"கண்ணில் காண்பதெல்லாம் கோபாலனே"
எனும் பாடலை (கஸ்தூரி திலகம் நாராயணம் மெட்டில்) அடியேன் எழுதி பாடியுள்ளேன். இஃது இராஜகோபாலஸ்வாமிக்கு சமர்ப்பணம்.பிழையிருந்தால் பொறுத்தருள்க.
கண்ணில் காண்ப தெல்லாம் கோபாலனே
மண்ணில் பிறப்ப தெல்லாம் கோபாலனே
எண்ணில் அடங்காததும் கோபாலனே
பண்ணில் மயங்கு வதும் கோபாலனே
விண்ணில் வண்ணம் அந்த கோபாலனே
உண்ணில் வர மளிப்பான் கோபாலனே
கண்ணில் காண்ப தெல்லாம்....
உன்னி லிருப்ப வனும் கோபாலனே
என்னி லொளிர்ப வனும் கோபாலனே
தன்னி கரற்ற வனும் கோபாலனே
கன்னி அவள் மனதில் கோபாலனே
கண்ணில் காண்ப தெல்லாம்....
நல்லதும் தீயதும் கோபாலனே
கல்லதும் மண்ணதும் கோபாலனே
உள்ளதும் இல்லதும் கோபாலனே
பள்ளதும் கள்ளதும் கோபாலனே
கண்ணில் காண்ப தெல்லாம்....
உன்னை காப்பவனும் கோபாலனே
என்னை ஆள்பவனும் கோபாலனே
மன்னை மன்னனவன் கோபாலனே
தன்னை தருபவனும் கோபாலனே
கண்ணில் காண்ப தெல்லாம்....
( குறிப்பு:-
உண்ணில் - உண் + இல் விரதமாக இருந்தால் வரமளிப்பவன்
பள்ளதும் - இசைவகை (பள்ளு)
கள்ளதும் - பனமரத்தின் கள் போன்று போதையானவன்
என்று பொருள் கொள்க.)
எனும் பாடலை (கஸ்தூரி திலகம் நாராயணம் மெட்டில்) அடியேன் எழுதி பாடியுள்ளேன். இஃது இராஜகோபாலஸ்வாமிக்கு சமர்ப்பணம்.பிழையிருந்தால் பொறுத்தருள்க.
கண்ணில் காண்ப தெல்லாம் கோபாலனே
மண்ணில் பிறப்ப தெல்லாம் கோபாலனே
எண்ணில் அடங்காததும் கோபாலனே
பண்ணில் மயங்கு வதும் கோபாலனே
விண்ணில் வண்ணம் அந்த கோபாலனே
உண்ணில் வர மளிப்பான் கோபாலனே
கண்ணில் காண்ப தெல்லாம்....
உன்னி லிருப்ப வனும் கோபாலனே
என்னி லொளிர்ப வனும் கோபாலனே
தன்னி கரற்ற வனும் கோபாலனே
கன்னி அவள் மனதில் கோபாலனே
கண்ணில் காண்ப தெல்லாம்....
நல்லதும் தீயதும் கோபாலனே
கல்லதும் மண்ணதும் கோபாலனே
உள்ளதும் இல்லதும் கோபாலனே
பள்ளதும் கள்ளதும் கோபாலனே
கண்ணில் காண்ப தெல்லாம்....
உன்னை காப்பவனும் கோபாலனே
என்னை ஆள்பவனும் கோபாலனே
மன்னை மன்னனவன் கோபாலனே
தன்னை தருபவனும் கோபாலனே
கண்ணில் காண்ப தெல்லாம்....
( குறிப்பு:-
உண்ணில் - உண் + இல் விரதமாக இருந்தால் வரமளிப்பவன்
பள்ளதும் - இசைவகை (பள்ளு)
கள்ளதும் - பனமரத்தின் கள் போன்று போதையானவன்
என்று பொருள் கொள்க.)

Comments
Post a Comment