பல்லவி:
இனிமை தாராதே என் வாழ்வில்
இன்னல் காலத்திலே உன் திருநாமத்தை
இடையின்றி மனத்தில் நினைந் துருகுவதைவிட
இனிமை வேறில்லையே கோபாலா!
சரணம்
நிலையற்ற செல்வம் வேண்டேன் பூவுலகில்
நின்திரு நாமமன்றி வேறேதும் வேண்டேன்
(இனிமை...)
உறவேதும் எனக்கு வேண்டேன் இப்பிறப்பில்
உள்ளத்தில் நீயன்றி வேறாரும் வேண்டேன்
(இனிமை...)
புகழும் பதவியும் வேண்டேன் இக்கலியில்
புண்ணியன் பாதமன்றி வேறொன்றும் வேண்டேன்
(இனிமை...)
கல்வி ஞானம் வேண்டேன் இவ்வுலகில்
கண்ணன் உன்னையன்றி வேறொன்றும் வேண்டேன்
(இனிமை...)
மகிழ்ச்சி ஏதும் வேண்டேன் இவ்வாழ்வில்
மதுசூதனன் காட்சியன்றி வேறேதும் வேண்டேன்
(இனிமை...)
கோபால பிரிய னெனக்கு இப்பிறப்பில்
கோபாலனைத் தவிர வேறொன்றும் வேண்டேன்
(இனிமை...)
- ஹரிசரண்
இனிமை தாராதே என் வாழ்வில்
இன்னல் காலத்திலே உன் திருநாமத்தை
இடையின்றி மனத்தில் நினைந் துருகுவதைவிட
இனிமை வேறில்லையே கோபாலா!
சரணம்
நிலையற்ற செல்வம் வேண்டேன் பூவுலகில்
நின்திரு நாமமன்றி வேறேதும் வேண்டேன்
(இனிமை...)
உறவேதும் எனக்கு வேண்டேன் இப்பிறப்பில்
உள்ளத்தில் நீயன்றி வேறாரும் வேண்டேன்
(இனிமை...)
புகழும் பதவியும் வேண்டேன் இக்கலியில்
புண்ணியன் பாதமன்றி வேறொன்றும் வேண்டேன்
(இனிமை...)
கல்வி ஞானம் வேண்டேன் இவ்வுலகில்
கண்ணன் உன்னையன்றி வேறொன்றும் வேண்டேன்
(இனிமை...)
மகிழ்ச்சி ஏதும் வேண்டேன் இவ்வாழ்வில்
மதுசூதனன் காட்சியன்றி வேறேதும் வேண்டேன்
(இனிமை...)
கோபால பிரிய னெனக்கு இப்பிறப்பில்
கோபாலனைத் தவிர வேறொன்றும் வேண்டேன்
(இனிமை...)
- ஹரிசரண்
Comments
Post a Comment