இன்று ஆடி ஸ்வாதி , ஸ்ரீ கருடாழ்வார் திருநக்ஷத்ரம், பெரிய திருவடிக்கு பாமாலை சமர்ப்பணம்.
உனையன்றி சேவகனும் உண்டோ
தனையே அர்பணித்த புள்ளரசே!
மன்னையின் அரசனையே உந்தன்
மகிமைமிகு தோள்களில் ஏந்தியவா!
(உனையன்றி...)
அமிர்த கலசத்தை கரத்திலேந்தி
அண்டமாளும் நாயகனை தோளிலேந்தும்
(உனையன்றி...)
அரவுதனை ஆபரணமா யணிந்து
அழகாய் விண்ணூரும் ஆழ்வானே!
(உனையன்றி...)
பரந்தாமன் திருவடியை தாங்கியே
பரவசமுரும் பெரிய திருவடியே!
(உனையன்றி...)
விஷ்ணு சித்தனாகவே அவதரித்து
வியத்தகு பல்லாண்டு படியவனே!
(உனையன்றி...)
எவரும் பெற்றிராத பாக்கியத்தை
எளிதில் பெற்ற கருடதேவனே!
(உனையன்றி...)
பறவை இனத்திலே மாணிக்கமே
பயம் நீக்கிடும் பக்ஷிராஜனே!
(உனையன்றி...)
பொற்றாமரை மார்பன் பாதத்தினால்
பொன்மேனி கொண்டருளும் செம்பருந்தே!
(உனையன்றி...)
தாயவள் திருச்சன்னிதி நேர்முன்னே
தாழ்த்தி நின்றருளும் பெண்வடிவமே!
(உனையன்றி...)
வாகையின் சின்னமாய் கொடிகளிலே
வாழ்ந்திடும் நற்சகுன மூர்த்தியே!
(உனையன்றி...)
கோபால பிரியனெந்தன் மன்னவனை
கோலோச்சி தாங்கிவரும் அற்புதனே!
(உனையன்றி...)
- ஹரிசரண்
உனையன்றி சேவகனும் உண்டோ
தனையே அர்பணித்த புள்ளரசே!
மன்னையின் அரசனையே உந்தன்
மகிமைமிகு தோள்களில் ஏந்தியவா!
(உனையன்றி...)
அமிர்த கலசத்தை கரத்திலேந்தி
அண்டமாளும் நாயகனை தோளிலேந்தும்
(உனையன்றி...)
அரவுதனை ஆபரணமா யணிந்து
அழகாய் விண்ணூரும் ஆழ்வானே!
(உனையன்றி...)
பரந்தாமன் திருவடியை தாங்கியே
பரவசமுரும் பெரிய திருவடியே!
(உனையன்றி...)
விஷ்ணு சித்தனாகவே அவதரித்து
வியத்தகு பல்லாண்டு படியவனே!
(உனையன்றி...)
எவரும் பெற்றிராத பாக்கியத்தை
எளிதில் பெற்ற கருடதேவனே!
(உனையன்றி...)
பறவை இனத்திலே மாணிக்கமே
பயம் நீக்கிடும் பக்ஷிராஜனே!
(உனையன்றி...)
பொற்றாமரை மார்பன் பாதத்தினால்
பொன்மேனி கொண்டருளும் செம்பருந்தே!
(உனையன்றி...)
தாயவள் திருச்சன்னிதி நேர்முன்னே
தாழ்த்தி நின்றருளும் பெண்வடிவமே!
(உனையன்றி...)
வாகையின் சின்னமாய் கொடிகளிலே
வாழ்ந்திடும் நற்சகுன மூர்த்தியே!
(உனையன்றி...)
கோபால பிரியனெந்தன் மன்னவனை
கோலோச்சி தாங்கிவரும் அற்புதனே!
(உனையன்றி...)
- ஹரிசரண்
Comments
Post a Comment