Posts

Showing posts from 2017
Image
"உலகளந்த மாயா."  எனும் பாடலை (மாடு மேய்க்கும் கண்ணே ! ) மெட்டில் எழுதி பாடியுள்ளேன். இது இராதைக்கும் கண்ணனுக்கும் இடையே உள்ள உரையாடலாக வடிவமைத்துள்ளேன்.பிழையிருப்பின் பொறுத்தருள்க. உல களந்த மாயா உன் மேலெனக்கு நோயா பவள மணிச்சிறு வாயை பள்ளி யறையில் கண்டு பசி யறியேன் தூக்கம்       அது மறியேன் மாயவனே !                 (உலகளந்த) ..... நான் மட்டும் விதிவிலக்கா நாழி யும்உனை மறவேன் நாடி யேநான் வரவே நாணி டவே நீ வருவாய் என் மார்பில் வாழும் வல்லி என் மனதில் பூத்த அல்லி கார் முகம் கண்டுவிட்டால் காதல் தோன்றி விடும் காமமிது இல்லை யடா கார் குழலன் மாயமடா                  (உலகளந்த ....) கள்ளம் எதுவு மில்லை கபடம் நான் அறியேன் கனிவாய்ச் செல்வி அவள் கண்ணனையே கட்டி விட்டாள்                  (என் மார்பில்...) மன மென்றும் உன்னருகில் மயங்கியே சுற்று தடா மரகத திரு வடியில் மண்டி யிட்டு ஏங்குதடா           ...
Image
அடியேன் "கார்முகிலே கண்ணா" எனும் பாடலை மாடு மேய்க்கும் கண்ணா மெட்டில் எழுதி பாடியுள்ளேன் பிழையிருப்பின் பொறுத்தருள்க. கார்முகிலே கண்ணா ! கோபாலா ! மனமும் கல்லானதோ?                     கண்ணா !..... நாடியே நான் வந்திட ஓடியே செல்வ தென்ன வாடியே நான் இருக்க ஆடியே பாடு வாயோ? (தேடியே நீ வருவாய்)                               (கார்முகிலே    கண்ணா ! ) கோபியர் கூட்டத் தோடு கோலாட்டம் ஆடு கின்றாய் கோதை இங்கே ஏக்கத்தில் கோபாலா கண்டு கொள்வாய் வாடு கையில் துன்பம் நாடு கையில் மாறும் கோபி கையை விடுத்து கோபாலா நீ வருவாய்            (கார்முகிலே     கண்ணா ! )
Image
"கண்ணில் காண்பதெல்லாம் கோபாலனே" எனும் பாடலை (கஸ்தூரி திலகம் நாராயணம் மெட்டில்) அடியேன் எழுதி பாடியுள்ளேன். இஃது இராஜகோபாலஸ்வாமிக்கு சமர்ப்பணம்.பிழையிருந்தால் பொறுத்தருள்க. கண்ணில் காண்ப தெல்லாம் கோபாலனே மண்ணில் பிறப்ப தெல்லாம் கோபாலனே எண்ணில் அடங்காததும் கோபாலனே பண்ணில் மயங்கு வதும்  கோபாலனே விண்ணில் வண்ணம் அந்த கோபாலனே உண்ணில் வர மளிப்பான் கோபாலனே                          கண்ணில் காண்ப தெல்லாம்.... உன்னி லிருப்ப வனும் கோபாலனே என்னி லொளிர்ப வனும் கோபாலனே தன்னி கரற்ற வனும் கோபாலனே கன்னி அவள் மனதில் கோபாலனே                          கண்ணில் காண்ப தெல்லாம்.... நல்லதும் தீயதும் கோபாலனே கல்லதும் மண்ணதும் கோபாலனே உள்ளதும் இல்லதும் கோபாலனே பள்ளதும் கள்ளதும் கோபாலனே                          கண்ணில் காண்ப தெல்லாம்.... உன்னை காப்பவனும் கோபாலனே என்னை ஆள்பவனும் கோபாலனே மன்னை மன...
Image
அடியேன் எழுதி பாடிய ஸ்ரீ இராஜகோபாலஸ்வாமி நீராட்டம் , ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று இராஜகோபாலனுக்காக எழுதி சமர்ப்பிக்கபட்டது. பிழையிருப்பின் பொருத்தருள்க. 1)வெண்ணை பற்றுகள் முகமெல்லாம் படிந்ததோடன்றி மண்ணை யுமாங்கே விழுங்கிநீ காண்பித்தாய் கண்ணை பறிக்கும் கார்முக மண்டலமது விண்ணை யொத்தொளிர கோபாலா நீராடவாராய் 2)ஆடி யிலுதித்த கேட்டை நன்னாளில் நாடி நான்வந்துன்னை நீராட்டும் பொழுதில் ஓடி நீசென்றால் நான்இனிஎன் செய்வேன் வாடி டுமுகத்தை கண்டுகோபாலா நீராடவாராய் 3)முனி வரின்தவப்பயனாய் மன்னைக்கு வந்தநீ தணி குரல்கேட்டும் வாராயோ கல்மனமோ பணி யென்னவேறெனக்கு நீநீராட வேண்டும் கனி யுனக்குநான் தருவேன்கோபாலா நீவாராய் 4)துகி லோடு புனுகும் கொண்டுன்னை அகி லம்போற்றநான் நீராட்ட வேண்டும்  மகி முப்பூஅன்ன திருமேனியை நீராட்ட முகி லுமாங்கே அழைப்பதுகண்டு  நீவாராய் 5)புன்னை மீதேறி நீசெய்த சேட்டைகள் நானறிவேன் மன்னை யிலும் அதைநீ மறக்காமல் செய்வித்தாயோ தன்னை மறந்துன்னை கோபியர் அழைக்கு முன்னே என்னை மகிழ்த்த கோபாலா நீராட வாராய் 6)வாயில் அண்டம் காண்பித்த மணிவண்ணா காயில...
Image
ஸ்ரீ இராஜகோபால கிளிக்கன்னி
தென் துவாரகை மன்னனே..... (அம்மே நாராயணா மெட்டில்) தென் துவாரகை மன்னனே ருக்மினியின் கண்ணனே பாமாப் பிரிய சுந்தரா இராஜ கோபாலனே (2) கோபிலாதி முனிவர்க்கு வரமளித்து அருளிளாய் ஐஐந்து மேழு சேவைதனை காண்பித்து மகிழ்த்தினாய்                  (தென் துவாரகை ....)  செண்பகச் சோலையிலே குடிகொண்டு விளங்கினாய் செங்கமலவல்லியின் கரம் பிடித்து அருளினாய்                    (தென் துவாரகை ....) நாற்கரமும் ஆயுதங்கள் ஏந்தி அபயம் தந்திடும் பரவாசு தேவனாய் காட்சி தரும் கண்ணனே                                            (தென் துவாரகை ....) ஸ்வாயம்ப விமானத்தின் கீழருளும் அழகனே மாடு மேய்க்கும் கோலத்திலே கண் கவரும் மாயனே                             (தென் துவாரகை ....) புன்சிரிப்பில் உலகோரை கொள்ளை கொள்ளும் அற்புதா கோபியர்கள்...
Image
ஸ்ரீ செம்பகேசனே ...... எனும் பாடலை (ஸ்ரீ ரங்கநாதனே.... மெட்டில்) அடியேன் எழுதி பாடியுள்ளேன். இப்பாடல் மன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபாலஸ்வாமிக்கு சமர்ப்பணம். பிழையிருப்பின் பொருத்தருள்க...  ஸ்ரீ செம்பகேசனே திருமன்னை வாசனே பசு கன்றுகள் மேய்க்கும் கோபாலனே பொற்கோல் ஒரு இன்பம் திருமுகம் மறு இன்பம் திருவடியதும் இன்பம் திருவுரு பேரின்பம்                                      (ஸ்ரீ செம்பகேசனே ....) திருமாமகள் பதக்கமும் சிறுகுழந்தை அணிகளும் அன்றாடம் தரிக்கின்ற கோபாலனே கன்றுகள் மேய்க்கின்றாய் உயிர்களை காக்கின்றாய் உளம்தனை பறிக்கின்றாய் மாயங்கள் செய்கின்றாய்                                      (ஸ்ரீ செம்பகேசனே ....)  தித்திக்கும் செவ்விதழ்  நெழிவோடு பொன்னிடை  ஒய்யாரமாய் நிற்கும் கோபாலனே  மதியில் ஒளியாவாய்  கதியில் அரணாவாய்  சதியில் தீயாவாய்  ...