"உலகளந்த மாயா." எனும் பாடலை (மாடு மேய்க்கும் கண்ணே ! ) மெட்டில் எழுதி பாடியுள்ளேன். இது இராதைக்கும் கண்ணனுக்கும் இடையே உள்ள உரையாடலாக வடிவமைத்துள்ளேன்.பிழையிருப்பின் பொறுத்தருள்க.
உல களந்த மாயா
உன் மேலெனக்கு நோயா
பவள மணிச்சிறு வாயை
பள்ளி யறையில் கண்டு
பசி யறியேன் தூக்கம் அது மறியேன்
மாயவனே !
(உலகளந்த) .....
நான் மட்டும் விதிவிலக்கா
நாழி யும்உனை மறவேன்
நாடி யேநான் வரவே
நாணி டவே நீ வருவாய்
என் மார்பில் வாழும் வல்லி
என் மனதில் பூத்த அல்லி
கார் முகம் கண்டுவிட்டால்
காதல் தோன்றி விடும்
காமமிது இல்லை யடா
கார் குழலன் மாயமடா
(உலகளந்த ....)
கள்ளம் எதுவு மில்லை
கபடம் நான் அறியேன்
கனிவாய்ச் செல்வி அவள்
கண்ணனையே கட்டி விட்டாள்
(என் மார்பில்...)
மன மென்றும் உன்னருகில்
மயங்கியே சுற்று தடா
மரகத திரு வடியில்
மண்டி யிட்டு ஏங்குதடா
(உலகளந்த....)
மாமன் மகளே உன்
மால வனும் உந்தன்
மாயை யில் சிக்குண்டேன்
மாயா மலர் விழியே !
(என் மார்பில் ....)
உல களந்த மாயா
உன் மேலெனக்கு நோயா
பவள மணிச்சிறு வாயை
பள்ளி யறையில் கண்டு
பசி யறியேன் தூக்கம் அது மறியேன்
மாயவனே !
(உலகளந்த) .....
நான் மட்டும் விதிவிலக்கா
நாழி யும்உனை மறவேன்
நாடி யேநான் வரவே
நாணி டவே நீ வருவாய்
என் மார்பில் வாழும் வல்லி
என் மனதில் பூத்த அல்லி
கார் முகம் கண்டுவிட்டால்
காதல் தோன்றி விடும்
காமமிது இல்லை யடா
கார் குழலன் மாயமடா
(உலகளந்த ....)
கள்ளம் எதுவு மில்லை
கபடம் நான் அறியேன்
கனிவாய்ச் செல்வி அவள்
கண்ணனையே கட்டி விட்டாள்
(என் மார்பில்...)
மன மென்றும் உன்னருகில்
மயங்கியே சுற்று தடா
மரகத திரு வடியில்
மண்டி யிட்டு ஏங்குதடா
(உலகளந்த....)
மாமன் மகளே உன்
மால வனும் உந்தன்
மாயை யில் சிக்குண்டேன்
மாயா மலர் விழியே !
(என் மார்பில் ....)


Comments
Post a Comment