தென் துவாரகை மன்னனே..... (அம்மே நாராயணா மெட்டில்) தென் துவாரகை மன்னனே ருக்மினியின் கண்ணனே பாமாப் பிரிய சுந்தரா இராஜ கோபாலனே (2) கோபிலாதி முனிவர்க்கு வரமளித்து அருளிளாய் ஐஐந்து மேழு சேவைதனை காண்பித்து மகிழ்த்தினாய் (தென் துவாரகை ....) செண்பகச் சோலையிலே குடிகொண்டு விளங்கினாய் செங்கமலவல்லியின் கரம் பிடித்து அருளினாய் (தென் துவாரகை ....) நாற்கரமும் ஆயுதங்கள் ஏந்தி அபயம் தந்திடும் பரவாசு தேவனாய் காட்சி தரும் கண்ணனே (தென் துவாரகை ....) ஸ்வாயம்ப விமானத்தின் கீழருளும் அழகனே மாடு மேய்க்கும் கோலத்திலே கண் கவரும் மாயனே (தென் துவாரகை ....) புன்சிரிப்பில் உலகோரை கொள்ளை கொள்ளும் அற்புதா கோபியர்கள்...