மன்னார்குடி ஸ்ரீ செங்கமலத்தாயார் ஆடி வெள்ளி புஷ்பங்கி சேவையை முன்னிட்டு பாமாலை சமர்ப்பணம்.
மாலோன் மலர்மார்பிலே வீற்றிருக்கும் அன்னைக்கு
மாலை பொழுதினிலே மலர் கோலமாம்
மன்னையின் மாயனவன் கரம்பிடித்த வனிதைக்கு
மல்லிகை மலராலே பாத சலங்கையாம்
(மாலோன்...)
செண்ப காரண்யத்தில் கொலுவிருக்கும் தேவிக்கு
செண்பக மலராலே கர்ண புஷ்பமாம்
(மாலோன்...)
துன்பமொன்று வருமாயின் துடைத்தருளும் பார்கவிக்கு
துழாய் சரத்தாலே தோள் மாலையாம்
(மாலோன்...)
அண்டமெல்லாம் அமர்ந்தருளும் செல்வவளர் நாயகிக்கு
அரளி மலராலே மேல் ஆடையாம்
(மாலோன்...)
சயணத்தான் கழலருகே வீற்றருளும் லக்ஷ்மிக்கு
சம்பங்கி மலராலே திரு வாபரணமாம்
(மாலோன்...)
தானே செல்வவளம் பொழிந்தருளும் தாய்க்கு
தாமரை இதழ் கொண்டே சிம்மாசனமாம்
(மாலோன்...)
தாமரையில் உதித்த திருமாலவன் திருமகளுக்கு
தாழம் பூவாலே எழில்மிகு சடையாம்
(மாலோன்...)
முகுந்தனின் உளம்கவர்ந்த உலகாளும் அரசிக்கு
முல்லை மலராலே விரி பாவடையாம்
(மாலோன்...)
செவ்வாய் சிரித்திருக்கும் செங்கமல வல்லிக்கு
செங்கழுநீர் மலராலே கை வளையலாம்
(மாலோன்...)
நீலவண்ண கண்ணனின் ஈடில்லா மகிஷிக்கு
நீலோத் பவத்தாலே இடை அணிகளாம்
(மாலோன்...)
பார்படைத்த பரந்தாமனின் பற்றுமிக்க திருவுக்கு
பாரிஜாதத் தாலே சிகைக் கொண்டையாம்
(மாலோன்...)
மறைதந்த கோபாலனின் குறைவில்லா சுந்தரிக்கு
மரிக் கொழுந்து மொட்டாலே மூக்குத்தியாம்
(மாலோன்...)
கோபால பிரியனெந்தன் உயிர்கொடுத்த தாயார்க்கு
கோடல் மலராலே செந் திலகமாம்
(மாலோன்...)
- ஹரிசரண்

Comments
Post a Comment