ஸ்ரீ செம்பகேசனே ...... எனும் பாடலை (ஸ்ரீ ரங்கநாதனே.... மெட்டில்) அடியேன் எழுதி பாடியுள்ளேன். இப்பாடல் மன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபாலஸ்வாமிக்கு சமர்ப்பணம். பிழையிருப்பின் பொருத்தருள்க...

 ஸ்ரீ செம்பகேசனே
திருமன்னை வாசனே
பசு கன்றுகள் மேய்க்கும் கோபாலனே

பொற்கோல் ஒரு இன்பம்
திருமுகம் மறு இன்பம்
திருவடியதும் இன்பம்
திருவுரு பேரின்பம்
                                     (ஸ்ரீ செம்பகேசனே ....)

திருமாமகள் பதக்கமும்
சிறுகுழந்தை அணிகளும்
அன்றாடம் தரிக்கின்ற கோபாலனே

கன்றுகள் மேய்க்கின்றாய்
உயிர்களை காக்கின்றாய்
உளம்தனை பறிக்கின்றாய்
மாயங்கள் செய்கின்றாய்
                                     (ஸ்ரீ செம்பகேசனே ....)

 தித்திக்கும் செவ்விதழ்
 நெழிவோடு பொன்னிடை
 ஒய்யாரமாய் நிற்கும் கோபாலனே

 மதியில் ஒளியாவாய்
 கதியில் அரணாவாய்
 சதியில் தீயாவாய்
 எந்தன் உயிராவாய்
                                      (ஸ்ரீ செம்பகேசனே ....)

வானெட்டும் கோபுரம்
ஒப்பில்லா திருக்குளம்
அழகான மதிலோடு கோபாலனே

முப்பத்திரு சேவை
அழகாய் காண்பித்தாய்
ஆயன் திருக்கோலம்
தினமும் ஏற்கின்றாய்
                                 (ஸ்ரீ செம்பகேசனே ....)

கார் வண்ண மேனியும்
கண்ணாடி கன்னமும்
துகிலோடு மனக்கின்ற கோபாலனே

உன் உருவேயன்றி
வேறொரு நினைப்புண்டோ
நீயே கதியென்பேன்
எனையே ஆட்கொள்வாய்
                               (ஸ்ரீ செம்பகேசனே ....)

குழலூதும் பூவிதழ்
அணைக்கின்ற திருவடி
அடியாரைக் காக்கின்ற கோபாலனே

உனக்கே பணி செய்வேன்
உனையே வலம் செய்வேன்
இனி நான் என் செய்வேன்
எனையே ஆட்செய்வாய்
                               (ஸ்ரீ செம்பகேசனே ....)

 ஆழ்வாரின் பிரியனே
வீழ்வாரின் அபயனே
வாழ்வாரின் காரணா கோபாலனே

உனையே விழிகானும்
உனையே நா கூறும்
உனையே மனமெண்ணும்
எனையே ஆட்கொள்வாய்
                                     (ஸ்ரீ செம்பகேசனே ....)

Comments

Popular posts from this blog