கரிய நிறத்தானவன் -  எழில்மிகு
அரிய முகத்தானவன்

கனித்த மனத்தானவன் - பற்றிலா
தனித்த உருவானவன்

கண்ணில் தெரியாதவன் - மனத்தின்
பண்ணில் ஒளியானவன்

வினைகள் அறுப்பானவன் - உறுபெரும்
சினைகள் தானானவன்

கலைகள் எல்லாமவன் - இடரறு
பலைகள் வடிவானவன்

இணைகள் இல்லாதவன் - ஐம்பெருந்
திணைகள் ஆனானவன்.

சனத்தில் அன்பானவன் - உயிர்களின்
இனத்தில் உயர்வானவன்.

வேதத்தில் உறைவானவன் -  ஒலிக்கின்ற
நாதத்தில் கரைவானவன்.

பக்திக்கு பித்தானவன் - எட்டாத
முக்திக்கு வித்தானவன்.

கோபாலப் ப்ரியநாதனாம் - திருமன்னை
கோபாலன் கோபாலனே!
                                          - ஹரிசரண்

பொருள்:
பலை - இடர்படும் காலங்களில் ஜபிக்கக் கூடிய மந்திரம்

Comments

Popular posts from this blog