ஸ்ரீ இராஜகோபாலன் திருப்பள்ளியெழுச்சி
செங்கதிரோன் கீழ்த்திசை வந்துதித்தான்
செங்கமலம் நீர்நிலையில் அரும்பியதுகாண்
செங்கமல வல்லியும் துயில் விடுத்தாள்
செம்பொன் மேனியனே பள்ளி எழுந்தருள்வாய்..
புள்ளினத் தோசைகள் செவி மடுப்பாய்
புள்ளினத் தரசனும் பணித் திருக்கிறான்
புண்ணிய பலன் பல தந்தருள்வோனே
புலர்ந்தது பொழுது பள்ளி எழுந்தருள்வாய்...
வேழமும் பசுக்களும் வாயில் வந்தது
வேதமும் ஓதத் தொடங்க லானது
வேறொன்று மறியாத பக்தர்கள் கண்டு
வேகமாய் பாலனே பள்ளி எழுந்தருள்வாய்...
கலியும் அதன் போக்கு ஆடுவதுகாண்
கள்ளங்கள் எவ்விடமும் சூழ லானது
கபடங்கள் ஆழ்மனதில் பதிய லானது
கன்றுகள் மேய்ப்பானே பள்ளி எழுந்தருள்வாய்....
பசும்பால் வெண்ணெயும் கொண்டு வந்தோம்
பனைவெல்லமும் கற்கண்டும் முன்னே வைத்தோம்
பலவகைக் கனிகளும் அடுக்கி வைத்தோம்
பண்ணிசை கேட்டு பள்ளி எழுந்தருள்வாய்....
கோயில் மணியும் ஒலிக்க லானது
கோமாதா உனை நோக்கி நிற்கலானது
கோவிந்தா எனும் கோஷம் செவியுற்றே
கோபிகை நாதனே பள்ளி எழுந்தருள்வாய்....
மஞ்சளும் துகிலும் ஏந்தி விற்பன்னர்கள்
மந்திர ஒலிகளை சொல்ல லானர்
மங்கைகள் உனை காண வந்தணைந்தார்
மலர்விழி திறந்தே பள்ளி எழுந்தருள்வாய்..
நாராயணா எனுந் திரு நாமத்தையே
நாபி யிலிருந்து ஜபிக்க லானோம்
நால் வேத சாரங்கள் ஓதலானோம்
நான்முகனுக் கப்பனே பள்ளி எழுந்தருள்வாய்...
அரசக் கடமைகள் ஆற்ற வாராய்!
அருளும் வரங்கள் பல உள்ளது
அரவனை துயில் விடுத் தரியமாலே!
அழகாய் நீ பள்ளி எழுந்தருள்வாய்...
கோதை அழைத்தால் தான் விழிப்பாயோ?
கோவிந்த நாமத்தையே எண்ணி வாழும்
கோபால பிரியன் வந்து கூவுகின்றேன்
கோபாலா! என்கொழுந்தே! பள்ளி எழுந்தருள்வாய்....
-- ஹரிசரண்
செங்கதிரோன் கீழ்த்திசை வந்துதித்தான்
செங்கமலம் நீர்நிலையில் அரும்பியதுகாண்
செங்கமல வல்லியும் துயில் விடுத்தாள்
செம்பொன் மேனியனே பள்ளி எழுந்தருள்வாய்..
புள்ளினத் தோசைகள் செவி மடுப்பாய்
புள்ளினத் தரசனும் பணித் திருக்கிறான்
புண்ணிய பலன் பல தந்தருள்வோனே
புலர்ந்தது பொழுது பள்ளி எழுந்தருள்வாய்...
வேழமும் பசுக்களும் வாயில் வந்தது
வேதமும் ஓதத் தொடங்க லானது
வேறொன்று மறியாத பக்தர்கள் கண்டு
வேகமாய் பாலனே பள்ளி எழுந்தருள்வாய்...
கலியும் அதன் போக்கு ஆடுவதுகாண்
கள்ளங்கள் எவ்விடமும் சூழ லானது
கபடங்கள் ஆழ்மனதில் பதிய லானது
கன்றுகள் மேய்ப்பானே பள்ளி எழுந்தருள்வாய்....
பசும்பால் வெண்ணெயும் கொண்டு வந்தோம்
பனைவெல்லமும் கற்கண்டும் முன்னே வைத்தோம்
பலவகைக் கனிகளும் அடுக்கி வைத்தோம்
பண்ணிசை கேட்டு பள்ளி எழுந்தருள்வாய்....
கோயில் மணியும் ஒலிக்க லானது
கோமாதா உனை நோக்கி நிற்கலானது
கோவிந்தா எனும் கோஷம் செவியுற்றே
கோபிகை நாதனே பள்ளி எழுந்தருள்வாய்....
மஞ்சளும் துகிலும் ஏந்தி விற்பன்னர்கள்
மந்திர ஒலிகளை சொல்ல லானர்
மங்கைகள் உனை காண வந்தணைந்தார்
மலர்விழி திறந்தே பள்ளி எழுந்தருள்வாய்..
நாராயணா எனுந் திரு நாமத்தையே
நாபி யிலிருந்து ஜபிக்க லானோம்
நால் வேத சாரங்கள் ஓதலானோம்
நான்முகனுக் கப்பனே பள்ளி எழுந்தருள்வாய்...
அரசக் கடமைகள் ஆற்ற வாராய்!
அருளும் வரங்கள் பல உள்ளது
அரவனை துயில் விடுத் தரியமாலே!
அழகாய் நீ பள்ளி எழுந்தருள்வாய்...
கோதை அழைத்தால் தான் விழிப்பாயோ?
கோவிந்த நாமத்தையே எண்ணி வாழும்
கோபால பிரியன் வந்து கூவுகின்றேன்
கோபாலா! என்கொழுந்தே! பள்ளி எழுந்தருள்வாய்....
-- ஹரிசரண்
Comments
Post a Comment