கணமும் தொடர்கின்றாய் கருங்குழல் அழகனே!

கருணை பொழின்கின்றாய் கார்மேனி குழந்தையே!


அகத்திலும் புறத்திலும் நீக்கமற நிறைந்திரும்

அரியே உங்கருணை கடந்தீர்ப்ப  தெங்கனம்!


விழியில் கண்டயாவும் உன்பார்வை சேருதே

மொழியில் சொன்னயாவும்  உன்மனதினில் பதியுதே



எந்துன்பம் யாவும் உன்பணிகள் ஆகுதே

எண்ணங்கள் யாவுமே உன்நாமம் கூறுதே



விந்தையாவும் நிகழ்த்துகின்ற தென்துவாராகை மூர்த்தியே!

விலையில்லா கருணைக்கு  பக்திகொண்டு தீர்ப்பனே 



அடியார் மேலுனக்கு ஏனிப்படி  கருணையோ

அழியாப் புகழ்கொண்ட ஆயப் பிரானே



சிறியேன் உன்லீலை புறிந்திலா அறிவிலி

சிந்தையில் உனைத்தவிர வேறொன்றும் அறிந்திலேன்


கோபால பிரியனை மேய்த்தருளும் ஆயனே

கோபால நமங்கூறி உன்திருவடி சேர்வனே

                                       - ஹரிசரண்

Comments

Popular posts from this blog