ஏனைய்யா...... ?
ஏனைய்யா எனை உன்னை நோக்கி
ஏங்கும் படியாய் செய்கின்றாயே....?
வீணைய்யா இந்த வாழ்க்கை பெருங்கடல்
வீட்டினை அளித்தெனை அழைப்பாயோ...?
உனையே எண்ணி உறுகிடும் என்னை
உந்தன் நினைவில் நினைப்பாயா?
இணையே இல்லா உன் திருவடியில்
இளைப்பாரவே இடம் தருவாயோ?...
முறையே உந்தன் இருப்பிடம் சேரும்
முறையை எனக்குள் பெருக்கிடுவாயோ?
இறையாய் நிற்கும் பரம்பொருளே என்பால்
இரக்கங் கொண்டு இசைந்திடுவாயோ?
அலைகள் சூழ்கரு மாணிக்கமே உன்
அன்பை என்மேல் பொழிந்திடுவாயோ..?
கலைக ளனைத்தும் கொண்டவனே இந்த
கலியிலிருந் தெனை மீட்டெடுப்பாயோ?
கோபியர் சூழிடைக் காவலனே அருங்
கோவினத்தை சிறிது கண்டிடுவாயோ?
கோபியர் மட்டுமே உனக்குறவா இது
கோபால பிரியனின் மனகுறைவே....
- ஹரிசரண்
ஏனைய்யா எனை உன்னை நோக்கி
ஏங்கும் படியாய் செய்கின்றாயே....?
வீணைய்யா இந்த வாழ்க்கை பெருங்கடல்
வீட்டினை அளித்தெனை அழைப்பாயோ...?
உனையே எண்ணி உறுகிடும் என்னை
உந்தன் நினைவில் நினைப்பாயா?
இணையே இல்லா உன் திருவடியில்
இளைப்பாரவே இடம் தருவாயோ?...
முறையே உந்தன் இருப்பிடம் சேரும்
முறையை எனக்குள் பெருக்கிடுவாயோ?
இறையாய் நிற்கும் பரம்பொருளே என்பால்
இரக்கங் கொண்டு இசைந்திடுவாயோ?
அலைகள் சூழ்கரு மாணிக்கமே உன்
அன்பை என்மேல் பொழிந்திடுவாயோ..?
கலைக ளனைத்தும் கொண்டவனே இந்த
கலியிலிருந் தெனை மீட்டெடுப்பாயோ?
கோபியர் சூழிடைக் காவலனே அருங்
கோவினத்தை சிறிது கண்டிடுவாயோ?
கோபியர் மட்டுமே உனக்குறவா இது
கோபால பிரியனின் மனகுறைவே....
- ஹரிசரண்
Comments
Post a Comment