மன்னைக்கு நிகரேது!


மாங்கனிக்கு பொன் னிறைத்த வள்ளலெனும்

மாயனின் புகழிடம் இராஜ மன்னார்குடியே!




பூதகியின் பாலருந்தி உயிருறிஞ்சி முனிவரை

பூரிக்கச் செய்தஇடம் இராஜ மன்னார்குடியே!





பிருகு மகள் பார்கவியின் கரம்பிடித்து

பிரியமுடன் அமர்ந்தஇடம் இராஜ மன்னார்குடியே!





உரலில் கட்டுண்டு மரம் பிளந்த

உன்னத பூமியது இராஜ மன்னார்குடியே!





கோபிகையின் உடை திருடிய கள்ள

கோபாலன் இருக்குமிடம் இராஜ மன்னார்குடியே!





கோவர்த்தன கிரியை உயர்த்தி இந்திரனின்

கோபத்தை அழித்தஇடம் இராஜ மன்னார்குடியே!




கோபிலாதி முனிவர்க்கு சேவை பலகாட்டிய

கோவேந்தன் அருளுமிடம்  இராஜ மன்னார்குடியே!





ஆய்க்குல கன்னியரொடு  ஹரித்ரா நதியிலே

ஆனந்தித்த இடமும் இராஜ மன்னார்குடியே!




மண்ணையுண்டு அண்டம் காட்டிய மாய

மழலையின் சிறப்பிடம்
இராஜ மன்னார்குடியே!





பக்தி என்னும் பெருங் கரையில்

பக்தனை சேர்க்குமிடம் இராஜ மன்னார்குடியே!





வானாளுந் தேவர்கள் தினம் வணங்கும்

வானுயர்ந்த பொன்னிடம் இராஜ மன்னார்குடியே!




தர்மத்தின் காவியமாம் கீதையை மீண்டும்

தரமாக உரைத்தஇடம்
இராஜ மன்னார்குடியே!





கண்ணனே விருப்புற்று கருணையின் உருவாக

களிப்போடு நிற்குமிடம் இராஜ மன்னார்குடியே!





கோபாலப் ரியனை ஆட்கொள்ள மனமுவந்தஇராஜ

கோபாலன் திவ்யஇடம்
இராஜ மன்னார்குடியே!
                                       - ஹரிசரண்                                   
     

Comments

Popular posts from this blog