"காண மறந்தாயோ ப்ரியனே"! -எனக்
காணாக் கண்களுக்கு காட்டுவித்த எங்கோவே!
காலமெல்லாம் உன் திருவடியை கண்டு
காதல் கொள்ளவைத்த காரணம் யாதோ?..
இனிய கானத்திலுள்ள பிரியமோ?
இதழ் பேசுந் தமிழிலுள்ள மாயமோ?
பலன் கேட்காத பக்தியோ?
பந்தத்தால் உருவான சக்தியோ?
பூர்வ ஜென்மத்தின் தொடற்சியோ?
பூமார்பு மாமகளின் கிளர்ச்சியோ?
கோபால நாமத்தின் மகிமையோ?
கோவிந்த நாமத்தின் இனிமையோ?
விளையாட்டின் தொடக்க முயற்சியோ?
விருப்பத்தை விடுத்துவர பயிற்சியோ?
கோபால பிரியனின் முனைப்போ?
கோபாலா! உன்திருவடி அணைப்போ?
- ஹரிசரண்
காணாக் கண்களுக்கு காட்டுவித்த எங்கோவே!
காலமெல்லாம் உன் திருவடியை கண்டு
காதல் கொள்ளவைத்த காரணம் யாதோ?..
இனிய கானத்திலுள்ள பிரியமோ?
இதழ் பேசுந் தமிழிலுள்ள மாயமோ?
பலன் கேட்காத பக்தியோ?
பந்தத்தால் உருவான சக்தியோ?
பூர்வ ஜென்மத்தின் தொடற்சியோ?
பூமார்பு மாமகளின் கிளர்ச்சியோ?
கோபால நாமத்தின் மகிமையோ?
கோவிந்த நாமத்தின் இனிமையோ?
விளையாட்டின் தொடக்க முயற்சியோ?
விருப்பத்தை விடுத்துவர பயிற்சியோ?
கோபால பிரியனின் முனைப்போ?
கோபாலா! உன்திருவடி அணைப்போ?
- ஹரிசரண்
Comments
Post a Comment