாயங்கள் யாவையுமே அகற்றும் மாயனே! மாலை சூடி தந்த கோதையவள் கொஞ்சும் கள்ளனே!
                                 (ராஜ கோபாலா....)

வினை யாவுஞ் செய்யுதற்கு மூல காரணா!
விலை மதிப்பில்லா பக்தியையே நோக்கும் பூரணா!
                                   (ராஜ கோபாலா....)

ஆய்ச்சிகளின் மனம் மயக்கும் மதுரமோஹனா!
அயல் சிந்தனைகள் உட்புகாது தடுக்கும் நாரணா!
                                    (ராஜ கோபாலா....)


சரணா கதியினிலே உருகும் மாதவா!
சரண் பற்றினார்க்கு வினையறுக்கும் மன்னை மன்னவா!
                                    (ராஜ கோபாலா....)

அடியாரின் மனத்திலுறை தீப ஜோதியே! அல்லல் படுவோரை காத்தருள வந்த நாதியே!
                                     (ராஜ கோபாலா....)

பாமா ருக்மிணியின் ஆசை மன்னவா! பார் போற்றும் எங்கள் மன்னையதில் ஒளிரும் மன்னவா!
                                       (ராஜ கோபாலா....)


செண்பகச் சோலையிலே மணக்கும் மந்திரா! செங்கமல வல்லி நாயகியை மணந்த தந்திரா!
                                       (ராஜ கோபாலா....)


கோபால பிரியனெந்தன் மனதில் வாழ்பவா! கோலம் பலவற்றால் மயக்கி மன்னை மண்ணில் அருள்பவா!
                                         (ராஜ கோபாலா....)
         
                                            - ஹரிசரண்


Comments

Popular posts from this blog