தென் துவாரகை மன்னனே.....
(அம்மே நாராயணா மெட்டில்)

தென் துவாரகை மன்னனே
ருக்மினியின் கண்ணனே
பாமாப் பிரிய சுந்தரா
இராஜ கோபாலனே (2)

கோபிலாதி முனிவர்க்கு வரமளித்து அருளிளாய்
ஐஐந்து மேழு சேவைதனை காண்பித்து மகிழ்த்தினாய்                  (தென் துவாரகை ....)

 செண்பகச் சோலையிலே குடிகொண்டு விளங்கினாய்
செங்கமலவல்லியின் கரம் பிடித்து அருளினாய்                    (தென் துவாரகை ....)

நாற்கரமும் ஆயுதங்கள் ஏந்தி அபயம் தந்திடும்
பரவாசு தேவனாய் காட்சி தரும் கண்ணனே
                                           (தென் துவாரகை ....)

ஸ்வாயம்ப விமானத்தின் கீழருளும் அழகனே
மாடு மேய்க்கும் கோலத்திலே கண் கவரும் மாயனே                             (தென் துவாரகை ....)

புன்சிரிப்பில் உலகோரை கொள்ளை கொள்ளும் அற்புதா
கோபியர்கள் மனம் கவரும் கார் வண்ண அச்சுதா                              (தென் துவாரகை ....)

வருடம் முழுதும் உத்ஸவங்கள் கண்டருளும் ஐயனே
நளினமாக நின்றருளும் குழலூதும் இடையனே                        (தென் துவாரகை ....)

பூதகியின் பாலருந்தி உயிரையும் உறிஞ்சினாய்
பவளச் செவ்வாய் தனிலே உலகத்தை காட்டினாய்                        (தென் துவாரகை ....)

இந்திரனின் கோபத்தால் அல்லற்பட்ட உயிர்களை
கோவர்த்தன கிரியை தூக்கி அபயமளித்து உதவினாய்                        (தென் துவாரகை ....)

ஆற்றில் விடம் கக்கி பல  உயிர்களை மாய்த்திட்ட
காளிங்க நாகத்தை ஆடியே அடக்கினாய்
                                           (தென் துவாரகை ....)

கோபிகையின் கூட்டத்தோடு இராஜக்ரீடை செய்தவன்
ஹரித்ரா நதியிலே ஜலக்ரீடை செய்தவன்
                                            (தென் துவாரகை ....)

பார்த்தனின் ஐயம் தீர்க்க உலகுக்கே உரைத்தவன்
கீதையின் சொற்களால் தர்மத்தை காத்தவன்
                                           (தென் துவாரகை ....)

வீடு வீடாய் சென்று கடைந்த வெண்ணெயை களவாடுவான்
வெண்ணெய் தாழி சேவையிலே வெண்ணெய் குழியலாடுவான்
                                            (தென் துவாரகை ....)

சிறுவரோடு சேர்ந்து செய்த அட்டகாசம் பலவிதம்
பக்திக்கு மனமிரங்கிய அற்புதமும் பலவிதம்
                                             (தென் துவாரகை ....)

சிறுகுழந்தை வடிவிலே இத்துனை கம்பீரமா
சிறு புன்னகை முகத்திலே இத்துனை வீரமா
                                             (தென் துவாரகை ....)

மோஹனா ரூபத்தில் கட்டழகும் கன்னமும்
ஆட ஆட தானும் ஆடும் பொன்சடையும் குஞ்சமும்                           (தென் துவாரகை ....)

ஏக வஸ்த்ரதாரியாய் விளங்கிடும் குழந்தையே
ஏகாந்தமாய் அருளும் நாராயண மூர்த்தியே
                                            (தென் துவாரகை ....)

சாவியு மறைஞாண் கயிறும் உருண்டிடும் பொன்னிடை
குண்டலமும் பூத்தோடும் மின்னிடும் பொன்செவி                     (தென் துவாரகை ....)

தீயவர்களை தண்டித்து தர்மத்தை நிலைநாட்டவே
செண்பகரண்யத்தில் அவதரித்த இராஜனே

                                    (தென் துவாரகை ....) (2)

Comments

Popular posts from this blog