உனது ஆடலில் என் மனம் படும் பாடு அறிவாயா?
மயிற்பீலி அசைந்தாடிட மனமென்னவோ ஆகுதே!
மயக்கமும் வந்தெய்தி இன்பவுணர் கூடுதே!
பதம் மறந்து வாய் குழற
இதம் தனை மனம் ரசிக்குதே!
நிதம் உனது எண்ணம் வந்து
சிதம் தனை புகுத்த லாக்குதே!
மனம் உருகி உன் நாமம்
தினம் போற்றி பாட எண்ணுதே!
இனம் புரியா காத லொன்று
அனம் போல் சுற்றி பறக்குதே!
இதை யாவையும் வினை யாற்றிடு்ம்
விதை நீயன உள முணருதே !
பதை யோடுன் திருப் பாதத்தின்
கதை கூறிட நா ஊறுதே!
கோ பால பிரிய னுள்ளம்
மா பாலம் கடக்க அம்
மூ பாலன் மாம னான
பூ பாலன் கழலைப் பேணுதே!
- ஹரிசரண்
மயிற்பீலி அசைந்தாடிட மனமென்னவோ ஆகுதே!
மயக்கமும் வந்தெய்தி இன்பவுணர் கூடுதே!
பதம் மறந்து வாய் குழற
இதம் தனை மனம் ரசிக்குதே!
நிதம் உனது எண்ணம் வந்து
சிதம் தனை புகுத்த லாக்குதே!
மனம் உருகி உன் நாமம்
தினம் போற்றி பாட எண்ணுதே!
இனம் புரியா காத லொன்று
அனம் போல் சுற்றி பறக்குதே!
இதை யாவையும் வினை யாற்றிடு்ம்
விதை நீயன உள முணருதே !
பதை யோடுன் திருப் பாதத்தின்
கதை கூறிட நா ஊறுதே!
கோ பால பிரிய னுள்ளம்
மா பாலம் கடக்க அம்
மூ பாலன் மாம னான
பூ பாலன் கழலைப் பேணுதே!
- ஹரிசரண்
Comments
Post a Comment