என்ன புண்ணியம் செய்தனோ?
முன்னப் பிறந்த பிறவியிலே! - நான்
மன்னையிலே பிறந்து வளர்ந்து
மன்னையம் பதியையே நினைந்துருக
(என்ன புண்ணியம்.....)
அரன் குலத்திலுதித்த என்னை
அச்சுதன் பால் ஈர்த்துவிட
(என்ன புண்ணியம்.....)
கண்ணன் தாழ் பணிந்து
கதியே அவனென்றிட அடியவன்
(என்ன புண்ணியம்.....)
உள்ளம் கொள்ளை கொண்டிடும்
உலகளந்த மூர்த்தி காண
(என்ன புண்ணியம்.....)
புன்னகை யொன்று மனம்பறித்திடும்
புண்ணியனின் முகம் காண
(என்ன புண்ணியம்.....)
யசோதை கண்ட லீலையை
யதார்த்தமாய் மன்னையில் ரசிக்க
(என்ன புண்ணியம்.....)
கீதை பிறந்த பூமியில்
கீற்றாயினும் நானிருக்க முன்னம்
(என்ன புண்ணியம்.....)
செண்ப காரண்யத் துள்
செல்லப் பிள்ளை கண்டிட
(என்ன புண்ணியம்.....)
பிறவி யறுக்கும் பேறருளும்
பிரிய நாயகன் பால்வீழ
(என்ன புண்ணியம்.....)
வாடாதத் துழாயணி தோளனை
வாழ்த்தி வணங்கிப் பணிய
(என்ன புண்ணியம்.....)
வாசுதேவ நாமம் நாளும்
வாயார கூறி மகிழ
(என்ன புண்ணியம்.....)
கோபாலன் பாதம் பற்றி
கோலங்கள் கண்டு மயங்க
(என்ன புண்ணியம்.....)
விண்ணும் மண்ணும் கண்டுமனம்
வியக்கும் மூர்த்தி காணநான்
(என்ன புண்ணியம்.....)
பள்ளிகொண்ட பரமன் அவனை
பண்ணிலே துதித்துப் பாட
(என்ன புண்ணியம்.....)
மலரன்ன மார்பிலே மாலவனின்
மங்கை அருளக் காண
(என்ன புண்ணியம்.....)
வினை யாற்றும் விஷ்ணுவே
விளையாடும் அழகை காண
(என்ன புண்ணியம்.....)
பேரண்ட காரணன் இனிக்க
பேசும் உரையை கேட்க
(என்ன புண்ணியம்.....)
மழலை மாறா மெல்லிதழை
மயங்கி கிறங்கி கண்டிட
(என்ன புண்ணியம்.....)
செவ்வனே இருந்த என்னை
செவ்வடியால் கட்டு விக்க
(என்ன புண்ணியம்.....)
ஐயைந்து மேழு சேவை
ஐய மின்றி கண்டிட
(என்ன புண்ணியம்.....)
மனம் போகும் போக்குமாறி
மலர் மார்பனை பற்றிட
(என்ன புண்ணியம்.....)
துவாபரத்தில் தொலைத்த வாய்ப்பைத்தென்
துவாரகையில் கண்டு களிக்க
(என்ன புண்ணியம்.....)
மண்ணை யுண்ட இராஜனை
மன்னார் குடியில் காண
(என்ன புண்ணியம்.....)
கோலம் கண்டு பித்தாக்கி
கோபால பிரிய னாக
(என்ன புண்ணியம்.....)
-ஹரிசரண்
முன்னப் பிறந்த பிறவியிலே! - நான்
மன்னையிலே பிறந்து வளர்ந்து
மன்னையம் பதியையே நினைந்துருக
(என்ன புண்ணியம்.....)
அரன் குலத்திலுதித்த என்னை
அச்சுதன் பால் ஈர்த்துவிட
(என்ன புண்ணியம்.....)
கண்ணன் தாழ் பணிந்து
கதியே அவனென்றிட அடியவன்
(என்ன புண்ணியம்.....)
உள்ளம் கொள்ளை கொண்டிடும்
உலகளந்த மூர்த்தி காண
(என்ன புண்ணியம்.....)
புன்னகை யொன்று மனம்பறித்திடும்
புண்ணியனின் முகம் காண
(என்ன புண்ணியம்.....)
யசோதை கண்ட லீலையை
யதார்த்தமாய் மன்னையில் ரசிக்க
(என்ன புண்ணியம்.....)
கீதை பிறந்த பூமியில்
கீற்றாயினும் நானிருக்க முன்னம்
(என்ன புண்ணியம்.....)
செண்ப காரண்யத் துள்
செல்லப் பிள்ளை கண்டிட
(என்ன புண்ணியம்.....)
பிறவி யறுக்கும் பேறருளும்
பிரிய நாயகன் பால்வீழ
(என்ன புண்ணியம்.....)
வாடாதத் துழாயணி தோளனை
வாழ்த்தி வணங்கிப் பணிய
(என்ன புண்ணியம்.....)
வாசுதேவ நாமம் நாளும்
வாயார கூறி மகிழ
(என்ன புண்ணியம்.....)
கோபாலன் பாதம் பற்றி
கோலங்கள் கண்டு மயங்க
(என்ன புண்ணியம்.....)
விண்ணும் மண்ணும் கண்டுமனம்
வியக்கும் மூர்த்தி காணநான்
(என்ன புண்ணியம்.....)
பள்ளிகொண்ட பரமன் அவனை
பண்ணிலே துதித்துப் பாட
(என்ன புண்ணியம்.....)
மலரன்ன மார்பிலே மாலவனின்
மங்கை அருளக் காண
(என்ன புண்ணியம்.....)
வினை யாற்றும் விஷ்ணுவே
விளையாடும் அழகை காண
(என்ன புண்ணியம்.....)
பேரண்ட காரணன் இனிக்க
பேசும் உரையை கேட்க
(என்ன புண்ணியம்.....)
மழலை மாறா மெல்லிதழை
மயங்கி கிறங்கி கண்டிட
(என்ன புண்ணியம்.....)
செவ்வனே இருந்த என்னை
செவ்வடியால் கட்டு விக்க
(என்ன புண்ணியம்.....)
ஐயைந்து மேழு சேவை
ஐய மின்றி கண்டிட
(என்ன புண்ணியம்.....)
மனம் போகும் போக்குமாறி
மலர் மார்பனை பற்றிட
(என்ன புண்ணியம்.....)
துவாபரத்தில் தொலைத்த வாய்ப்பைத்தென்
துவாரகையில் கண்டு களிக்க
(என்ன புண்ணியம்.....)
மண்ணை யுண்ட இராஜனை
மன்னார் குடியில் காண
(என்ன புண்ணியம்.....)
கோலம் கண்டு பித்தாக்கி
கோபால பிரிய னாக
(என்ன புண்ணியம்.....)
-ஹரிசரண்

Comments
Post a Comment