திகட்டுமோ கோபால அமிர்தம்!
காணக் காண திகட்டாத கலையமுதே
கார் கால கருமுகிலே கருமணியே!
கூறக் கூற திகட்டாத இன்னமுதே
கூறும் வார்த்தை யாவினும் உட்பொருளே!
அறிய அறிய திகட்டாத அறிவமுதே
அலைமகளின் துணை யமர்ந்த அருவுருவே!
பாடப் பாட திகட்டாத இசையமுதே
பார் படைத்த பரம்பொருளே பழச்சுவையே!
கேட்கக் கேட்க திகட்டாத இறையமுதே
கேள்வியின் விடைபொருளே கதிரொளியே!
உண்ண உண்ண திகட்டாத உள்ளமுதே
உணர்வினுக் கரிய உறைமனமே இறையுணர்வே!
வணங்க வணங்க திகட்டாத உயரமுதே
வசிய மந்திரமே வானாளுஞ் செவ்வடியே!
உணர உணர திகட்டாத விண்ணமுதே
உள்ளத்தின் ஆழ்கடலே ஓயாத பேரலையே!
கோர்க்கக் கோர்க்க திகட்டாத முத்தமுதே
கோபால பிரியனவன் கோவே கோபாலனே!
- ஹரிசரண்
காணக் காண திகட்டாத கலையமுதே
கார் கால கருமுகிலே கருமணியே!
கூறக் கூற திகட்டாத இன்னமுதே
கூறும் வார்த்தை யாவினும் உட்பொருளே!
அறிய அறிய திகட்டாத அறிவமுதே
அலைமகளின் துணை யமர்ந்த அருவுருவே!
பாடப் பாட திகட்டாத இசையமுதே
பார் படைத்த பரம்பொருளே பழச்சுவையே!
கேட்கக் கேட்க திகட்டாத இறையமுதே
கேள்வியின் விடைபொருளே கதிரொளியே!
உண்ண உண்ண திகட்டாத உள்ளமுதே
உணர்வினுக் கரிய உறைமனமே இறையுணர்வே!
வணங்க வணங்க திகட்டாத உயரமுதே
வசிய மந்திரமே வானாளுஞ் செவ்வடியே!
உணர உணர திகட்டாத விண்ணமுதே
உள்ளத்தின் ஆழ்கடலே ஓயாத பேரலையே!
கோர்க்கக் கோர்க்க திகட்டாத முத்தமுதே
கோபால பிரியனவன் கோவே கோபாலனே!
- ஹரிசரண்
Comments
Post a Comment