வந்ததே நன்னாள் வரமனைத்தும் பெறுநாள்

வசுதேவர்க்கு மகனாய் அவன் அவதரிக்க

வஞ்சனை யாவும் உருமறந் தோட

                        (வந்ததே...)

தேவகி மணிவயிற்றில் வந்து உதித்து

தேனாய் தித்திக்கும் நகையதின் ஒளியால்

                        (வந்ததே...)

நாற்கரமும் ஆயுத மேந்தி இங்கே

நாரணன் நம்பி வந்து தவழ்ந்ததால்

                        (வந்ததே...)

விண்ணிருந் திறங்கி மண்ணுலகு புகுந்து

வியப்பில் ஆழ்த்தும் கண்ணனின் வரவால்

                        (வந்ததே...)

துவாபர யுகத்தினில் தர்மத்தை ஸ்தாபித்து

துன்ப மனைத்தையும் தூசாக்க பிறந்ததால்

                        (வந்ததே...)


காலாக் கிரஹமும் புனிதம் எய்திட

கார் நிறமேனியன் கவின்மிகு வரவால்

                        (வந்ததே...)

தெற்கிலே ஒரு துவாரகை நகரில்

தெந்நாட்டை அலங்கரிக்க இறையுருவின் வரவால்

                        (வந்ததே...)

மனித மனத்தின் மாயையை அறுக்க

மன்னையில்  மன்னனாய் பாலனின் பிறப்பால்

                        (வந்ததே...)

கோபால பிரியனை ஆட்கொள்ளவே இங்கு

கோபாலன் குழந்தையாய் வந்தருள் புரிய
                        (வந்ததே...)

                        - ஹரிசரண்

Comments

Popular posts from this blog