கண்டதுண்டோ எந்த தேசத்திலும்
கண்ணனும் இராமனும் ஓருருவில்
ரகுகுல தோன்றலின் ரம்மியமும்
யதுகுல பாலனின் சிறுகுறும்பும்
(கண்டதுண்டோ......)
வில்லேந்தும் இராமனின் வீரமும்
கோலேந்தும் கண்ணனின் மாயமும்
(கண்டதுண்டோ......)
ஓருருவினிலே இரு குணமும்
ஓயாது அருளிடும் நனிமனமும்
(கண்டதுண்டோ......)
கருடனும் அனுமனும் குழம்பிடவே
கள்ளமும் உள்ளமும் கலந்திருப்பதனை
(கண்டதுண்டோ......)
மன்னையின் மன்னனாய் கோமேய்க்கும்
மன்னனாம் தசரத திருமகவை
(கண்டதுண்டோ......)
தென்னகத் துவாரகை எனுந்தலத்தில்
தெளிந்த இராம கோபாலனை
(கண்டதுண்டோ......)
ஒரு இல்லோடு வாழ்ந்தவனும்
ஒருசேர கண்ணனோடு கலந்திருக்க
(கண்டதுண்டோ......)
இருவரும் வேறில்லை மன்னையிலே
இராமனும் மாயனாய் இருந்திடவே
(கண்டதுண்டோ......)
கோபால இராமனின் எழிலுருவில்
கோபால பிரியனும் மயங்கிடவே
(கண்டதுண்டோ......)
- ஹரிசரண்
கண்ணனும் இராமனும் ஓருருவில்
ரகுகுல தோன்றலின் ரம்மியமும்
யதுகுல பாலனின் சிறுகுறும்பும்
(கண்டதுண்டோ......)
வில்லேந்தும் இராமனின் வீரமும்
கோலேந்தும் கண்ணனின் மாயமும்
(கண்டதுண்டோ......)
ஓருருவினிலே இரு குணமும்
ஓயாது அருளிடும் நனிமனமும்
(கண்டதுண்டோ......)
கருடனும் அனுமனும் குழம்பிடவே
கள்ளமும் உள்ளமும் கலந்திருப்பதனை
(கண்டதுண்டோ......)
மன்னையின் மன்னனாய் கோமேய்க்கும்
மன்னனாம் தசரத திருமகவை
(கண்டதுண்டோ......)
தென்னகத் துவாரகை எனுந்தலத்தில்
தெளிந்த இராம கோபாலனை
(கண்டதுண்டோ......)
ஒரு இல்லோடு வாழ்ந்தவனும்
ஒருசேர கண்ணனோடு கலந்திருக்க
(கண்டதுண்டோ......)
இருவரும் வேறில்லை மன்னையிலே
இராமனும் மாயனாய் இருந்திடவே
(கண்டதுண்டோ......)
கோபால இராமனின் எழிலுருவில்
கோபால பிரியனும் மயங்கிடவே
(கண்டதுண்டோ......)
- ஹரிசரண்
Comments
Post a Comment