நின்றே அயர்ந் திருப்பாய்

சிறிதேனும் அமர்ந் தருளய்யா - கோபாலா

சிறிதேனும் அமர்ந் தருளய்யா!


செங் கமலத்தில் அவளே வீற்றிருக்க

செவ்வடி சிவக்க நிற்பது ஏனோ?

          ‌        (சிறிதேனும்....)

அரங்கத்தில் முழுதும் ஓய்விலே இருப்பதால்

அகிலத்தின் பொறுப்பை இங்கே சுமந்தாயோ?

    ‌ ‌             (சிறிதேனும்....)

உன் கால்கள் நின்றி ருந்தால்

என் நெஞ்சில் உதிரம் உறையுதே

                  (சிறிதேனும்....)

கண் முன்னே அமரா விடினும்

கண் அயரும் பொழுதேனும் செவிமடுத்து
                 
                     (சிறிதேனும்....)

வந்தவர் வாழ்வையே நீ கண்டால்

வலிக்குமுன் அடிகளை யார் காண்பார்

                 (சிறிதேனும்....)

முத்துப் பவள நாற்காலியும் உனது

முன்னே கொணர்ந்து நான் சேர்க்கிறேன்
                  (சிறிதேனும்....)

சந்நிதியில் சாய்ந்தே தான்  நின்றாலும்

சற்றே நோகாமல் இளைப் பாறவே

               (சிறிதேனும்....)

கோபாலா உனக்கேதும் அல்லல் வந்தால்

கோபால பிரியன் மனம் தாங்கிடுமோ?

                 (சிறிதேனும்....)

   
                                        - ஹரிசரண்

Comments

Popular posts from this blog